43.தமிழக அரசின் வளர்ச்சிக்குழு-பாகம் இரண்டு.
சீனாவின் சமீபகால பொருளாதார வளர்ச்சிக்கு பொறியியல்துறைகளில் ஏற்பட்ட புரட்சியே காரணம் ஆகும்.வானூர்தி நிலையங்கள், அதிவேக ரயில்கள், துறைமுகங்கள், ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்றவையே காரணமாகும்.இதற்கு முதன்மை காரணம் ஆளும் பொதுவுடமைக் கட்சியின் ஆட்சி மன்றக்குழுவில் பொறியாளர்களும் அறிவியல் பட்டதாரிகளும் நிரம்பி வழிந்ததே ஆகும் என்று கூறப்படுகிறது. தமிழக அரசு நியமித்த வளர்ச்சிக் குழுவில் பெரும்பாலும் பேராசிரியர்கள் இருக்கிறார்கள்.பேராசிரியர்கள் பெரும்பாலும் பட்டதாரிகள் என்றாலும், ஏற்கனவே தமிழ் நாடு பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை உள்ளிட்டவற்றில் பணிபுரிந்து பல கட்டுமான வேலைகளில் அனுபவம் கொண்ட பொறியியல் வல்லுனர்கள், தனியார் பெருநிறுவனங்களில் பணியாற்றிய பொறியியல் வல்லுனர்கள் போன்றோரையும் இந்த குழுவில் இடம்பெறச் செய்து இருக்கலாம். தமிழ் நாட்டில் ஏராளமான பணிகள் செய்ய வேண்டிய நிலையில் குறைந்து 20 பேர் கொண்ட குழுவினர் வேண்டும். ஆனால் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.முதலில் 20 பேர்க் கொண்ட குழுவை நியமித்து பணிகளைத்தொடங்கி பின்னர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 10 பேர் கொண்ட வளர்ச்சிக் குழுவை நியமித்து,
ஒரு மாவட்டம் விடாமல் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்கலாம்.இன்றைக்கு தமிழ் நாட்டின் மக்கள் தொகை 2021 ஆம் ஆண்டு கணக்கு எடுப்பின் படி 7 கோடியே 90 லட்சம். ஆனால் பிரிட்டனின் மக்கள் தொகை சுமார் 6 .90 கோடி இருக்கும்.தமிழ் நாட்டை விட சுமார் 1 கோடி மக்கள் தொகை குறைவாக கொண்ட பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3174 பில்லியன் அமெரிக்க டாலர்கள்(ஒரு பில்லியன் 100 கோடி),ஆனால் தமிழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.தமிழ் நாட்டை விட ஒரு கோடி மக்கள் தொகை குறைவாக கொண்ட பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தமிழ்நாட்டை விட பத்து மடங்கிற்கு மேல் உள்ளது.பிரிட்டன் ஏற்கனவே வளர்ச்சி அடைந்த நாடு என்பதால் ஆண்டு வளர்ச்சி வீதம் 1 % க்கு குறைவாகவே உள்ளது.இதே வீதத்தில் போனால் போனால் பிரிட்டனின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டு 3600 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். தமிழ்நாட்டின் பொருளாதாரம் கொரானாவுக்கு முன் 8-10% ஆக இருந்தது.அடுத்த 20 ஆண்டுகளில் இதே விழுக்காட்டில் பிரிட்டனின் வளர்ச்சி இருக்குமானால் தமிழ் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 700-900 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். வளர்ச்சிக்குழு 20% இலக்கு வைத்து ,பணிகளைத் துவங்கி ,கண்காணிப்பு செய்து வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தால்தான்.1400-1700 அமெரிக்க டாலர்கள் அடைந்து பிரிட்டனின் உள்நாட்டு உற்பத்தியில் பாதி அளவாவது பிடிக்க முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக