38.பல்நோக்கு மருத்துவமனை

பல்நோக்கு மருத்துவமனை,நூலக  திட்டங்களை ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.கொரானா பணிகளிலேயே முழ்கி போயிருந்த தமிழக அரசு முதன் முறையாக கொரானாவைத் தாண்டி  நூலக அறிவிப்பை வெளிவிட்டு இருக்கிறார்கள்.பல் நோக்கு மருத்துவமனை வரவேற்க வேண்டிய திட்டங்களில் ஒன்று.2011-2021 அதிமுக ஆட்சியில் 6 மருத்துவக் கல்லூரிகளை திறந்திருக்கிறார்கள்.11 புதிய மருத்துவ க் கல்லூரிகள் முகவை,விருதுநகர்

, திண்டுக்கல்,நீலகிரி, அரியலூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, 

திருவள்ளூர்

, திருப்பூர், நமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடங்கப்பட்டு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.350 படுக்கைகள் மருத்துவக் கல்லூரி தொடங்க போதுமானது என்றாலும் 750 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக கட்டப்பட்டு வருவது உண்மையிலே பாராட்டத்தக்கது.அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களாக இருக்கவே தகுதியற்றவை என்ற நிலையில் அரியலூரில் மருத்துவக் கல்லூரி வகுப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது. மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பிறகு யாரும் அரியலூர் மாவட்டமாக இருக்க தகுதியற்றது என்று கூறமுடியாது.ஒரு மருத்துவக் கல்லூரி சுமார் 300-400 கோடி செலவில் கட்டப்பட்டுகிறது.இதில் சுமார் 50% மேல் மத்திய அரசு வழங்குகிறது.எந்த திட்டங்களையும் செயல் படுத்தாமல் மத்திய அரசு நிதி கிடைக்கவில்லை என்று கூறுவதை விட இதுமாதிரி திட்டங்களை செயல்படுத்தி நிதியை பெறுவது நல்லது. ஏற்கனவே என்னுடைய தேர்தல் வாக்குறுதியில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் கொண்டு வரப்படும் என கூறியிருந்தேன்.எடப்பாடி பழனிச்சாமி ஆரசு மருத்துவகல்லூரிகள் தொடங்குவதில் பெரும் சாதனை படைத்துள்ளது.2016-2021 ஆட்சியில் 3 மூன்று மருத்துவக் கல்லூரிகள் வகுப்பு தொடங்கப் பட்டுள்ளதுடன் 11 கல்லூரிகள் பணிகள் நிறைவடைந்து ஆய்வுகள் தொடங்கும் நிலையில் உள்ளன. 2016 க்கு முன் தமிழ் நாட்டில் 22 மருத்துவக் கல்லூரிகளே இருந்தன.தற்போது 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. எடப்பாடி அரசின் வேகத்தில் சென்றால் 234 தொகுதிகளுக்கும் மருத்துவக் கல்லூரி கொண்டு வர சுமார் 70 ஆண்டுகள் ஆகும்.ஒவ்வொரு ஆண்டு க்கும் 10 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வீதம் 21 ஆண்டுகளில் 210 மருத்துவமனைகள் கொண்டு வந்தால் 234 சட்டமன்ற தொகுதிக்கும் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகள் கொண்டு வர முடியும். மருத்துவமனை கோரிக்கை அதிகம் என்று மத்திய அரசு கூறினால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதைச் சுற்றிக் காட்டி மருத்துவக் கல்லூரிகளைப் பெறலாம். தமிழ் நாட்டில் உள்ள பெருந்தொழில் நிறுவனங்களின் நன்கொடையுடனும் மருத்துவக் கல்லூரிகளை தொடங்கலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு