தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-9.சுற்றுலாத்துறை,மதுவிலக்குத்துறை
சுற்றுலாத்துறை அமைச்சராக மதிவேந்தன் பொறுப்பு ஏற்றிருக்கிறார்.9 ஆண்டுகளுக்கு முன் 48 படகு நிலையங்கள் மூலம் ஆண்டு க்கு 11 கோடி வருமானம் கிடைப்பதாக அறிந்தேன். இப்போது 15 கோடி கிடைப்பதாக வைத்துக்கொள்வோம்,தமிழ் நாட்டில் இருக்கும் நீர் நிலைகள்,கடற்கரைகளின் அளவுக்கு 5ஆண்டுகளுக்கு 480-4800-48000 என்று பெருக்கி செல்லலாம். இதன் மூலம் ஆண்டுக்கு 11000 கோடி வருமானம் வரை பெறலாம். இவை மதுக்கடைகள் மூலம் வரும் வருமானத்துக்கு மாற்றாக இருக்கும். மேலும் தங்கும் விடுதிகள் போன்றவை கட்டுவதன் மூலமும் அதிக வருமானம் பெறமுடியும். மதுவிலக்குத்துறை செந்தில் பாலாஜி யிடம் உள்ளது. 2011-2016 ஆட்சியில் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருந்த விசுவநாதன் அதிகம் சம்பாதித்தவர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. ஸ்டாலினும் பரபரப்புரையில் செயலலிதாவுக்கு சரியாக கப்பம் கட்டாத காரணத்தால் நத்தம் விசுவநாதன் செயலலிதாவால் கட்டம் கட்டப்பட்டார் என்று கூறினார். தற்போது செந்தில் பாலாஜி கையில் மதுவிலக்குத்துறை வந்து உள்ளது. முழுமையான மதுவிலக்கு கொண்டுவர முடியாது என்று கூறுகிறார்கள்.அதை மெய்பிப்பது போல் குடிகார்கள் சிலர் சானிடைசர் குடித்து இறக்கிறார்கள்.மேலும் முழு அடைப்பு நேரத்தில் சாராயம் காய்ச்சுவது போன்ற செயல்களும் அதிகரித்து உள்ளது. ஏற்கனவே மதுவிலக்கு கொண்டு வந்ததால் மாநில எல்லைகளில் மது குடிப்பதற்காக பக்கத்தில் உள்ள மாநிலங்களுக்கு செல்லும் போது போக்குவரத்து நெருக்கடி,விபத்து ஏற்பட்டுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதுவே மதுவிலக்கு அமல்படுத்த முடியாததற்கு முதன்மை காரணமாக கூறப்படுகிறது.ஆனால் மதுக்கடைகளால் வறுமை மற்றும் சமுதாயச்சீரழிவு ஏற்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.எனவே மதுக்கடைகளை வாரத்தில் 4 நாட்கள் திறந்து வைப்பது விமர்சனங்களை ஓரளவுக்கு குறைக்கும். மேலும் அனைத்து நாட்களிலும் கள் ,பதநீர் போன்ற பனம் பொருட்கள் கிடைக்கச் செய்ய வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக