70 கோடியில் கருணாநிதி நினைவு நூலகம்.
கருணாநிதி பிறந்த நாளில் மதுரையில் 70 கோடியில் நூலகம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.2001 தேர்தலில் திமுக தோல்வி அடைவதற்கும் இது போன்ற செயல்பாடுகளே காரணம். ஸ்டாலின் சென்னை மேயராக,கருணாநிதி முதல்வராக இருந்த 1996-2001 ஆட்சியில் பெரும்பாலான தொழில் முதலீடுகள்,பாலங்கள், சாலைகள் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்கள் போன்றவை சென்னையிலே செய்யப்பட்டன.விளைவு 1998 இல் சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வென்ற திமுக மீதமுள்ள 36 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேபோல் 2001 சட்டமன்ற தேர்தலில் சென்னை மாவட்டத்தில் அப்போது இருந்த 14 தொகுதிகளில் 11 இல் வென்ற திமுக கூட்டணி தமிழகம் முழுவதும் சுமார் 25 தொகுதிகளில் மட்டுமே வென்றது,காரணம் பணிகள் பரவலாக செய்யப்படாமல் சென்னையில் மட்டும் செய்யப்பட்டதே ஆகும். அதே போல் 70 கோடி நூலகம் என்பதும்,சுமார் 70 லட்சம் செலவில் 100 நூலகங்கள் அமைத்தால் 100 நகரங்களில் உள்ள மக்கள் பலனடைவார்கள்.சுமார் 15-20 லட்சம் நூலக கட்டிடம் 50-55 லட்சம் இதர சேவைகள் என இருந்ததாலும் அளவில் பெரிய நூலகமாக இருக்கும். இதனால் 100 தொகுதிகளில் இருந்து வாக்குகளைப் பெறமுடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக