தொடர்ந்து அரசியல் செய்யும் தலைவர் கள்-வைகோ

வைகோ சந்தித்த 1996 தேர்தலில் வைகோ சுமார் 5% வாக்குகளை பெற்று பாமகவை விட அதிக வாக்கு களைப் பெற்றார்.மதிமுக கூட்டணி 7.5 % வாக்குகளைப் பெற்று 3 ஆம் இடத்தில் இருந்தது. வைகோ தொடர்ந்து தனித்து நின்று இருந்ததால் 10-15 ஆண்டுகளில்,மக்கள் கருணாநிதி, செயலலிதா தவிர்த்து வேறு தலைவர் தேடிய போது வைகோ வென்று முதல்வராக வந்திருப்பார்.ஆனால் அவர் எப்படியாவது நாடளுமன்ற உறுப்பினரானால் போதும் என்று 1998 இல் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். பின்னர் 1999 தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்தார். மாறி மாறி திமுக, அதிமுக உடன் கூட்டணி வைக்கவே தங்களை விட்டால் வேறு வழியில்லை என்று தெரிந்ததும்,திமுக ,அதிமுக வைகோவை பந்தாடத் தொடங்கின.இறுதியில் 2011 ஆண்டு சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார்.பின்னர் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாசக உடன் கூட்டணி அமைத்து மீண்டு வந்தார். பின்னர் 2016 தேர்தலில் மக்கள் நல கூட்டணி அமைத்து ,விச்சயகாந்த் திமுக அணிக்கு செல்லாமல் தடுத்து அரசி உருவாக்கியவர் (Queen Maker) ஆனார்.2019 நாடாளுமன்ற தேர்தலில்  ஒரு மக்களவை தொகுதி கொடுத்து அவமானப் படுத்திய போதும் தனக்கு ஒரு தனக்கு மாநிலங்களவை பதவி கிடைக்கிறது என்பதற்காக பொறுத்துக் கொண்டார்.வைகோ கட்சி தலமை பொறுப்பில் தொடரவே விரும்புவார் ,எனவே திமுக உடன் இணைய வாய்ப்பு இல்லை.வைகோவுக்கு பிறகு மல்லை சத்யா அல்லது வைகோவின் மகன் தலமை பொறுப்புக்கு வரலாம்.அவர்கள் தலமையிலாவது மதிமுக கூட்டணி கட்சி என்ற நிலையில் இருந்து மாறி முதன்மை கட்சியாக மாற முயற்சிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு