15.மின்துறை

இதுவரை அமைச்சரவை பற்றி எழுதியதில் மின்துறை பற்றி மூன்று பக்கங்களுக்கு மேல் எழுதி இருக்கிறேன். மின்துறை அவ்வளவு முக்கியமானது.உள்ளாட்சி துறை அமைச்சர் இந்த ஆட்சியில் அதிகம் சமாபாதித்தார் என்று கூறப்பட்டாலும், மின்சாரதுறையில் ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்து உள்ளதாக செய்திகள் வருகின்றன.ஆட்சியாளர்கள் எவ்வளவு திறமையற்றவர்களாக இருந்ததாலும், அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கக் கூடிய துறையாக மின் துறை இருந்து வருகிறது.2006 to 2011 திமுக ஆட்சியின் தோல்விக்கு மின் வெட்டு முதன்மை காரணம்.10 ஆண்டுகள் திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கும்,திமுக ஆட்சி வந்தால் மின் வெட்டு வரும் என்று அதிமுக செய்த பிரச்சாரமும் ஒரு காரணம்.கோவை மண்டலத்தில் திமுக தொடர்ந்து தோற்பதற்கு இதுவும் ஒரு காரணம்.2001 -2006 காலத்தில் திமுக ஆட்சியில் சென்னையில் சில மணி நேரம் தவிர மாநிலம் முழுவதும் பல மணி நேரங்கள் மின் வெட்டு செயல் படுத்தப் பட்டது.இதனால் சென்னைக்கு அடுத்த தொழில் நகரமான கோவை அதிகமாக பாதிக்கப் பட்டது.தொழிலாளர்கள், முதலாளிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.ஆனால் இலவச தொலைக்காட்சி, ஒரு ரூபாய் அரிசி போன்ற திட்டங்களின் மூலம் மின் வெட்டையும் தாண்டி 2009 தேர்தலில் மற்ற மண்டலங்களில் 
வென்ற திமுக கோவை மண்டலத்தில் வெல்ல முடியவில்லை.அப்போது சென்னை ,கோவைக்கு அடுத்த தொழில் நகரான திருச்சியிலும் திமுக தோற்றது,அதிமுக அங்கு வென்றது.அப்போது நான் திருச்சி நான் BHEL நிறுவனத்தில் ஒரு படிப்பு தொடர்பாக தங்கி இருந்தேன். அப்போது BHEL நிறுவனத்திலும் மின் வெட்டு விடுப்பு விடப்பட்டு இருந்தது.பின்னர் இரண்டு ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற
தேர்தலில் மின் வெட்டுடன் ஈழத்தமிழர் பிரச்சினையும் சேர்ந்து திமுக படுதோல்வி கண்டது.அப்போது திமுக ஆட்சியில் தொழிற்சாலைகள் நிறைய கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரம் 20% வரை வளர்ச்சி கண்டது.இதன் காரணமாக மின் தேவையும்  அதிகரித்து. மற்றும் பழய ஜெயலலிதா ஆட்சியில் மின்சார திட்டங்கள் எதுவும் தொடங்கப் படாததும் மின்வெட்டுக்கு முதன்மை காரணம். 2001-2006 ஜெயலலிதா ஆட்சியில் ஆண்டு 1000 மெகாவாட் வீதம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கி இருந்தால் திமுக ஆட்சியில் பயன்பட்டுக்கு வந்தது இருக்கும்,மின்வெட்டும் இருந்து இருக்காது.திமுக ஆட்சியில் 2006-2011 ல் துவங்கி வைத்த மின்னாலைகள் 2011-2016 ல் செயல்பட தொடங்கின,மற்றும் வெளியே இருந்து மின்சாரம் வாங்கி சமாளித்தார்கள்.2011 ஜெயலலிதா ஆட்சியில் திமுக ஆட்சியை விட அதிக மின்வெட்டு இருந்தது. பின்னர் திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் செயல் பாட்டுக்கு வந்ததும் குறைய தொடங்கியது.எந்தவொரு திறனில்லாத அரசாக இருந்தாலும மின்சாரம் இல்லையெனில் மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் அதன் பிறகு மின் உற்பத்தி ஆலைகள் அமைக்க தொடங்குவார்கள் ,அதன் மூலம் நாடு வளர்ச்சி அடைய தொடங்கும். ஒரு மெகா வாட் மின் உற்பத்தி செய்தாலே 30000-50000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.ஆனால் அதிமுக ஆட்சியில் பெருமளவு மின்சாரத்தை வெளியே வாங்கி இருக்கிறார்கள் இதனால் பெருமளவு வேலைவாய்ப்பு பறிபோயிருக்கிறது.பெருமளவு ஊழலும் நடந்தது இருப்பதாக மின்சார துறை ஊழியர்கள் கூட குற்றம் சாட்டி இருக்கிறார்கள். குறிப்பாக பொறியாளர்கள் மின்சாரம் வழங்க முடியாத நிறுவனத்துக்கு 2000 கோடிக்கு மேல் தமிழக அரசு வழங்க போவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தார்கள்.மின்சார துறை பொறியாளர்களுக்கு பாராட்டுகள்.இதுபோன்ற செயல் பாடுகள் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களை ஒழிக்க முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு