39.தமிழக அமைச்சரவை ஒரு பார்வை: பகுதி-1
[தமிழக அமைச்சரவை ஒரு பார்வை: முழுப்பதிப்பாக அளிக்க விரும்புகிறேன். அது நிறைய காலம் பிடிக்கும் என்பதால்,இதுவரை எழுதியவற்றை பகுதி-1 ஆக தர இருக்கிறேன்.
பொதுவாக தமிழக அமைச்சரவை சமுக நீதி அடிப்படையில் உள்ளதா என பார்ப்பார்கள். ஆனால் இந்த அமைச்சரவை நிலவியல் சமனிலை அற்று கடும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.
காவிரி பாசன பகுதிகளுக்கு அமைச்சர் இல்லை:
காவிரி பாசனப் பகுதிகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களை புறக்கணித்து இருப்பது கண்டனங்கள் வர செயதிருக்கிறது.மயிலாடுதுறைக்கும் வழங்கப்படவில்லை என்று நினைக்கிறேன். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டது என்பதால் இரண்டு அமைச்சர் பதவிகளாவது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஸ்டாலின் மற்றும் கருணாநிதி பாசன மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் கொடுக்கப்படவில்லை என்பதும் சரியான காரணமில்லை.நான் அடிக்கடி இந்த மாவட்டங்களுக்கு சென்று வந்திருக்கிறேன்.தமிழ் நாட்டிலேயே மனித வளம் குறைவான மக்கள் விளிம்பு நிலையில் வாழும் மாவட்டங்களாக இவை உள்ளன என்பதே உண்மை.
சமீபத்தில் எற்பட்ட புயலில் நிவாரணம் அளிக்க வந்த வண்டியை துரத்தி கொண்டும் அழுது கொண்டும் ஓடியது இந்த மாவட்டங்களில் தான்.இதை பார்த்த தமிழ் தேசியவாதிகள் பலர் நெஞ்சம் பதறுவதாக கருத்து வெளியிட்டு இருந்தார்கள்.
ஆனால் இந்த பகுதிகளுக்கு அடிக்கடி சென்று வருபவர்கள் நெஞ்சம் பதற மாட்டார்கள். காரணம் மக்கள் குப்பைகள் போல சாலை ஓரத்தில் படுத்து கிடக்கிறார்கள். நாகப்பட்டினம் பேருந்து நிலையம் கூரை தண்ணீர் ஒழுகி இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. மற்றும் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் ஒருநிமிடம் கூட நிற்க முடியாத அளவுக்கு சுகாதார சீர்கேடுகளுடன் உள்ளது.
இத்தனைக்கும் வெளிமாநில, வெளிநாட்டு(இலங்கை)மக்கள் அதிகம் வந்து போகும் வேளாங்கண்ணி இங்கு இருப்பது தமிழ் நாட்டின் மீதான நல்ல பிம்பத்தை சுக்கு நூறாக உடைக்க வழி செய்கிறது. தஞ்சை திருவாரூர் பேருந்து நிலையங்கள் தென் மாவட்ட இரண்டாம் நிலை பேருந்து நிலையம் அளவுக்கு கூட தேறவில்லை.இந்த மாவட்ட மக்களிடம் பேசிய போது கடன் கட்ட முடியாமல் பண்ணைகளில் ஆண்டு கணக்கில் வேலைசெய்யும் முறையும் இருப்பதாக கூறுகிறார்கள்.
சென்னையில் வீடில்லாமல் வாழ்பவர்களில் நிறைய பேர் இந்த பகுதிகளில் இருந்து பண்ணை அடிமைத்தனம் தாங்க முடியாது வந்தவர்கள் என்று சில எழுத்தாளர்கள் எழுதி இருக்கிறார்கள்.
இத்தனைக்கும் தமிழ்நாட்டை சுமார் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தவர் இந்த பாசன பகுதியில் இருந்து வந்தவர்.அப்படியும் பெரிய முன்னேற்றம் இல்லை.எனவே கண்டிப்பாக அந்த பகுதிக்கு அமைச்சர் பதவி வழஙகி மாநில அரசும் தனிக்கவனம் எடுத்து முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்ல வேண்டும்.
சுமார் 16 ஆண்டுகள் ஆட்சியை பின்னால் இருந்து இயக்கி முதல்வர் பதவி யை நூலிழையில் தவறவிட்டவர் இந்த பகுதியை சார்ந்தவர்தான், அவரின் உறவினரான தற்பொழுது தனிக்கட்சி நடத்துபவரின் அம்மா கட்சி கூட இங்கே வலி மையாக உள்ளது. சோதனை யான காலகடஙகளில் கூட தஞ்சை ,நாகை நாடாளுமன்ற தொகுதி களில் திமுகவின் வேட்பாளர்கள் அடுத்து அடுத்து வென்று வந்துள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் காவிரி பாசன பகுதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.இவர்கள் வளர்ச்சிப் பணிகள் செயதிருந்தால் பாசன
பகுதிகள் இவ்வளவு மோசமான நிலையில் இருந்து இருக்காது.மக்களும் எளிய பாமர மக்களாக இருப்பதாலோ என்னவோ இவர்களிடம் வலியுறுத்திகேட்க வில்லை போல தோன்றுகிறது. போர்கால ஆடிப்படையில் கடைமடைப் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டியது அவசியம்.
ஒரே மாவட்டத்தில் இரு அமைச்சர்கள்:
அதேபோல் தூத்துக்குடி போன்ற சில மாவட்டங்களில் இரு அமைச்சர் பதவி கொடுக்கப் பட்டிருக்கிறது.இதனால் மற்ற சில மாவட்டங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்காமல் போயிருக்கிறது.
இந்த அணுகுமுறை ஜெயலலிதாவிடம் மட்டுமே காணப்படும்.இப்போது ஸ்டாலின் அதை விட ஒருபடி மேல போய் எடுத்த நடவடிக்கையால் காவிரி பாசன பகுதி களில் மூன்று மாவட்ட ங்கள் அமைச்சர் பதவி கிடைக்காமல் போயுள்ளது.
2001 தேர்தலில் செயலலிதா யாரும் வழங்காத அதிசயமாக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இரண்டு அமைச்சர் பதவி வழங்கி இருந்தார்.பின்னர் கொஞ்ச நாளில் இராசேந்திர பிரசாத்தை தூக்கி விட்டு தளவாய் சுந்தரம் மட்டுமே அமைச்சர் பதவியில் தொடரவிட்டார்.இப்போது உள்ள அமைச்சரவையைப் பார்க்கும் போது 2001 ஆண்டு ஞாபகம் வருகிறது.
மீன்வளத்துறை அமைச்சர்:
மற்றபடி நீண்ட நாட்களுக்கு பிறகு மீனவரல்லாத ஒருவர் அமைச்சராக்கப் பட்டிருக்கிறார்.ஆனால் மீனவர் ஒருவர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்று உணர்த்துவதற்காக மா.சுப்ரமணியன் மீனவர் என்ற தகவலை கசிய விட்டிருக்கிறார்கள்.
தமிழக அரசியலை 25 ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து வரும் நான் மா.சு வை 20 ஆண்டுகளாக அறிவேன் என்றாலும். அவர் மீனவர் சமுதாயத்தை சார்ந்தவர் என்று அமைச்சர் பதவி ஏற்ற பிறகுதான் தெரியும்.
அனிதா ராதா கிருசுணன் மீனவர் இல்லை என்றாலும் கொரானா காலத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல் நீர் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டு மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டிருக்கிறார் வாழ்த்துக்கள்.
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்:
ஆதி திராவிடர் அமைச்சர் பதவி ஆதி திராவிடர் ஒருவருக்கு வழங்கப் பட்டுள்ளது. ஆதி திராவிடர் நலத்துறை மட்டும்தான் அவர்களுக்கு உகந்ததா?வேறு முதன்மை துறைகள் கொடுக்கக் கூடாதா என்ற குரல்களை சில இடங்களில் இருந்து கேட்க முடிகிறது.
நிதி அமைச்சர்:
மன்மோகன் சிங் நிதி அமைச்சர் ஆக பணி புரிந்து பெயர் எடுத்துதான் பிரதமராக வந்தார். ஆனால் தமிழக அளவில் நிதி அமைச்சர் பதவி என்பது நிதி நிலை அறிக்கை வாசிக்க மட்டும் என்ற அளவில் சுருங்கி விட்டது. நன்றாக படித்த நிதித்துறையில் பணி அனுபவமும் உள்ள திரு.தியாகவேல் ராஜன் நிதி அமைச்சர் ஆக்கப் பட்டு இருப்தாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவரும் முன்பு இருந்த அதிமுக ஆட்சியாளர்களிடம் கணக்கு கேட்டு கலக்கி இருக்கிறார். எதாவது ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்ய போகிறாரா பார்ப்போம். தமிழக அரசின் கடன் ஐந்து லட்சம் கோடி தாண்டிய நிலையில் கடனை குறைப்பாரா?அடைப்பாரா ?என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. அரசின் கடன்களில் பெரும் பகுதி போக்குவரத்து, மின்சார துறையின் ஊழல் கலந்த நிர்வாக சீர்கேடுகளால் வந்தது. மேலும் தரமற்றஇலவச பொருட்கள் வழங்கியதில் ஏற்பட்ட ஊழலும் ஒரு காரணம்
இவையனைத்தும் வேறு வேறு துறைகளின் கீழ் உள்ளன.நிதி அமைச்சர் முதலமைச்சர் அதாரவுடன் போக்குவரத்து, மின் துறை, மற்றத்துறை அமைச்சர்களுடன் பேசி ஊழலை குறைத்து நிர்வாக சீர்திருத்தம் செய்து மின்சாரம் போக்குவரத்து துறைகளை லாபத்தில் இயங்க வைப்பதன் மூலம் கடன்களை குறைக்க, அடைக்க முடியும், என்ன நடக்க போகிறது என பார்ப்போம்.
மின்சார துறை:
மின்துறை அமைச்சராக திமுகவினரால் முன்பு ஊழல்வாதி என்று குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜி பொறுப்பு ஏற்றிருக்கிறார்.ஏற்கனவே அறப்போர் இயக்கம் போன்றவை முந்தைய அதிமுக ஆட்சியில் ஒரு லட்சம் கோடி மினதுறையில் ஊழல் நடந்து உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. நிலக்கரி இறக்குமதி, தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவது போன்ற செயல்களின் மூலம் பெருமளவில் ஊழல் நடப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
சீனாவில் அறுகளில் இருந்து நிறைய மின்சாரம் தயாரிக்கிறார்கள் இதன் மூலம் நிலக்கரி பயன்பாடு குறைந்து சுற்று சூழல் பாதிப்பும் குறைகிறது. பெரும்பாலும் நீரேற்று முறைகள்(pumped storage) ,
ஓடும் ஆற்றை மறித்து (Run off River) திட்டங்களின் மூலம் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது.
சீனாவில் ஒருமுறை அமில மழை கூட பெய்தது. அதன் பின்னர் அவர்கள் விழித்து கொண்டு நீர் மின்சாரம் நோக்கி போய் விட்டார்கள் என்று நினைக்கிறேன். சீனர்கள் ஒரு அணையில் சுமார் 5600 மெகா வாட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்கிறார்கள் இதனால் பூமி சுற்றுவது கூட சில நிமிடங்கள் தாமதமாகி விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அந்ந அளவுக்கு இல்லாவிட்டால் கூட தமிழ் நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அணைகளில் இருந்தும் மேற்கூறிய இரு முறைகளில் 500+500 மெகாவாட் என 38 மாவட்டங்களில் உள்ள 40 அணைகளை/ஆறுகளை தேர்வு செய்து சுமார் 40000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செயதால் ஒரு மெகா வாட்டுக்கு 7 ரூபாய் என 280000 கோடி செலவாகும்,நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இதில் 10 விழுக்காடு பங்கு(commission) வாங்கினால் 28000 கோடி கிடைக்கும்.
மேலும் முகவை மாவட்டத்தில் அதானியின் 650 மெ.வாட்
கதிரொளி மின் உற்பத்தி நிலையம் உள்ளது.மேலும் சென்னை போன்ற நகரங்களில் தற்போது வீடு மற்றும்
தொழிற்சாலை மேற்கூரைகளில் கதிரொளி தகடுகள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகின்றனர். அப்படி பார்த்தால் முகவை மாவட்டத்திலேயே 650 மெகா வாட் அதானி மின் நிலயத்துடன் கூரைகளில் கதிரொளி மின் உற்பத்தி செய்து சுமார் 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
அப்படி பார்த்தால் 38 மாவட்டங்களில் 38000 மெகா வாட் கதிரொளி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஒரு மெக வாட் 7 ரூபாய் விதமாக சுமார் 256000 கோடி செலவாகும். நிறைய பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும்.இந்த மின் உற்பத்தி மற்றும் கதிரொளி தகடுகள் உற்பத்தி தொழிற்சாலைகள் அமைப்பதன் மூலம் இருபது லட்சம் பேருக்கு நேரடியாக, மறைமுகமாகவும் வேலை வழங்க முடியும்.
10% பங்கு(commission) 25600 கோடி கிடைக்கும்.
இது போக காற்றாலை மின்சாரம் முலம் தமிழ் நாட்டில் மேலும் 8000 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.மற்றும் தற்போது செய்ய பட்டு வரும் கடல்மேல் (off-shore) காற்றாலைகளை மீனவர்களை பாதிக்காது அமைத்து சுமார் 8000 மெகாவாட் நிறுவ முடியும். மொத்தமாக காற்றாலை மூலம் 16000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு சுமார் 115000 கோடி முதலீடு தேவை.இதன் மூலம் சுமார் 8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.இதன் மூலம் 10% பங்காக (commission) 11500 கோடி கிடைக்கும்.
மேலும் தற்போது கடல் அலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் Tidal wave எனும் முறை வந்துள்ளது.இதன் மூலம் மீனவர்களை பாதிக்காதவாறு 10 மாவட்டங்களுக்கு 1000 மெகாவாட் என சுமார் 10000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.சுமார் 70000 கோடி செலவில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியும். இதன் மூலமாக சுமார் 3 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள்.பங்காக(commission) 7000 கோடி வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதுவரை அமைச்சரவை பற்றி எழுதியதில் மின்துறை பற்றி மூன்று பக்கங்களுக்கு மேல் எழுதி இருக்கிறேன். மின்துறை அவ்வளவு முக்கியமானது.உள்ளாட்சி துறை அமைச்சர் இந்த ஆட்சியில் அதிகம் சமாபாதித்தார் என்று கூறப்பட்டாலும், மின்சாரதுறையில் ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்து உள்ளதாக செய்திகள் வருகின்றன.ஆட்சியாளர்கள் எவ்வளவு திறமையற்றவர்களாக இருந்ததாலும், அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கக் கூடிய துறையாக மின் துறை இருந்து வருகிறது.2006 to 2011 திமுக ஆட்சியின் தோல்விக்கு மின் வெட்டு முதன்மை காரணம்.10 ஆண்டுகள் திமுக ஆட்சிக்கு வராமல் போனதற்கும்,திமுக ஆட்சி வந்தால் மின் வெட்டு வரும் என்று அதிமுக செய்த பிரச்சாரமும் ஒரு காரணம்.கோவை மண்டலத்தில் திமுக தொடர்ந்து தோற்பதற்கு இதுவும் ஒரு காரணம்.2001 -2006 காலத்தில் திமுக ஆட்சியில் சென்னையில் சில மணி நேரம் தவிர மாநிலம் முழுவதும் பல மணி நேரங்கள் மின் வெட்டு செயல் படுத்தப் பட்டது.இதனால் சென்னைக்கு அடுத்த தொழில் நகரமான கோவை அதிகமாக பாதிக்கப் பட்டது.தொழிலாளர்கள், முதலாளிகள் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.ஆனால் இலவச தொலைக்காட்சி, ஒரு ரூபாய் அரிசி போன்ற திட்டங்களின் மூலம் மின் வெட்டையும் தாண்டி 2009 தேர்தலில் மற்ற மண்டலங்களில்
வென்ற திமுக கோவை மண்டலத்தில் வெல்ல முடியவில்லை.அப்போது சென்னை ,கோவைக்கு அடுத்த தொழில் நகரான திருச்சியிலும் திமுக தோற்றது,அதிமுக அங்கு வென்றது.அப்போது நான் திருச்சி நான் BHEL நிறுவனத்தில் ஒரு படிப்பு தொடர்பாக தங்கி இருந்தேன். அப்போது BHEL நிறுவனத்திலும் மின் வெட்டு விடுப்பு விடப்பட்டு இருந்தது.பின்னர் இரண்டு ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற
தேர்தலில் மின் வெட்டுடன் ஈழத்தமிழர் பிரச்சினையும் சேர்ந்து திமுக படுதோல்வி கண்டது.அப்போது திமுக ஆட்சியில் தொழிற்சாலைகள் நிறைய கொண்டு வரப்பட்டது. இதன் காரணமாக பொருளாதாரம் 20% வரை வளர்ச்சி கண்டது.இதன் காரணமாக மின் தேவையும் அதிகரித்து. மற்றும் பழய ஜெயலலிதா ஆட்சியில் மின்சார திட்டங்கள் எதுவும் தொடங்கப் படாததும் மின்வெட்டுக்கு முதன்மை காரணம். 2001-2006 ஜெயலலிதா ஆட்சியில் ஆண்டு 1000 மெகாவாட் வீதம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கி இருந்தால் திமுக ஆட்சியில் பயன்பட்டுக்கு வந்தது இருக்கும்,மின்வெட்டும் இருந்து இருக்காது.திமுக ஆட்சியில் 2006-2011 ல் துவங்கி வைத்த மின்னாலைகள் 2011-2016 ல் செயல்பட தொடங்கின,மற்றும் வெளியே இருந்து மின்சாரம் வாங்கி சமாளித்தார்கள்.2011 ஜெயலலிதா ஆட்சியில் திமுக ஆட்சியை விட அதிக மின்வெட்டு இருந்தது. பின்னர் திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்கள் செயல் பாட்டுக்கு வந்ததும் குறைய தொடங்கியது.எந்தவொரு திறனில்லாத அரசாக இருந்தாலும மின்சாரம் இல்லையெனில் மக்களிடமிருந்து எதிர்ப்பு வரும் அதன் பிறகு மின் உற்பத்தி ஆலைகள் அமைக்க தொடங்குவார்கள் ,அதன் மூலம் நாடு வளர்ச்சி அடைய தொடங்கும். ஒரு மெகா வாட் மின் உற்பத்தி செய்தாலே 30000-50000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க முடியும்.ஆனால் அதிமுக ஆட்சியில் பெருமளவு மின்சாரத்தை வெளியே வாங்கி இருக்கிறார்கள் இதனால் பெருமளவு வேலைவாய்ப்பு பறிபோயிருக்கிறது.பெருமளவு ஊழலும் நடந்தது இருப்பதாக மின்சார துறை ஊழியர்கள் கூட குற்றம் சாட்டி இருக்கிறார்கள். குறிப்பாக பொறியாளர்கள் மின்சாரம் வழங்க முடியாத நிறுவனத்துக்கு 2000 கோடிக்கு மேல் தமிழக அரசு வழங்க போவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தார்கள்.மின்சார துறை பொறியாளர்களுக்கு பாராட்டுகள்.இதுபோன்ற செயல் பாடுகள் நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல்களை ஒழிக்க முடியும்.
பங்கு (commission)
நான் மின்துறை தொடர்பான பதிவில் பங்கு (commission) கிடைக்கும் என்று பதிவு இட்டிருந்தேன்.ஊழலை ஊக்குவிக்கும் நோக்கம் எனக்கு இல்லை.தமிழ் நாட்டில் நடக்கும் சாலை திட்டங்கள் 60 % ஊழலுடனும்,கட்டிட திட்டங்கள் 40% ஊழலுடனும் நடைபெறுவதாக கூறுகிறார்கள்.ஊழல் செய்ய வேண்டும் என்று 100 கோடி சாலை திட்டத்தை 500 கோடியாக அறிவிக்கிறார்கள் என்றும் கூறுகிறார்கள்.எனக்கு காமராஜர் ஆட்சியில் நடந்த ஒரு சம்பவம் நினைவு வருகிறது. ஜப்பான் நிறுவனம் ஒன்று தழிழ் நாட்டில் பத்து சர்க்கரை ஆலைகள் அமைத்து கொடுத்ததாகவும், அதற்கு பங்கு (commission) ஆக 10% தரவிரும்பியதாகவும், காமராஜர் அந்த 10% பதிலாக கூடுதலாக ஒரு சர்க்கரை ஆலை தமிழக அரசுக்கு அமைத்து தர சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வேலை வாய்ப்பு வழங்குவதற்கு கூட பணம் கேட்கும் அவலம் நிகழ்கிறது.இந்த நிலையில் சுமார் 94 ஆயிரம் மெகாவாட்
மின்சாரத்தை 658000 ஆயிரம் கோடி செலவில் கோடி செலவில் செய்தால் 65800 கோடி ரூபாய் பங்கு (commission)
கிடைக்கும் என்று சொன்ன காரணம் அப்படியாவது இவர்கள் 94000 மெகாவாட் மின் உற்பத்தி ஆலைகளை அமைத்தால் தமிழ்நாடு மாபெரும் தொழில் வளர்ச்சி பெறும் என்பதோடு சுமார் 50 லட்சம் பேர் நேரடியாக மற்றும் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பதே.10% பங்கு என்பது வையகமெங்கும் உள்ளது என்பது ஜப்பானியர்கள் காமராஜர் அவர்களுக்கு கொடுக்க முன் வந்ததிலிருந்து தெரிகிறது. ஆனால் தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் செய்தால் பத்து லட்சம் கோடி வரை செலவை அதிகரித்து 3-4 கோடி வரை பங்கு(commission) பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தங்களுக்கு வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் கொடுத்து மேலும் வருமானம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. எப்படியோ இந்த திட்டங்களை நிிறைவேேற்றி வேலையிில்லா திிண்டாடத்தை ஒழிிித்தால் மகிழ்ச்சிி தான்.
மின்துறையில் சுமார் 94000 மெகா வாட் உற்பத்தி செய்யலாம் என்று குறிப்பிட்டு இருந்ததேன்.ஆனால் இது முதற்கட்டமாகத்தான்.இரண்டாம் கட்டமாக சுமார் 1 லட்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நான் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஆற்றுக்கு 1000 மெகாவாட் என்ற அளவில்தான் கணக்கு போட்டிருந்தேன்.ஆனால் சில மாவட்டங்களில் 5-6 ஆறுகள் உள்ளன.ஏற்கெனவே தமிழ்நாட்டில் ஓவ்வொரு 50 கி.மீக்கும் ஒரு தடுப்பணை கட்டி கடலில் வீணாகும் நீரை சேமிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. அப்படி பார்த்தால் நீர் மின்சாரம் மட்டுமே 2 லட்சம் மெகா வாட் உற்பத்தி செய்ய முடியும்.ஆனால் நான் மொத்த மின் உற்பத்தி 2 லட்சம் மெகாவாட் என்று குறைத்தே கூறினேன்.இவை போக காற்றாலை மின் உற்பத்தி, கதிரொளி மின் உற்பத்தி போன்றவற்றின் மூலமாகவும் இரண்டாவது கட்டமாக நிறைய மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.கதிரொளி மூலமாகவும் மாவட்டத்துக்கு ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று குறிப்பிட்டு இருந்தேன். முகவை மாவட்டத்தில் 650 மெகாவாட் அதானியின் கதிர் மின்சார ஆலை உள்ளது. முகவை நிலப்பரப்பில் மிகப்பெரிய மாவட்டம் .650 மெகா வாட் கதிரொளி மின்னாலை வெறும் 10 ஏக்கர் பரபரப்பளவிலெ நிறுவப்பட்டு உள்ளது.4000 சதுர கி.மீ மேல் பரப்பளவு கொண்ட முகவை மாவட்டத்தில் இதே போன்று 10 ஆலைகளை நிறுவ முடியும். அப்படி பார்த்தால் முகவை மாவட்டத்தில் மட்டும் 6500 மெகா வாட் கதிரொளி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.ஆனால் நான்650 மெகா வாட் அதானி மின் நிலையத்துடன் வீடுகளில், தொழிற்சாலைகளில் வைக்குப் படும் கதிரொளி மின் உற்பத்தியையும் சேர்த்து 350+650 =1000 மெகாவாட் என கூூறி இருந்தேேன். ஆனால் முகவைை போன்ற பெெரிய மாவட்ட ங்களில் 6500 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய முுடியும் .
பெரிய மாவட்ட ங்கள் ஒவ்வொன்றும் 6500 மெகாவாட் மின் உற்பத்தி கொடுக்கக் கூடியவை என்று பார்த்தோம்.அப்படி பார்த்தால் விருதுநகர்,சிவகங்கை, தகடூர், கிருசுணகிரி,சிவகங்கை, புதுக்கோட்டை ,விழுப்புரம், விழுப்புரம், சேலம் ,ஈரோடு,கோவை, திருவண்ணாமலை, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ங்களில் 6500 வீதம் 78000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்ய முடியும். தற்போது தமிழ் நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 16000 மெகாவாட் தான்.எனுடைய கணக்குப் படி தமிழ் நாட்டில் சுமார் ஒரு லட்சம் மெகாவாட் கதிர்மின் உற்பத்தி ,40000 மெகாவாட் நீர் மின் உற்பத்தி, காற்றாலைகள் மூலம் 16000 மெகாவாட் மின் உற்பத்தி,கடல் அலை மின் உற்பத்தி மூலம் 10000 மெகாவாட்,வீடுகள் மற்றும் நிறுவனங்கள் கூரைகளில் வைக்கப் படும் கதிர் மின் தகடுகள் மூலமாக 24000 மெகாவாட் என இரண்டு லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும்.இதன் மூலமாக சுமார் 14 லட்சம் கோடி முதலீட்டில் சுமார் ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப் படும்.
தமிழ் நாட்டில் 5 ஆண்டுகளில் 2 லட்சம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று போன பதிவில் பார்த்தோம்,65 ஆண்டுகளாக சுமார் 16000 மெகாவாட் மின்னுற்பத்தி மட்டும் செய்த தமிழ் நாட்டில் வெறும் 5 ஆண்டு களில் 2லட்சம் மின் உற்பத்தி என்பது உங்களை மலைக்க வைக்கும் என்பதில் வியப்பு இல்லை.சீனாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டுக்கு 50000 மெகாவாட் மின்சாரம் தாயாரித்து வருகிறார்கள்.தமிழ் நாட்டில் 20001-2006 ஆம் ஆண்டுகளில் ஒரு மெகாவாட் கூட மின்சாரம் தயாரிக்கப் படவில்லை என்று நினைக்கிறேன்.அதனால் தான் 2006-2011இல் மின்தட்டு ஏற்பட்டது.ஆனால் 2006 -2011 இல் தொடங்கி வைக்கப் பட்ட மின் திட்டங்கள் தான்.2011-2016 இல் மின் தட்டைப் போக்கின.200000 மெகாவாட் வரை மின் திட்டங்களுக்கான வாய்ப்பு இருப்பதற்கான காரணம்,இவ்வளவு நாட்களாக தேவையான அளவு மின் திட்டங்கள் நிறைவேற்ற படாததே ஆகும்.
தொழிற்துறை:
தொழிற்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு நியமிக்கப் பட்டிருக்கிறார். பள்ளி கல்வி அமைச்சராக சிறப்பாக பணியாற்றியதாக அறியப்படுகிறார்.இடைநிற்றல்களை குறைத்தாக விளம்பரம் கொடுத்தைக் கூட பார்த்தேன்.
நான் தங்கம் தென்னரசு மின்துறை அல்லது ,போக்குவரத்து துறை அமைச்சராக வரவேண்டும் என்று நினைத்தேன்.காரணம் கடந்த திமுக ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டு திமுக அரசு திணறியது,2011-2021 ஆட்சியில் மின் உற்பத்தி ஆலைகளை தொடங்காமல் ,வெளியே இருந்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்து தமிழக அரசின் கடனை 5 லட்சம் கோடியாக உயர்த்தியது,போக்குவரத்து துறையில் ஏற்படும் ஊழல்கள் ,அதனால் ஏற்படும் நட்டத்தினால் பேருந்துகள் சரியாக பராமரிக்கப் படாமல் மக்களை ஆபத்தான பேருந்து பயணங்கள் மேற்கொள்ள வைப்பது, உழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் ஏற்படும் நட்டத்தை பேருந்து கட்டணத்தை உயர்த்தி தமிழக மக்களின் தலையில் கட்டுவது போன்ற செயல்பாடுகள்தான்.நான் தங்கம் தென்னரசு வந்தால் ஓரளவுக்கு நிர்வாக சீர்திருத்தம் ஏற்பட்டு நட்டம் குறைக்கப் படும் என நினைக்க காரணம். ஆனால் தற்போது தங்கம் தென்னரசு தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப் படடிருக்கிறார்.
தொழிற்துறை அமைச்சரின் கடமைகள்.
கருணாநிதி காலத்தில் மானாமதுரையில் அறிவிக்கப்பட்ட வீடியோகான் தொழிற்சாலை கொண்டு வரப்பட்டது,அவரின் சொந்த ஊரான திருக்குவளையில் அறிவிக்கப்பட்ட துறைமுகம், மின் உற்பத்தியாலை போன்றவை கொண்டு வரப்படவில்லை. அதே போல் தொழில் மாநாட்டில் ஏற்கெனவே செயலலிதாவால் அறிவிக்கப்பட்ட 2 லட்சம் கோடி மதிப்புடைய திட்டங்களான நாற்பதாயிரம் கோடியில் தூத்துக்குடியில் வரும் என அறிவிக்கப்பட்ட கராபி நிறுவனத்தின் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையும் வரவில்லை,HCL நிறுவனத்தால் மதுரை, நெல்லையில் துவங்கப் படும் என அறிவிக்கப் பட்ட 6000 கோடி தகவல் தொழில்நுட்ப பூங்காவும் வரவில்லை. தமிழக அரசு நிறுவனங்களை பின் தொடர்ந்து (Follow-up), நினைவூட்டி ,அவர்களுக்கு தேவையான நிலம்,உட்கட்டமைப்பு உள்ளிட்ட உதவி களை செய்து கொடுத்து,அந்த திட்டங்களை கொண்டு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பிறகே அடுத்த தொழில் மாநாட்டுக்கு போக வேண்டும். அதை விடுத்து ஏற்கனவே அறிவித்த திட்டங்களை தொடங்காமல் திரும்ப ,திரும்ப தொழில் முதலீட்டாளர்கள் கூட்டம் கூட்டி ,வெற்று அறிவிப்பு மட்டுமே வெளியிடுவது பொருள் விரயம் மற்றும் கால விரயம்.
முதலீட்டாளர்கள்மாநாடு:
முதலீட்டாளர்கள்மாநாட்டில் போடப்படும் ஒப்பந்தங்களில் 5% கூட இந்தியாவில் நிறைவேற்றப்படுவதில்லை என ஆய்வறிக்கைகள் கூறுகிறது.மோடி பிரமாராக ஆவதற்கு காரணமும் முதலீட்டாளர்கள் மாநாடே ஆகும்.2009 பொருளாதார நெருக்கடியின் போது மோடி முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி 12 லட்சம் கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக அறிவித்தார். ஊடகங்கள் மோடியை ஆகா,ஓகோவென புகழ்ந்தன,இந்த ஒப்பந்த்தில் கூட 5% நிறைவேற்றப்படவில்லை. ஆனால் இதனால் கிடைத்த ஊடக வெளிச்சம் மோடி பிரதமராக முதன்மை காரணமாக இருந்தது. ஜெயலலிதா ஆட்சியில் போடப்பட்ட 2 லட்சம் கோடி திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப் படவில்லை.முதலீட்டாளர்கள் தங்களின் பொருளாதார சூழலில் இந்த திட்டங்களை செயல் படுத்த முடியுமா என்பதை ஆராய்ந்து பார்த்த பிறகே ஒப்பந்தம் போட்டு இருப்பார்கள். ஆனாலும் இந்த திட்டங்கள் செயல் படுத்த முடியாமல் போனதற்கு காரணம்,முதலீட்டாளர்கள் மாநாடு வெறும் விளம்பரத்துக்காக நடத்தப்படுவது,தொடர்ந்து முதலீட்டு திட்டங்களை செயல்படுத்துவதில் ஆர்வமின்மை, ஒப்பந்தம் போட்ட பிறகு ஊழல் முகத்தை காட்டி பங்கு கேட்டு பேரம் நடத்துவது போன்றவை.அரசியல்வாதிகள் முதலீட்டுத்திட்டங்களை செயல்படுத்துவதில் குறியாக இருக்க வேண்டும், வேலைத் தொடங்கி விட்டால் எப்படியாவது அரசியல்வாதிகளுக்கு எப்படியாவது பங்கு/commission கிடைக்கும். தமிழக அரசுக்கும் வரிவருவாய் மூலம் கோடிக் கணக்கில் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் நிறைய உருவாகும். தமிழ் நாட்டின் முதன்மை பிரச்சினையாக வேலையில்லா திண்டாட்டம் இருப்பதால், வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் உருவாகும் போது ,ஆளுங்கட்சி தேர்தலில் மீண்டும் வென்று வர முடியும்.
போக்குவரத்து துறை:
போக்குவரத்து துறை அமைச்சராக கண்ணப்பன் பதவி ஏற்றிருக்கிறார்.1996-2001 ஊழல்மிகு செயலலிதா ஆட்சியில் செயலலிதாவை விட அதிகமாக சம்பாதித்தவர் கண்ணப்பன் என சவுக்கு ஊடகம் குற்றம் சுமத்தியது.நானும் முதலமைச்சரை விட ஒரு அமைச்சர் எப்படி அதிகம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்தேன். அதற்கு 2016-2021 ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் அதிகம் சம்பாதித்தாக கூறப்பட்டது ஐயம் தெளிய வைத்தது.இருந்ததாலும் எந்த துறையின் அமைச்சராக இருந்தார் என்று அறிய ஆவலாக இருந்தது. பின்னர் அவர் போக்குவரத்து, நெடுஞ்சாலை, மின்சாரத்துறை அமைச்சராக இருந்ததாக அறிய முடிந்தது. போக்குவரத்து துறை ஏழை எளிய மக்களை நேரடியாக பாதிக்கும் துறையாக உள்ளது.1996-2001 ஆண்டு திமுக ஆட்சி ஓரளவு நல்லாட்சி என்றாலும் தோல்வி அடைந்ததற்கான முதன்மை காரணங்களில் பேருந்து கட்டண விலை உயர்வும் முதன்மை காரணம். சில ஆண்டுகளுக்கு முன் பெயர் பலகையில் நிறத்தை மாற்றியும், மாற்றாமலும் பேருந்து கட்டணங்கள் 2-3 உயர்த்தப்பட்ட போது ஏழை எளிய மக்கள் பேருந்தை மறந்து நடைபயண வாழ்க்கை வாழ பழகினார்கள்.ஊழல் காரணமாக 6 சக்கரங்களுடன் ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது, மக்களும் ஆபத்தான பயணம் மேற்கொண்டார்கள்.மிக மோசமான பராமரிப்புடன் பேருந்துகள் இயங்கின.எதிர்க்கட்சிகள் கூட அப்போது கண்டு கொள்ளவில்லை,ஆனால் முகநூல் போராளிகள் சிறப்பாக செயல்பட்டு போக்குவரத்து துறையின் மோசமான செயல்பாடுகள், ஊழல்முறை கேடுகளை வெளிக்கொண்டு வந்த வண்ணம் இருந்ததார்கள்.1996-2001 அதிமுக ஆட்சியில் மீன் வளத்துறை அமைச்சர் செயக்குமார் தவிர வேறு எல்லா அமைச்சர்களும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்கள்.கண்ணப்பன் குற்றசாட்டுகளிலிருந்து தப்பி திமுகவில் இணைந்து அமைச்சர் ஆகியிருக்கிறார்.லாலு பிரசாத் பிகார் முதலமைச்சராக இருந்த போது மோசமான ஊழல்வாதி என்று பெயர் எடுத்து இருந்தாலும், ரயில்வே அமைச்சராக சிறப்பாக பணியாற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு ரயில்வே துறை லாபத்தில் செயல் பட வைத்தார்.ரயில்வே துறை லாபத்தில் இயங்கிய காலத்தில் கூட ஊழல் நடந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. அதையும் தாண்டி லாபத்தில் இயங்க வைக்கப்பட்டது, அதுபோல் போக்குவரத்து துறை அமைச்சர் தன் மீது உள்ள பழைய குற்றச்சாட்டு களுக்கு பவக்கழுவாய் தேடும்வித்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல் ஊழல்,நிர்வாக சீர்கேடுகளை களைந்து போக்குவரத்து துறை லாபத்தில் இயங்க வழி செய்ய வேண்டும்.
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்:
பெண்களில் 50000க்கு மேல் சம்பளம் வாங்குகிறவர்களும் இருக்கிறார்கள். ஆண்களில் 15000க்கு குறைவாக வருமானம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். எனவே பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் வழங்குவதை தவிர்த்து குறைந்த வருமானமுடைய ஆண்,பெண்களுக்கு காலை மாலை இருவேளைகளில் இலவச பயணம் அனுமதித்து இருக்கலாம்.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு குறைந்த கட்டண சலுகை வழங்கப்படுகிறது.அவர்களுக்கும் இலவச கட்டணம் வழங்கி இருக்கலாம். இப்போது கூட எனக்கு பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் அளிப்பதில் பிரச்சினை இல்லை,ஆனால் கூலித்தொழிலாளர்கள்,குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கும்,கட்டணமில்லா பேருந்து சேவை வழங்க வேண்டும்.
அரவாணிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம்:
மாற்று திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயணம் வழங்குவதை வரவேற்கிறேன். அரவாணிகளுக்கு இலவச பயணம் வழங்குவதால்,ரயில்களில் இலவசமாக ஏறி பிச்சை எடுப்பது போல் பேருந்திலும் இலவசமாக ஏறி பிச்சை எடுக்கும் நிலை வராமல் தடுக்க வேண்டும். மேலும் அரவாணிகளுக்கு நிறைய சலுகைகள் வழங்குவது நிறைய பேர் அரவாணிகளாக மாறுவதை ஊக்குவிக்கும் விதமாக அமைந்து விடக்கூடாது.
கருத்துகள்
கருத்துரையிடுக