17.மக்கள் நீதி மையத்தின் எதிர்காலம்

மக்கள் 2-3 இடத்துக்கு போட்டி போடும் கட்சிகள் தனியாக நிற்கும் தைரியத்தை பார்த்தே 6-10 % வரை வாக்கு அளிக்கிறார்கள்.இந்த தேர்தலில் போக்கிடம் இல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததே தோல்விக்கு காரணம்.கமல் கட்சி தனித்து போட்டி போட்டு இருந்தால் ,கருத்து கணிப்புகள் கூறிய படி 8% வரை வாக்குகள் வாங்கி இருப்பார்கள்.ஆனால் சந்தர்பவாத கூட்டணி மநிம வாக்கு வங்கியை 3% குறைவாக கொண்டு போய்விட்டது. கமல்ஹாசன் கொஞ்சம் பொறுமையாக களையெடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம்.குறைந்த வாக்கு வாங்கிய மாவட்ட பொறுப்பாளர்களை நீக்குவதிலிருந்து நடவடிக்கையை தொடங்கி இருக்கலாம்.ஆனால் எல்லா நிர்வாகிகளையும் பதவி விலக சொன்னது சர்வாதிகார போக்குதான். எல்லாரும் கமல் கட்சியை கலைத்து விட்டு போய்விவார் என்ற போதும் நான் நம்பவில்லை. கமல் சுவை கண்ட பூனை தலைவராக,அரசியல்வாதியாக தனக்கு கிடைத்த மரியாதை, கவனிப்பை அவ்வளவு எளிதாக விட்டு விட்டு போய்விடமாட்டார் என்று கணித்தேன்.கமல் என் கணிப்பை மெய்பித்து இருக்கிறார். கமல் கட்சி அரசியல் உள்ள வரை திமுக ,அதிமுக போல இருக்குமா அல்லது மதிமுக போன்று இருக்குமா என்பதை கமல் அடுத்தடுத்து எடுக்கப் போகும் நடவடிக்கைகள்தான் முடிவு செய்யும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு