13.2021 தமிழக அமைச்சரவை ஒரு பார்வை:

[தமிழக அமைச்சரவை ஒரு பார்வை: 

பொதுவாக தமிழக அமைச்சரவை சமுக நீதி அடிப்படையில் உள்ளதா என பார்ப்பார்கள். ஆனால் இந்த அமைச்சரவை நிலவியல் சமனிலை அற்று கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

காவிரி பாசன பகுதிகளுக்கு அமைச்சர் இல்லை:

காவிரி பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களை புறக்கணித்து இருப்பது கண்டனங்கள் வர செயதிருக்கிறது.மயிலாடுதுறைக்கும் வழங்கப்படவில்லை என்று நினைக்கிறேன். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டது என்பதால் இரண்டு அமைச்சர் பதவிகளாவது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஸ்டாலின் மற்றும் கருணாநிதி பாசன மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் கொடுக்கப்படவில்லை என்பதும் சரியான காரணமில்லை.நான் அடிக்கடி இந்த மாவட்டங்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.தமிழ் நாட்டிலேயே மனித வளம் குறைவான மக்கள் விளிம்பு நிலையில் வாழும் மாவட்டங்களாக இவை உள்ளன என்பதே உண்மை.

சமீபத்தில் எற்பட்ட புயலில் நிவாரணம் அளிக்க வந்த வண்டியை துரத்தி கொண்டும் அழுது கொண்டும் ஓடியது இந்த மாவட்டங்களில் தான்.இதை பார்த்த தமிழ் தேசியவாதிகள் பலர் நெஞ்சம் பதறுவதாக கருத்து வெளியிட்டு இருந்தார்கள்.

ஆனால் இந்த பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருபவர்கள் நெஞ்சம் பதற மாட்டார்கள். காரணம் மக்கள் குப்பைகள் போல சாலை ஓரத்தில் படுத்து கிடக்கிறார்கள். நாகப்பட்டினம் பேருந்து நிலையம் கூரை தண்ணீர்  ஒழுகி இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. மற்றும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் ஒருநிமிடம் கூட நிற்க முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடுகளுடன் உள்ளது.

இத்தனைக்கும் வெளிமாநில, வெளிநாட்டு(இலங்கை)மக்கள் அதிகம் வந்து போகும் வேளாங்கண்ணி இங்கு இருப்பது தமிழ் நாட்டின் மீதான நல்ல பிம்பத்தை சுக்கு நூறாக உடைக்க வழி செய்கிறது. தஞ்சை திருவாரூர் பேருந்து நிலையங்கள் தென் மாவட்ட இரண்டாம் நிலை பேருந்து நிலையம் அளவுக்கு கூட  தேறவில்லை.இந்த மாவட்ட மக்களிடம் பேசிய போது கடன் கட்ட முடியாமல் பண்ணைகளில் ஆண்டு கணக்கில் வேலைசெய்யும் முறையும் இருப்பதாக கூறுகிறார்கள்.

சென்னையில் வீடில்லாமல் வாழ்பவர்களில் நிறைய பேர் இந்த பகுதிகளில் இருந்து பண்ணை அடிமைத்தனம் தாங்க முடியாது வந்தவர்கள் என்று சில எழுத்தாளர்கள் எழுதி இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் தமிழ்நாட்டை சுமார் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தவர் இந்த பாசன  பகுதியில் இருந்து வந்தவர்.அப்படியும் பெரிய முன்னேற்றம் இல்லை.எனவே  கண்டிப்பாக அந்த பகுதிக்கு  அமைச்சர் பதவி வழஙகி மாநில அரசும் தனிக்கவனம் எடுத்து முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.

சுமார் 16 ஆண்டுகள் ஆட்சியை பின்னால் இருந்து இயக்கி முதல்வர் பதவி யை நூலிழையில் தவறவிட்டவர் இந்த பகுதியை சார்ந்தவர்தான், அவரின் உறவினரான தற்பொழுது தனிக்கட்சி நடத்துபவரின் அம்மா கட்சி கூட இங்கே வலி மையாக உள்ளது. சோதனை யான காலகடஙகளில் கூட தஞ்சை ,நாகை நாடாளுமன்ற தொகுதி களில் திமுகவின் வேட்பாளர்கள் அடுத்து அடுத்து வென்று வந்துள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் காவிரி பாசன பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.இவர்கள் வளர்ச்சிப் பணிகள் செயதிருந்தால் பாசன
பகுதிகள் இவ்வளவு மோசமான நிலையில் இருந்து இருக்காது.மக்களும் எளிய பாமர மக்களாக இருப்பதாலோ என்னவோ இவர்களிடம் வலியுறுத்திகேட்க வில்லை போல தோன்றுகிறது. போர்கால ஆடிப்படையில் கடைமடைப் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டியது அவசியம்.

ஒரே மாவட்டத்தில் இரு அமைச்சர்கள்:

 அதேபோல் தூத்துக்குடி போன்ற சில மாவட்டங்களில் இரு அமைச்சர் பதவி கொடுக்கப் பட்டிருக்கிறது.இதனால் மற்ற சில மாவட்டங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்காமல் போயிருக்கிறது.

இந்த அணுகுமுறை ஜெயலலிதாவிடம் மட்டுமே காணப்படும்.இப்போது ஸ்டாலின் அதை விட ஒருபடி மேல போய் எடுத்த நடவடிக்கையால் காவிரி பாசன பகுதி களில் மூன்று மாவட்ட ங்கள் அமைச்சர் பதவி கிடைக்காமல் போயுள்ளது.

 2001 தேர்தலில் செயலலிதா யாரும் வழங்காத அதிசயமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கி இருந்தார்.பின்னர் கொஞ்ச நாளில் இராசேந்திர பிரசாத்தை தூக்கி விட்டு தளவாய் சுந்தரம் மட்டுமே அமைச்சர் பதவியில் தொடரவிட்டார்.இப்போது உள்ள அமைச்சரவையைப் பார்க்கும் போது 2001 ஆண்டு ஞாபகம் வருகிறது.

மீன்வளத்துறை அமைச்சர்:

மற்றபடி நீண்ட நாட்களுக்கு பிறகு மீனவரல்லாத ஒருவர் அமைச்சராக்கப் பட்டிருக்கிறார்.ஆனால் மீனவர் ஒருவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்று உணர்த்துவதற்காக மா.சுப்ரமணியன் மீனவர் என்ற தகவலை கசிய விட்டிருக்கிறார்கள்.

தமிழக அரசியலை 25 ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து வரும் நான் மா.சு வை 20 ஆண்டுகளாக அறிவேன் என்றாலும். அவர் மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர் என்று அமைச்சர் பதவி ஏற்ற பிறகுதான் தெரியும்.

அனிதா ராதா கிருசுணன் மீனவர் இல்லை என்றாலும் கொரானா காலத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நீர் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டு மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டிருக்கிறார் வாழ்த்துக்கள்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்:

ஆதி திராவிடர் அமைச்சர் பதவி ஆதி திராவிடர் ஒருவருக்கு வழங்கப் பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை மட்டும்தான் அவர்களுக்கு உகந்ததா?வேறு முதன்மை துறைகள் கொடுக்கக் கூடாதா என்ற குரல்களை சில இடங்களில் இருந்து கேட்க முடிகிறது.

நிதி அமைச்சர்:

 மன்மோகன் சிங் நிதி அமைச்சர் ஆக பணி புரிந்து பெயர் எடுத்துதான் பிரதமராக வந்தார். ஆனால் தமிழக அளவில் நிதி அமைச்சர் பதவி என்பது நிதி நிலை அறிக்கை வாசிக்க மட்டும் என்ற அளவில் சுருங்கி விட்டது. நன்றாக படித்த நிதித்துறையில் பணி அனுபவமும் உள்ள திரு.தியாகவேல் ராஜன் நிதி அமைச்சர் ஆக்கப் பட்டு இருப்தாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அவரும் முன்பு இருந்த அதிமுக ஆட்சியாளர்களிடம் கணக்கு கேட்டு கலக்கி இருக்கிறார். எதாவது ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய போகிறாரா பார்ப்போம். தமிழக அரசின் கடன் ஐந்து லட்சம் கோடி தாண்டிய நிலையில் கடனை குறைப்பாரா?அடைப்பாரா ?என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. அரசின் கடன்களில் பெரும் பகுதி போக்குவரத்து, மின்சார துறையின் ஊழல் கலந்த நிர்வாக சீர்கேடுகளால் வந்தது. மேலும் தரமற்றஇலவச பொருட்கள் வழங்கியதில் ஏற்பட்ட ஊழலும் ஒரு காரணம்

 இவையனைத்தும் வேறு வேறு துறைகளின் கீழ் உள்ளன.நிதி அமைச்சர் முதலமைச்சர் அதாரவுடன் போக்குவரத்து, மின் துறை, மற்றத்துறை அமைச்சர்களுடன் பேசி ஊழலை குறைத்து நிர்வாக சீர்திருத்தம் செய்து மின்சாரம் போக்குவரத்து துறைகளை லாபத்தில் இயங்க வைப்பதன் மூலம் கடன்களை குறைக்க, அடைக்க முடியும், என்ன நடக்க போகிறது என பார்ப்போம்.
-தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு