12.என்னுடைய தேரதல் அறிக்கையில் உள்ள அதிவேக ரயில் திட்டங்கள்

தற்போது இருக்கும் ரயில் தடங்களில் சென்னை- நாகர்கோவில்,சென்னை -கோயம்புத்தூர், சென்னை-பெங்களூரு போன்றவை தெற்கு ரயில்வேவுக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் தடங்களாக உள்ளன. இதில் மதுரை-நாகர்கோவில் ஒற்றை வழித்தடமாக இருப்பது நகைப்புககுரியது.

சென்னை-நாகர்கோவில் தடத்தில் முன்பதிவு துவங்கிய உடனே பயணசீட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்ய நினைத்தாலும் முடிவதில்லை. ஆனால் மும்பை-சென்னை இடையே ஒருநாள் முன்பாகவே முன்பதிவு செய்தாலும் கிடைத்து விடுகிறது. இத்தனை க்கும் மும்பை -சென்னை இடையே நாள்தோறும் 4 ரயில் சேவைகள் உள்ளது(2005 நிலவரம்).

சென்னை-நாகர்கோவில் இடையே நாள்தோறும் இரண்டு சேவைகள் உள்ளது. சிறப்பு ரயில் என்று அவ்வப்போது விடுகறாரகள்.அதுவும் சில நிமிடங்களிலே முன்பதிவு ஆகிவிடுகிறது. எனக்கு தெரிந்து கூடுதலாக 5-6 ரயில்கள் இருந்தாலும் ஒருநாளுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியுமா என்பது சந்தேகமே.

அந்த அளவுக்கு அதிக தேவை இருக்கும் வழி தடத்தில் இரட்டை ரயில் பாதை இல்லாமல் ஒற்றை வழித் தடமாகவே வைத்திருப்பது கேலிக்கூத்தாகும்.

பெரும்பாலும் மெட்ரோ நகர்களுக்கு இடையேயான வழி த்தடங்களில் மட்டுமே 2-3 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் பயணச்சீட்டு கிடைக்கிறது.மற்ற வழித்தடங்களில் குறிப்பாக மெட்ரோ சிறுநகர்களையும்,மாநில தலைநகர் களையும் மற்ற நகர்களையும் இணைக்கும் வழித்தடங்களில் முன்பதிவு ஒரு மாதத்திற்கு முன்பே கடினம்.

சென்னை புறநகர் ரயில் பாதைகளில் 3-4 வழித்தடங்கள் அமைத்து உள்ளது போல் அதிக வருமானம் உள்ள சென்னை -நாகர்கோவில், சென்னை-கோயம்புத்தூர் போன்ற வழித்தடங்களில் இந்தியா முழுவதும் 4 வழித்தடங்கள் வரை அமைத்து அதிக ரயில் சேவைகள்,இடைநில்லா ரயில் சேவைகள் வழங்கி பயண நேரத்தையும் குறைத்து இருந்தால் ரயில் போக்குவரத்தும் சமிக்ஞைக்காகா காத்து கிடப்பதை தவிர்த்து 7-8 மடங்கு அதிக பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளும் அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தி 2-3 மடங்கு அதிகரித்து சுமார் 4000 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்நதிருக்கும்.

எனவேதான் நம்முடைய தேர்தல் வாக்குறுதியில் ரயில்வே திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 20 ஆண்டுகளில் ஓரளவு வேகமாக வளர்ந்து வரக்காரணம் வாஜ்பாய் காலத்தில் கொண்டு வரப்பட்ட 4,6 வழிச்சாலை திட்டங்களே ஆகும்.காங்கிரஸ் ஆட்சிசியிலும் சாலைத்திட்டஙகளை வாஜ்பாய் காலத்தை விட வேகமாக பின் தொடர்ந்ததும்,பொருளாதார வளர்ச்சி தொடர முக்கிய காரணம்.

வாஜ்பாய் 6 வழிச்சாலை திட்டம் கொண்டு வருவதற்கு முன் அது போன்ற சாலை திட்டங்கள் இந்தியாவில் சாத்தியமில்லை என்றே கூறப்பட்டது.ஆனாலும் வாஜ்பாய் நடத்திக்காட்டினார். அது போன்று நடத்திக்காட்டும் தலைவர்கள் இல்லாமல் போனதே அதிவேக ரயில் திட்டம் இந்தியாவில் செயல் படுத்தப் படாததற்கு காரணம்.

மன்மோகன் சிங் ஆட்சிக்கு வந்த 2004 ஆம் ஆண்டிலிருந்தே.சென்னை-பெங்களூரு அதிவேக ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது.13 வெளிநாட்டு நிறுவனங்களும் விருப்பம் தெரிவித்தார்கள்.ஆனால் திட்டம் இது வரை துவக்கப்படவில்லை.

மோடி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் தங்க நாற்கர சாலை திட்டம் போல வைர நாற்கர ரயில் திட்டம் அறிவித்து இருந்தார்.ஆனால் இது வரை தொடங்கப் படவில்லை. மோடியின் குஜராத் பாசம் காரணமாக மும்பை -அகமதாபாத் அதிவேக ரயில் பாதை பணிகள் நடை பெற்று வருகிறது.

மும்பை -பூனே ரயில் பாதையே சரியான தேர்வாக இருந்து இருக்கும். தொலைவு மிகக் குறைவு என்பதால் 600 கி.மீ மும்பை-அகமதாபாத் பாதையை விட 150 கீ.மி மும்பை-புனே ரயில் பாதையை விரைந்து முடித்து இருக்கலாம்.மகராசுட்ர அரசின் ஆதரவும் கிடைத்து இருக்கும். 

தற்போது மும்பை -அகமதாபாத் ரயில் திட்டம் நத்தை வேகத்தில் நகருவதற்கு மகராசுட்ரா அரசு மாநில அரசு அளிக்க வேண்டிய பங்கு தொகையை அளிக்க மாட்டேன் என்று கூறுவது ,600 கி.மீ தொலைவில் 500 கி.மீ மேல் குசராத் வழியாக செல்வதால் மகராசுட்ரா அரசின் ஆர்வம் இன்மை போன்றவையே காரணம்.
-தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு