42.தமிழக அரசின் வளர்ச்சிக்குழு

 

முதல்வர் ஸ்டாலின் மாநில வளர்ச்சிக்குழுவை அமைத்து இருக்கிறார்.இவ்வளவு நாட்களாக திட்டக்குழுவாக இருந்ததை தற்போது வளர்ச்சிக் குழுவாக பெயர் மாற்றம் செய்து இருக்கிறார்கள்.இவ்வளவு நாட்களாக இருந்த திட்டக்குழுக்கள் பெரிய அளவில் திட்டங்கள் எவற்றையும் கொண்டு வராததால் பெயர் மாற்றம் செய்து சீரமைத்து செயல் பட வைக்க பார்க்கிறார்கள் வாழ்த்துக்கள்.

இந்த திட்டக்குழு 1971 இல் கருணாநிதி அரசால் கொண்டு வரப்பட்டது. பின்னர் 23.04.2020- ல் "மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக" மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகள் உள்ளன.

நான் கூட ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பணிகளை பின்தொடர்வது (follow-up)அவசியம் ,வெறும் வெற்று அறிவிப்பாக மட்டுமே இருக்கக் கூடாது என்று எழுதி இருந்தேன்.தமிழ் நாட்டில் இதுவரை அறிவிக்கப்பட்ட திட்டநங்கள், Vision 2023 போன்ற முன்னோக்கிய செயல் வடிவங்கள் நிறைவேற்றப் பட்டிருந்தாலே தமிழ் நாடு அமெரிக்கா, சீனாவுக்கு போட்டியாக பொருளாதார வல்லரசாக வளர்ந்து இருக்கும்.ஆனால் எல்லாம் வெற்று அறிவிப்புகளாக மட்டுமே உள்ளதால் வேலையில்லா திண்டாட்டம், திருட்டு கொலை ,கொள்ளை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. யாருமே பெரும்பாலும் தமிழில் பொருளாதாரம் பற்றி எழுதுவதில்லை என்பதாலும், அறிவிப்புகளை மட்டும் வெளிவிடுவதோடு ,ஊடகங்கள் உட்பட அனைவரும் திட்டங்கள் என்ன ஆயிற்று என்று கவனிப்பதில்லை என்பதாலும் கண்காணிப்பு என்ற வார்த்தை பிடிபடாமல் பின்தொடரவேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.தற்போது தமிழக அரசே வளர்ச்சி குழுவினர் கண்காணிப்பும் செய்வார்கள் என்று சொல்லி இருப்பதால் ,தொடர்ந்து கண்காணிப்பு செய்து இதுவரை அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத திட்ங்களை செயல்படுத்தி ,கண்காணித்து நிறைவேற்ற வேண்டும். அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல் படும் என்று ஸ்டாலின் கூறி இருக்கிறார்,அதுபோல செயலலிதா ஆட்சியில் முதலீட்டாளர்கள் மாநாடுகளில் போடப்பட்டு இதுவரை துவங்கப்படாத சுமார் இரண்டு லட்சம் கோடி முதலீடுகளை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலீட்டாளர்கள் உடன் ஒப்பந்தம் செய்தது தமிழக அரசு,ஆட்சியாளர்கள் அதிகாரிகள் மாறலாம் ஆனால் தமிழக அரசு இருக்கும். எனவே ஏற்கனவே போடப்பட்டு துவங்கப்படாத வேலைத்திட்டங்களை முலில் தொடங்கி வைத்து ,பின்னர் அடுத்த திட்டங்களை அறிவிக்க வேண்டும்.
-தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு