14.2021 தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-1:
மின்சார துறை:
மின்துறை அமைச்சராக திமுகவினரால் முன்பு ஊழல்வாதி என்று குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி பொறுப்பு ஏற்றிருக்கிறார்.ஏற்கனவே அறப்போர் இயக்கம் போன்றவை முந்தைய அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி மினதுறையில் ஊழல் நடந்து உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. நிலக்கரி இறக்குமதி, தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவது போன்ற செயல்களின் மூலம் பெருமளவில் ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சீனாவில் அறுகளில் இருந்து நிறைய மின்சாரம் தயாரிக்கிறார்கள் இதன் மூலம் நிலக்கரி பயன்பாடு குறைந்து சுற்று சூழல் பாதிப்பும் குறைகிறது. பெரும்பாலும் நீரேற்று முறைகள்(pumped storage) ,
ஓடும் ஆற்றை மறித்து (Run off River) திட்டங்களின் மூலம் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது.
சீனாவில் ஒருமுறை அமில மழை கூட பெய்தது. அதன் பின்னர் அவர்கள் விழித்து கொண்டு நீர் மின்சாரம் நோக்கி போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன். சீனர்கள் ஒரு அணையில் சுமார் 5600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கிறார்கள் இதனால் பூமி சுற்றுவது கூட சில நிமிடங்கள் தாமதமாகி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அந்ந அளவுக்கு இல்லாவிட்டால் கூட தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அணைகளில் இருந்தும் மேற்கூறிய இரு முறைகளில் 500+500 மெகாவாட் என 38 மாவட்டங்களில் உள்ள 40 அணைகளை/ஆறுகளை தேர்வு செய்து சுமார் 40000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செயதால் ஒரு மெகா வாட்டுக்கு 7 ரூபாய் என 280000 கோடி செலவாகும்,நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதில் 10 விழுக்காடு பங்கு(commission) வாங்கினால் 28000 கோடி கிடைக்கும்.
மேலும் முகவை மாவட்டத்தில் அதானியின் 650 மெ.வாட்
கதிரொளி மின் உற்பத்தி நிலையம் உள்ளது.மேலும் சென்னை போன்ற நகரங்களில் தற்போது வீடு மற்றும்
தொழிற்சாலை மேற்கூரைகளில் கதிரொளி தகடுகள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகின்றனர். அப்படி பார்த்தால் முகவை மாவட்டத்திலேயே 650 மெகா வாட் அதானி மின் நிலயத்துடன் கூரைகளில் கதிரொளி மின் உற்பத்தி செய்து சுமார் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
அப்படி பார்த்தால் 38 மாவட்டங்களில் 38000 மெகா வாட் கதிரொளி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஒரு மெக வாட் 7 ரூபாய் விதமாக சுமார் 256000 கோடி செலவாகும். நிறைய பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இந்த மின் உற்பத்தி மற்றும் கதிரொளி தகடுகள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலம் இருபது லட்சம் பேருக்கு நேரடியாக, மறைமுகமாகவும் வேலை வழங்க முடியும்.
10% பங்கு(commission) 25600 கோடி கிடைக்கும்.
இது போக காற்றாலை மின்சாரம் முலம் தமிழ் நாட்டில் மேலும் 8000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.மற்றும் தற்போது செய்ய பட்டு வரும் கடல்மேல் (off-shore) காற்றாலைகளை மீனவர்களை பாதிக்காது அமைத்து சுமார் 8000 மெகாவாட் நிறுவ முடியும். மொத்தமாக காற்றாலை மூலம் 16000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு சுமார் 115000 கோடி முதலீடு தேவை.இதன் மூலம் சுமார் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.இதன் மூலம் 10% பங்காக (commission) 11500 கோடி கிடைக்கும்.
மேலும் தற்போது கடல் அலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் Tidal wave எனும் முறை வந்துள்ளது.இதன் மூலம் மீனவர்களை பாதிக்காதவாறு 10 மாவட்டங்களுக்கு 1000 மெகாவாட் என சுமார் 10000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.சுமார் 70000 கோடி செலவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். இதன் மூலமாக சுமார் 3 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள்.பங்காக(commission) 7000 கோடி வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக