11.2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சிறந்தது எது ஒரு பார்வை (மெட்ரோ ரயில் பாகம் இரண்டு)

 இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பின் தங்க காரணம் இந்தியாவின் நத்தை வேக ரயில் வளர்ச்சியே ஆகும்.1989 வரை இந்தியாவின் பொருளாதாரம் ஜெர்மனியின் பொருளாதாரமும்
 ஒரே அளவில் இருந்தாலும் 2000 ல் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) சுமார் 3330 கோடி அமெரிக்க டாலர்கள்,இந்தியவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 431 கோடி அமெரிக்க டாலர்கள்.

சுமார் 11 ஆண்டுகளில் இவ்வளவு பொருளாதார வளர்ச்சி வித்தியாசம் வரக்காரணம் இரண்டாவது உலகப்போருக்கு பிறகு ஜெர்மனி மற்றும் மேற்கு  யூராப்பா முழுவதும் செய்யப்பட்ட உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சிப் பணிகளே காரணம். குறிப்பாக ரயில்வே துறையில் ஏற்பட்ட வளர்ச்சியே காரணம் ஆகும்.1945 ல் குதிரை வேகத்தில் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் வானூர்தி வேகமெடுத்தே ஜெர்மனி உட்பட மேலை நாடுகளின் அசரவளர்சிக்கு காரணம்.1994-95 ஆம் ஆண்டுகளிலேயே ஜெர்மனியை பிரான்சு வழியாக இங்கிலாண்டுடன் இணைக்கும் கடலடி ரயில் பாதையை திறந்து விட்டார்கள்.

அப்போது எங்களுடைய ஆசிரியர் ஒருவர் அதைப் பற்றி வியந்து கூறினார். இது மாவீரன் நெப்போலியனின் கனவு திட்டம் என்றும் கூறினார். வலுவான கடற்படையை வைத்துக்கொண்டு தோற்காமல் தொந்தரவு கொடுத்த இங்கிலாந்தை பாலம் அமைத்து தோற்கடிக்க நெப்போலியன் நினைத்தது வியப்பில்லை.

 இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட ரயில் பாதைகளே காரணம் ஆகும். பருத்தி போன்ற பொருட்களை ஏற்றுமதி செய்ய அமைக்கப்பட்ட ரயில் பாதை என்று குற்றம்  சாட்ட பட்டாலும் பின்னாளில் பயணிகள் போக்குவரத்து ,உள்நாட்டு சரக்கு போக்குவரத்து என பரிணாம வளர்ச்சி அடைந்து பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலியது.ஆங்கில யேர் ஆட்சியில் மோசமான நிர்வாகத்தால் ஏற்பட்டட பஞ்சம் போன்ற தவறுகளுக்கு பாவமன்னிப்பாக பெறும் வித்தில் திகழ்ந்தது ரயில் தண்டவாளங்கள்தான்.

ரயில் தண்டவாளங்கள் இந்தியாவை ஒருங்கிணைந்ததோடு பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. இந்தியாவின் ரயில் திட்டங்கள் சுதந்திரத்துக்கு முன் இருந்த வேகத்திலே இருக்க யுராப்பாவின் ரயில் திட்டங்கள் வானூர்தி வேகத்தில் சென்று 5 லட்சம் வரையிலான மக்கள் தொகை கொண்ட நகரங்களளுக்கும் மெட்ரோ ரயில் கொண்டு வந்து விட்டார்கள்.

இந்தியாவில் சுமார் 1கோடிக்கு மேல் மக்கள் தொகை கொண்டு உள்ள சென்னை, மும்பை,கொல்கொத்தா,டெல்லி ,பெங்களூரு, கைதராபாத் போன்ற நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில்கள் உள்ளன.

கொச்சியிலும் சிறிய மெட்ரோ ரயில் செயல் பாட்டில் உள்ளது.30-60 லட்சம் வரை மக்கள் தொகைஉள்ள 4-5 நகர்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றது.2011மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இந்தியாவில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட 52 நகர்கள் உள்ளன. 
இந்த 52 நகர்களிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல் படுத்த பட்டிருந்தால் ,இந்தியவின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு எபபடி இருந்து இருக்கும்.

5லட்சம் மக்கள் தொகை கொண்ட சுமார் 100 நகர்கள் இந்தியாவில் இருக்கும். இந்த 100 நகர்களிலும் மெட்ரோ ரயில் இருந்திருந்தால் இந்தியா எப்படி இருந்தது இருக்கும். இந்தியர்கள் யாரும் வேலைத்தேடி மத்திய கிழக்கு, சிங்கப்பூர் மட்டுமல்ல அமெரிக்கா கூட செல்ல தேவை இருந்திருக்காது.

குறிப்பாக தமிழ்நாட்டிலேயே 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஆறு நகர்களில் மெட்ரோ ரயில் இருந்தால் எப்படி இருந்தது இருக்கும். இன்றைக்கு பெரும்பாலும் சென்னை, கோவை போன்ற நகர்களே வேலை வாய்ப்பு வழங்கும் நகர்களாக உள்ளன,10 லட்சம் மக்கள் தொகை கொண்ட 6 நகர்களிலும் மெட்ரோ ரயில் இருந்திருந்தால் சென்னை, கோவை போல மதுரை, திருச்சி, திருப்பூர், சேலம் நகர்களும் வேலை வாய்ப்பை அள்ளி வழங்கும் நகர்களாக இருந்து இருக்கும்.

 சுமார் 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட வேலூர், ஈரோடு, தூத்துக்குடி,நெல்லை போன்ற நகரங்களிலும் மெட்ரோ ரயில் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து தமிழ்நாடும் யூரோப்பா அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கும்.

இந்தியாவின் ரயில்வே அமைச்சர் கூட யுராப்பாவில் 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகர்களில் கூட மெட்ரோ ரயில் ஓடுவது பற்றி வியந்து கூறி இருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு