8.2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சிறந்தது எது ஒரு பார்வை (கச்சத்தீவு)

கச்சத்தீவு
2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையை நோக்குவதற்கு முன்பு பழைய தேர்தல் அறிக்கைகள்,வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் இந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளதா மறக்கப்பட்டுள்ளதா எனபதை பார்பதும் முக்கியம்.1998 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக கச்ச தீவை மீடபோம் என்ற வாக்குறுதி இடம்பெற்ற செய்தித்தாளைக் காட்டி நண்பன் ஒருவன் இது பொய்யான வாக்குறுதி என்று சொன்னான்.அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மத்திய அரசை ஆட்டிப்படைக்கும் சக்தியாக ஜெயலலிதா திகழ்ந்த போதும்அவர் கச்சத்தீவு மீட்பு தொடர்பான எந்த ஒரு கோரிக்கையும் வைக்க வில்லை.

 ஆனால் அப்போது இலங்கை அரசு கடும் சிக்கலில் இருந்தது.1971/72 ஆம் ஆண்டு ஐ.நா சபை வாக்கெடுப்பில் பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையை வாக்களிக்க வைக்க இந்தியா கச்சத்தீவை விட்டு கொடுத்தை விட அதிக சிக்கலில் இலங்கை இருந்தது.
அந்தநேரம் தேவை யில்லாத காரணங்களுக்கா வாஜ்பாய் அரசுக்கு மிரட்டல் விடுத்ததை விடுத்து கச்சத்தீவு பிரச்சினைக்காக மிரட்டல் விடுத்திருந்தால்,அந்த நேரம் விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்ததால் மொத்த இலங்கையின் வடகிழக்கு மாகாணத்தை இழப்பதை விட ஒரு சிறு தீவை இழப்பது பெரிய பிரச்சினை இல்லை என்ற முடிவுக்கு  வந்து இலங்கை விட்டு கொடுத்து இருக்கும். அந்த நேரம் போர் கடுமையாக நடந்த போது இலங்கை கடுமையான மனித உரிமைகள் மீறல் பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்கும்.கடும் போரில் ஆயுத தட்டு பாடு நிலவியதால் ஆயுதங்களுக்காகவும் இந்தியாவை சார்ந்து இருந்தது.

அந்த நேரத்தில் கச்சத்தீவை மீட்டு தராவிட்டால் மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பப்பெறுவேன் என  ஜெயலலிதா அறிவித்து இருந்தால் வேறு வழியில்லாமல் வாஜ்பாய் தலமையிலான மத்திய அரசும் தங்கள் அரசைக் காப்பாற்ற இலங்கை க்கு அழுத்தம் கொடுத்து இருக்கும். இலங்கையும் போர் குற்றசாட்டுகளிலிருந்து தப்பிக்க மற்றும் போர் ஆயுதங்கள் தேவைக்கா க பணிந்து இருக்கும்.ஜெயலலிதா வும் நீங்கா புகழ்பெற்றிருப்பார்.

அப்படி கச்சத்தீவை மத்திய அரசு மீட்க ஆர்வம் காட்டாமல் இருந்து ஜெயலலிதா மத்திய அரசை கவிழ்த்து இருந்தால் கச்சத்தீவை மீட்காததால் தான் மத்திய அரசை கவிழ்த்தோம் என்று பெருமையாக கூறி யிருக்கலாம். மக்களும் அடுத்தடுத்த தேர்தல் களில் அதிமுகவிற்கு வாக்கு அளித்து தில்லி க்கு அனுப்பி இருப்பார்கள். அதைச் செய்யாமல் வீணாக வாஜ்பாய் அரசக்கு தொல்லை கொடுத்து கவிழ்த்ததால் தான் பின்னர் மக்களும் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கொடுக்கவில்லை. ஒருவழியாக மக்கள் மன்னித்து 2014 தேர்தலில் 37 தொகுதி களில் வெற்றி கொடுத்த போதும் மத்தியில் தனிப்பெரும்பான்மை உள்ள அரசு அமைந்து, ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.

பின்னர் ஓராண்டில் 1999 ல் புலிகளால் சிங்கள ராணுவம் சுற்றி வளைக்கப் பட்டபோது இந்திய அரசின் மிரட்டல் காரணமாகவே புலிகள் பின் யாழ்ப்பாணத்தை கைப்பற்றாமல் பின் வாங்கினார்கள்.அந்த நேரத்தில் இலங்கை அரசு முழுக்க முழுக்க இந்திய அரசை நம்பி இருந்தது.அந்த வேளையில் 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த திமுக, பமக,மதிமுக போன்ற கட்சிகள் அழுத்தம் கொடுத்து இருந்தால் கூட பெருஞ்சிக்கலில் அகப்பட்டு இருந்த இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்டு இருக்க முடியும். ஆனால் அவர்களும் செய்ய வில்லை.
அதன் பிறகு ஒ.ப.ரவீந்திரநாத் நாடளுமன்றத்தில் கச்ச தீவை மீட்க வேண்டும் என்று பேசி பாராட்டுகளைப் பெற்றார்.திமுக 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததும் குரல் கொடுக்கவில்லை.
கச்ச தீவு என்றதும் திமுக ஆட்சியில் விட்டுக் கொடுக்கப் பட்டது நினைவுக்கு வருவதாலோ? என்ன வோ?திமுக அது பற்றி வாய் திறப்பது இல்லை. தனித் தமிழீழத்திற்கு குரல் கொடுக்கம் மதிமுகவும் தமிழக மீனவர்களின் வாழ்க்கை பிரச்சினையான கச்சத்தீவு பிரச்சினை பற்றி பெரிய அளவில் குரல் கொடுப்பதில்லை.

தமிழக பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் கச்ச தீவை மீட்க போவதாக படம் காட்டினார்கள்.ஆனால் மீட்க முடியவில்லை என்றாலும் சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக மீடபு நடவடிக்கை எடுத்த அரசு   என்பதால் மோடி அரசு க்கு பாராட்டுகள்.

இலங்கை சிறிய நாடு தானே என்பதால் மிரட்டி பணியவைத்து கச்சதீவை மீட்டு தமிழ் நாட்டில் கச்ச தீவு நாயகனாகலாம் என நினைத்து இருப்பார்கள். ஆனால் புலிகளை தோற்கடித்து சீனாவின் ஆதரவு இறுமாப்புடன் இருக்கும் இலங்கை யிடம் எடுபடாமல் போயிருக்கலாம்.

தொடர்ந்து முயற்சித்து வெற்றியடைய மோடி மற்றும் பசக அரசுக்கு வாழ்த்துக்கள். இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் வாக்கெடுப்பிலும் பஙகேற்காமல் புறக்கணித்தற்கு வாழ்த்துக்கள். இது வரை வந்த அரசுகள் ஆதரித்தே வந்ததுள் ளன.முதன் முறையாக மோடி அரசு புறக்கணித்து இருக்கிறது வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் தேர்தலுக்காக இப்படி செய்யததாக இருந்தாலும்,இதற்கு முன் வந்த அரசுகள்இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு  ஆதரவாகவே வாக்களித்து வந்த நிலையில் முதன் முறையாக மோடி அரசு வாக்கு அளிக்காமல் வெளிநடப்பு செய்து இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நடவடிக்கை இனி மேல் வரும் அரசுகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு அதரவளிக்க விடாமல் செய்து விடும். புதிதாக வரும் அரசு இலங்கை அரசுக்கு ஆதரவாக ஐ.நா மன்றத்தில் வாக்கு அளிக்க முயற்சிக்கும் போது தமிழ் நாட்டில் போராட்டம் வரும் மற்றும் பஜகவினர் நாங்கள் வாக்களிப்பை புறக்கணித்தோம் ,தற்போதய அரசு ஆதரவாக வாக்களிக்கிறது என்று பரப்புரை செய்யும் போது பிரச்சனை அரசியல் மயமாக்கப்பட்டு இனி மேல் எந்த அரசும் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு ஆதரவாக வாக்கு அளிக்க முடியாமல் போய் விடும்.

மேலும் தொடர்ந்து மத்திய அரசுகளை வலியுறுத்துவதன் மூலம் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு
எதிராக ஐ.நா மன்றத்தில் வாக்களிக்க வைக்க முடியும். 
2021 ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் வாக்குறுதியில் கச்சதீவு மீட்பு எஙகாவது ஓரத்தில் இடம் பெற்று இருக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன் இல்லை யெனினும் அவர்கள் மேடைகளில் முழங்குவார்கள்.காரணம் திமுக தான் கச்சதீவை விட்டுக் கொடுத்து என்று அவர்கள் மக்கள் மனதில் பதிய வைத்தே காரணம். அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெறவில்லை என்றால் கச்சதீவு மீட்பு நாம் தமிழர் தேர்தல் அறிக்கையில் மட்டுமே இடம் பெற்று இருக்க வாய்ப்பு உண்டு. இனிமேல் தமிழக அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் மத்திய அரசு அமையும் போது கச்ச தீவை மீட்க வலியுறுத்த வேண்டும் மத்திய அரசுகள் தட்டி கழித்தால் ஜெயலலிதா 1999 ல் மத்திய அரசை 13 மாதங்களில் கவிழ்த்தை போல கவிழக்க வேண்டும். ஆடசியில் அங்கம் வகிக்கும் கட்சி கள் இதை செய்ய தவறினாலும் எதிர் கட்சி கள் தொடர்ந்து போராடி இதை செய்ய வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு