வலைப்பதிவு தொடங்கியதன் நோக்கம்

இந்த வலைப்பதிவை தொடங்க காரணம். தமிழ்நாட்டை வறுமை பிடியிலிருந்து மீட்டு வளம் கொழிக்கும் பொருளாதார வல்லரசாக மாற்றுவது. தமிழர்கள் வெளிமாநிலங்கள்,வெளிநாடுகளில் கூலியாக வாடவைக்காமல் வளர்ந்த நாடுகளில் கிடைக்குமளவுக்கு உயர் வருமானத்துடனான வேலை வாய்ப்பை வழங்குவது.அதற்கு அரசியல் அதிகாரம் தேவை,அதற்காக அரசியலுக்கு வர தயாராகவே இருக்கிறேன் என்றாலும் அரசியல் கட்சி துவங்கி ஆட்சியை பிடிக்க 5-10 ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், யார் குற்றியும் நெல் கிடைத்தால் போதும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த வலைப்பதிவை தொடங்கி இருக்கிறேன். இந்த வலைப்பதிவின் முலமாக நான் வைக்கும் வளர்ச்சி திட்டங்கள் மூலம் அரசியல்வாதிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு தமிழ் நாடு வளர்ச்சி அடைந்து படித்தவர் முதல் படிக்காத பாமர் வரை வேலை வாய்ப்பு மற்றும் உயர் வருமானம் பெற்று வளமான வாழ்வு வாழ வேண்டும் என்பதே என் நோக்கம்.என் நோக்கம் பனையளவு நன்மையை இலக்காக கொண்டிருந்தாலும்,தமிழ் நாட்டுக்கு தினையளவு நன்மை பயக்குமெனின் மிக்க மகிழ்ச்சியடைவேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு