தேர்தல் அறிக்கை
2.தேர்தல் அறிக்கை
தேர்தல் வாக்குறுதிகள் தேர்தல் முன்னணி நிலவரத்தை சில நேரங்களில் மாற்றி அமைத்து உள்ளன. தேர்தல் அறிக்கைகள் மற்றும் அந்தந்த தொகுதிகளில் கொடுக்கப்படும் வாக்கு றுதிகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலே தமிழ் நாடு இன்றைக்கு கஞ்சி குடிப்பதற்கு வழியில்லாத,அதற்கான காரணத்தை அறியாத மக்களைக் கொண்ட மாநிலமாக இருந்திருக்காது.அந்தந்த தொகுதிகளில் கொடுக்கப்படும் சாலைகள் ,பாலங்கள் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள்,கூட்டுக்கடிநீர் திட்டங்கள் போன்றவை நிறைவேற்றப் பட்டிருந்தாலே தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து ,மக்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்திருக்கும்.தமிழ்நாடு வேலை வாய்ப்புகள் குறைந்து மக்கள் வறுமையில் வாடுவதற்கும் தேர்தல் அறிக்கைகள்,வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போனதும் முதன்மையான காரணம்.வேலைவாய்ப்புகள் குறைவால் துவக்க காலத்தில் கிடைக்கும் மிகக் குறைவான சொற்ப உதியமும் நிறைய பேரை தாக்கு பிடிக்க முடியாமல் குலத்தொழிலுக்கு திரும்பி போக வைத்து விடுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக