9.2021ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் சிறந்தது எது ஒரு பார்வை (மெட்ரோ ரயில்)

2021 மெட்ரோ ரயில் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளில் திமுக வின் தேர்தல் வாக்கு றுதியே சிறந்தது என்றாலும் அதில் ஒரு தவறும் உள்ளது பார்போம்.
 திமுக தேர்தல் அறிக்கையில் கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மெட்ரோ ரயிலில் சேவை கொண்டு வருவோம் என தெரிவித்தார்கள் .

கோவை, மதுரை, திருச்சி, சேலம் மெட்ரோ ரயில் அறிவிப்புகளுக்கு காக பாராட்டுகள்.நெல்லை மெட்ரோ ரயிலில் உள்ள பிரச்சனையை பார்ப்போம்,மத்திய அரசின் அறிவிப்பின் படி 10 லட்சம் மக்கள் தொகை இருக்கும் நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வரமுடியும். தமிழ் நாட்டில் 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் சேலம். 
திமுகவின் தேர்தல் அறிக்கையில் திருப்பூர் விடுபட்டு திருநெல்வேலி சேர்க்கப் பட்டுள்ளது.2014 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் 10 லட்சத்திற்கு அதிகமாக ன மக்கள் தொகை கொண்ட நகர்களுக்கு நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகள், உட்கட்டமைப்பு வேலைகள் செய்ய போவதாக அறிவித்து இருந்தார்.
உடனே மலையாளிகள் மூளையை உபயோகித்து
சுமார் 3லட்சம் மக்கள் தொகையுள்ள கொல்லம் போன்ற நகரங்களை சுற்றி உள்ள பகுதிகளை எல்லாம் இணைத்து 10 லட்சம் மக்கள் என்று கணக்கு காட்டி நிதி பெற ப்பார்த்தார்கள்.ஆனால் JNRRU திட்டம் என்று நினைதக்கிறேன் புசுவாணமாகி வெறும் அறிவிப்போடு நின்றது. வளர்ச்சி பணிகள், உட்கட்டமைப்பு வேலைகள் ஒன்றும் நடைபெறவில்லை.

 இதை முன்னுதாரணமாகக் கொண்டு 10 லட்சத்திற்கு குறைவாக மக்கள் தொகைக் கொண்ட நெல்லை போன்ற நகரங்களில் கூட மெட்ரோ ரெயில் கொண்டு வரலாம் என்றாலும் 10 லட்சத்திற்கு அதிக மக்கள் தொகை கொண்ட திருப்பூர் விடுபட்டிருப்பது திமுகவிற்கு தமிழக நகர்கள் பற்றிய அறிவு குறைவுதான் எனபதையே காட்டுகிறது.

கருணாநிதி இருந்தால் இந்த தவற்றை திருத்தி திருப்பூர் மெட்ரோ தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற செய்து இருப்பார் என்று நினைக்கிறேன்.

அருகில் உள்ள பகுதிகளை இணைத்து நாகர்கோவில் ,வேலூர், ஈரோடு போன்ற நகரங்களின் மக்கள் தொகையை 10 லட்சமாக  உயர்த்தி மெட்ரோ ரயில் கொண்டு வரலாம் என்றாலும் அரசியல்வாதிகள் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை நீண்ட நாட்களாக இழுத்து அடித்து வரும் நிலையில் மதுரை,திருச்சி, சேலம் மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேறினாலே,தமிழ் நாட்டை அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கு அழைத்து செல்லும் எனபதில் ஐயமில்லை.

 நீணட நாட்களாக இழுத்து கிடந்த கோவை தகவல் தொழில் நுட்ப பூங்கா திட்டம் திமுக ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது. அது போல கோவை,மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் நகர்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வந்தால் திமுக வரலாற்று புகழ் பெறும்.தமிழ்நாட்டின் முக்கியமான உட்கட்டமைப்பு திட்டங்களை கொண்டு வந்தது நாங்கள்தான் என்று திமுக மார்தட்டி கொள்ளலாம்.

மேலும் மெட்ரோ ரயில் கிலோ மீட்டருக்கு 100 கோடி ,மேம்பால மெட்ரோ பாதை 200 கோடி,நிலத்தடி மெட்ரோ பாதை 400 கோடி செலவு பிடிக்க கூடியது. ஆனால் சென்னை புறநகர் ரயில் பாதை வெறும் 10-15 கோடியில் கிலோமீட்டருக்கு அமைக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயிலுக்கும்,புறநகர் ரயிலுக்கும் உள்ள வித்தியாசம் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகள்தான். எனவே சென்னை -மாமல்லபுரம், சென்னை-கடலூர் என ஏற்கனவே உள்ள புறநகர் ரயில்  நீட்டிப்பு திட்டங்களை செயல் படுத்த வேண்டும்.சென்னை பறக்கும் ரயில் திட்டம்  கூட 40-50 கோடிதான் கிலோமீட்டருக்கு செலவாகிறது. எனவே இந்த புறநகர், பறக்கும் ரயில் நீட்டிப்பு போக எஞ்சியுள்ள இடங்களில் தான் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல் படுத்த வேண்டும். 
அப்படி பார்த்தாலும் சென்னையில் 250 கிலோமீட்டருக்கு மேல் மெட்ரோ ரயிலில் சேவையை செயல் படுத்த வேண்டி வரும். இப்போது புதிதாக அறிவித்து இருக்கும் சுமார் 114 கிலோமீட்டருக்கான 84000 கோடி ரூபாய் மெட்ரோ ரெயில் திட்டம் கூட செலவு அதிகம் பிடிக்கும் என்பதால் கிலோமீட்டரை கொஞ்சம் குறைத்து தான் அறிவித்து இருக்கிறார்கள்.எனவேதான் மெட்ரோ ரயில் திட்டத்தோடு புறநகர் மற்றும் பறக்கும் ரயில் திட்டத்தையும் முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டும்.
[13/04, 8:41 am] 250654: மதுரை, திருச்சி, கோவையில் கூட புறநகர் ரயில்வேக்கான ரயில் தடங்கள் உள்ளன. தற்போதே குறைந்த அளவே முடிந்தாலும் ஒருசில புறநகர் சேவைகளாவது தொடங்க வேண்டும். அதன் பின் மூன்று வழி நான்கு வழி தடங்களை அமைத்து சென்னை யில் உள்ளது போல் முழுநேர புறநகர் சேவையை தொடங்க வேண்டும். அதன் பின்னர் எஞ்சிய இடஙகளுக்கு மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும். மெட்ரோ ரயில் செலவு அதிகம் பிடிக்கும் எனபதால் அதிக தொலைவு வழித்தடங்கள் அமைக்க முடியாது, எனவே மெட்ரோ ரயில் நகர் பகுதிகளை குறிவைத்து பண்ண வேண்டும். புறநகர் ரயில்கள் மதுரை, கோவை, திருச்சி நகர்களில் இருந்து பக்கத்து மாவட்ட  நகர்கள் தலைநகர் களை இணைக்க வேண்டும்.

பெங்களூருவில் மெட்ரோ ரயில் திட்டத்தை முடித்து,புதிதாக மெட்ரோ ரயில் நீட்டிப்பு பணிகளை தொடங்கி இருந்தாலும்,19000 கோடி செலவில் 162 கி.மீ புறநகர் மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள்.காரணம் 162 கி.மீ மெட்ரோ ரயில் திட்டத்தை முடிக்க வேண்டுமானால் 170000 கோடி செலவு பிடிக்கும் என்ற காரணம் தான்.

மெட்ரோ ரயில் திட்டததின் தூரம் அதிகரிக்கும் போது செலவு அதிகரிக்கும் அப்போது மத்திய அரசின் நிதி உதவியை பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். தற்போதைய 114 கிலொமீட்டர் 84000 கோடி திட்டம் கூட முதலில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் திட்டமிட்டு இருந்து.பின்னர் பின்னர் பொருளாதார பிரச்சினை காரணமாக 84000 கோடியாக சுருக்கப் பட்டுள்ளது. எனவேதான் புறநகர் ரயில் உள்ள பகுதிகளில் அவற்றை மூன்று நான்கு வழித்தடங்களாக விரிவாக்கி பயன்படுத்துவதே நல்லது.

ஒரேயடியாக 80000 கோடி, ஒரு லட்சம் கோடி என்று கேட்டால் மத்திய அரசிடமிருந்து நிதி பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் மும்பை மெட்ரோ ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வழித்தடங்களாக போட்டு தடம் 7A,8A என்று போய் கொண்டு இருக்கிறார்கள்.இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் கோடிக்கு மேல் திட்டங்களை அறிவித்து,பாதிக்கும் மேல் பணிகளை முடித்துவிட்டு, மீதி பணி களை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை மெட்ரோ முதல் கட்டமாக 14000 கோடி + 3000 கோடி விரிவாக்க பணிகள் முடித்திருக்கிறார்கள்.இதில் முதற்கட்ட பணி 14000 கோடியாக அறிவிக்க பட்டிருந்ததாலும்

7-8 ஆண்டுகள் கழித்து முடிக்கும் போத 20000 கோடி ஆனதாக கூறுகிறார்கள்.ஆனால் மும்பை மெட்ரோ ஒவ்வொரு தடங்களும் துவங்கும் போது அறிவிக்கப்பட்ட தொகையின் கூட்டு மதிப்பு தான் ஒன்றேகால் லட்சம் கோடி முடிக்கும் போது இரண்டு லட்சம் கோடியை தாண்டி போகும். சில பணக்கார நாடுகளில் ஒரேயடியாக ஆறு தடங்கள் அறிவித்து ஒன்றேகால் லட்சம் கோடி செலவில் மெட்ரோ ரயில் பணிகளை செய்து வருகிறார்கள்.ஆனால் அவர்கள் கூட பெரிய திட்டம் என்பதாலும், அறவிக்கப்பட்ட பிறகு எற்படும் பொருளாதார நெருக்கடிகளாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

மும்பை மெட்ரோ கூட
ஓரேயடியாக 6 தடங்கள்(lines) கேட்டு இருந்தால் மத்திய அரசின் அனுமதி கிடைகத்திருக்காது.நம்முடைய நாடு அவ்வளவு பணக்கார நாடு கிடையாது என்று சொல்லி மறுத்து இருப்பார்கள்.எனவேதான் மகாராசுட்ரா அரசு திட்டம் போட்டு முதலில் 2-3 தடங்களை அறிவித்து விட்டு பின்னர் ஆண்டுக்கு ஒரு தடம் என சுமார் 10 தடங்கள் வரை போய்விட்டார்கள்.மகாராசுட்ரா அரசின் திட்டம் பாராட்டுக்கு உரியது.தமிழக அரசும் இந்த திட்டத்தை பின்பற்றி மெட்ரோ ரயில் பணிகளை தொடர வேண்டும்.

 அதிமுக அரசு முடியும் தருவாயில் சுமார் 114 கிலோமீட்டர் சென்னை மெட்ரோ ரெயில் முற்றும் கோவை மெட்ரோ ரயிலிலுகாக 6000 கோடி நிதி அறிவிப்புவெளியிட்டு இருக்கிறது.2011 ஆம் ஆண்டில் இருந்தே ஆண்டுக்கு 20 கிலோமீட்டர் சென்னை மெட்ரோ ரயில் புதிய வழித்தட திட்டங்களை தொடங்கி இருந்தாலே இந்நேரம் சுமார் 125 கிலோமீட்டர் பணிகள் நிறைவடைந்திருக்கும்.125 கிலாமீட்டர் பணிகள் நடந்து கொண்டு இருக்கும்.

ஜெயலலிதா கூட திமுக நாங்கள்தான் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்தோம் என மெட்ரோ ரயில் துவக்க விழாவின் போது கூறிய போது 250 கிலோமீட்டர் விரிவாக்கத் திட்டம் ஆலோசனை செய்து வருவதாக கூறினார். ஆனால் துவங்கப் படவேயில்லை.

மும்பை மெட்ரோ ரயில் திட்டத்தோடு சேர்த்து புனே மற்றும் நாக்பூர் மெட்ரோ ரயில் வேலைகளும் மகராசுட்ரத்தில் நடைபெற்று வருகின்றது.ஆதுபோல கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் பணிகளை துவங்கி இருக்கலாம் அதை செய்யவில்லை.கடைசி வரவுசெலவு திட்டத்தில் 6000 கோடி கோவைக்கு மட்டும் அறிவித்திருக்கிறார்கள் பார்ப்போம்.

10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகர்களுக்கு மெட்ரோ ரயில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதோடு அதிக விழுக்காட்டிலான பொருள் உதவியும் மத்திய அரசு செய்யயும் என்பதால்கோவை, மதுரை, திருச்சி, சேலத்துடன் சேர்த்து திருப்பூருக்கும் திமுக ஆட்சி அமைந்தால் செய்ய லாம்.

தேர்தல் வாக்கறுதி படி தருநெல்வேலிக்கும் செய்ய விரும்பினால் நெல்லையை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகராக மாற்றி விட்டு பின்னர் நெல்லை மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதலை மத்திய அரசிடமிருந்து பெறலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு