7.சாலை விபத்துகள்
இலங்கையில் 2006 ஆம் ஆண்டு அளவில் கிட்டத்தட்ட போர் நிறுத்தம் முடியும் நிலையில் இருந்த பொழுது 4ஆண்டு காலம் போர் நிறுத்தத்தால் என்ன பயன் ஏறபட்டது ,மீண்டும் நாடு போரை நோக்கித்தானே செல்கிறது என்ற கேழ்வி எழுபப்பட்டது.அப்போது நார்வே தலமையிலான போர் நிறுத்த குழுவினர் சொன்ன பதில் 4 ஆண்டு களில் எங்களால் 10000 உயிர்களை காப்பாற்ற முடிந்தது என்பதே.ஆனால் அதே ஆண்டு தமிழ்நாட்டில் சாலை விபத்துகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10000 ஐ தாண்டியது.பின்னர் 4-5 ஆண்டுகளில் ஓராண்டு சாலை விபத்து உயிரிழப்பு 17000 ஐ தாண்டி இந்தியாவிலே உயிரிழப்பில் முதன்மையான மாநில ங்களிலில் ஒனறாக மாறியது.ஆப்பொழுதுதான் நான் விபத்து தடுப்புக்கு தனி ஆமைச்சர்/அமைச்சரவை வேண்டும் என்று நினைத்தேன்.
இப்போது விளம்பரத்தில் பல்வேறு விபத்து தடுப்பு முன்னேற்ற புள்ளி விவரங்களை கொடுத்து இருக்கிறார்கள்.59% தடுத்து விட்டதாக கொடுத்து இருந்தாக நினைக்கிறேன்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூட தமிழ்நாட்டுக்கு விபத்து குறைப்புகாக பாராட்டு தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் பத்திரிகை செய்தி களை பார்க்கும் போது மனம் பதறுகிறது. குறைந்தது ஆண்டு க்கு 8000 பேராவது விபத்தில் உயிரிழக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால்தான் விபத்து தடுப்புக் கென்று தனி அமைச்சரவை வேண்டும் என்று சொன்னேன்.
விபத்து தடுப்புக்கென்று தனி அமைச்சர் இல்லை யெனினும், போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வைத்திருப்பதுடன் தனி அதிகாரிகள் அணியை வைத்து கையாளலாம்.அதாவது போக்குவரத்து மற்றும் விபத்து தடுப்பு அமைச்சர் என்று நியமித்து,போக்குவரத்து மட்டுமல்ல விபத்து தடுப்பும் தன்னுடைய அமைச்சரவை தான் என்று உணர வைக்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக