வான் தமிழ்நாடு
தனி விமானம் வாங்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. அதற்கான வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. எந்த ஒரு மாநில அரசும் தனி விமானம் வாங்க வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசின் அனுமதி அவசியம். அனுமதி தர முடியாது என மத்திய அரசு மறுக்கவும் முடியாது. 16 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய சிறிய விமானத்தை வாங்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.
தனி விமானம் இருந்தால் நினைத்த நேரத்தில் டில்லிக்கு வந்து போகலாம். தமிழகத்தின் எந்த பகுதிக்கும், பக்கத்து மாநிலங்களுக்கும் உடனடியாக செல்லலாம். ஏர் இந்தியா அல்லது தனியார் விமான சேவைக்காகவோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தின் தென்பகுதியில் வெள்ள சேதம் உட்பட பல இயற்கை சீற்றங்களை உடனடியாக சென்று பார்க்கவும் இந்த தனி விமானம் உதவும். இது தற்போது கிடைத்த செய்தி.
அரசியல்வாதிகளுக்கு எப்படி விமான பயணம் முக்கியமோ அதுபோல் பொதுமக்களுக்கும் விமான பயணம் முக்கியம் தமிழ்நாட்டை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரிட்டனின் விமான போக்குவரத்து தமிழ்நாட்டை விட குறைந்த பட்சம் ஒரு ஏழு ,எட்டு மடங்கு அல்லது பத்து மடங்குக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது .அவ்வளவு ஏன் துபாய் என்ற ஒரு சிறு நகரம், துபாய் தனி மாகாணம் அந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை வெறும் 26 லட்சம் , விமானம் பயணிகள் கையாளும் திறன் 8 கோடிக்கு மேல். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட சென்னையின் பயணிகள் கையாளும் திறன் வெறும் இரண்டரை கோடி மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை சேர்த்தாலும் மூன்றரை கோடிக்கு மேல் பயணிகள் கையாளப்படுவது இல்லை .அப்படி பார்த்தால் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதற்கு விமான நிலையங்களின் குறைபாடும் ஒரு காரணம்.வான் தமிழ்நாடு என்ற நிறுவனத்தை கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள வானூர்தி நிலையங்களில் நிறைய விமானங்களை இயக்கி இதன் மூலம் விரிவாக்கம் போன்ற பணிகளை கொண்டு வந்து நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற முடியும் என்பதே என்னுடைய கருத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக