மாநில வளர்ச்சிக்குழு உறுப்பினர்கள்-ஒரு பார்வை(செயரஞ்சன்)


முதல்வர் மாநில வளர்ச்சிக் கொள்கையை உருவாக்க ஒரு‌ குழுவை நியமனம் செய்து உத்தரவிட்டார்.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்‌ துணைத்‌ தலைவராகவும்‌; பேராசிரியர்‌ ராம.சீனுவாசன்‌ முழு நேர உறுப்பினராகவும்‌, பேராசிரியர்‌ ம.விஜயபாஸ்கர்‌, பேராசிரியர்‌ சுல்தான்‌ அஹ்மத்‌ இஸ்மாயில்‌, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர்‌ டி.ஆர்.பி.ராஜா, தொழிலதிபர் மல்லிகா சீனிவாசன்‌, மருத்துவர்‌ ஜோ.அமலோற்பவநாதன்‌, சித்த மருத்துவர்‌ கு.சிவராமன்‌ மற்றும்‌ முனைவர்‌ நர்த்தகி நடராஜ்‌ உள்ளிட்டோர்‌ பகுதி நேர உறுப்பினர்களாகவும்‌ நியமனம்‌ செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டது.

பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்‌ அவர்கள் திராவிட ஆட்சியில் குத்தகைக்கு இருந்த மக்களுக்கு நிலம் உடமையானது பற்றி பேசியிருக்கிறார். மதிய உணவு திட்டத்தின் மூலம் தமிழ் நாடு பிகாரை விட 4 மடங்கு வளர்ச்சிக் கண்டது பற்றியும் பேசியிருக்கிறார். வயிற்று பிரச்சினை மிகமுக்கியமான பிரச்சினை ,பசி நீங்கிய மக்கள் படிப்பு வேலை போன்றவற்றில் கவனம் செலுத்த முடியும். ஆனால் இன்று எல்லாரும் கற்று பட்டதாரிகள் ஆகிவிட்டார்கள் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக நிலவுகிறது. அரசு வேலைகளை 5 லட்சம்,10 லட்சம் என்று கூறு போட்டு விற்கும் அவல நிலை நிலவுகிறது.இந்த வேலயில்லாத் திண்டாட்டம் காரணமாக முதுநிலை பட்டதாரிகள் கூட குலத்தொழில் செய்யும் நிலை நிலவுகிறது.காமராஜர் ஆட்சியில் கல்வியை ஊக்குவித்ததோடு படித்தால் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்ற நிலை இருந்தது.1970 வரை பட்டம் பெற்ற அனைவரும் ஆசிரியர்களாகவோ அல்லது வேறு எதாவது வேலை வாயாப்போ பெற்றார்கள்.ஆசியாவிலே பெரிய அம்பத்தூர் தொழிற்பேட்டை போன்றவைக் கொண்டு வரப்பட்டது. அந்த காலத்தில் படித்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டும் போது தொழிற்சாலைகள்,வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகமாகவே இருந்து உள்ளது. பின்னர் வந்த திராவிட ஆட்சிகள் மக்கள் கல்வி நிலயங்களை நாடி வருவதை அறிந்து பள்ளிகள் ,கல்லூரிகள் தொடங்கி வருமானம் பார்த்த அளவுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. வேலை வாய்ப்புகள் பள்ளிகள், கல்லூரிகளின் மாணவர்கள் எணணிக்கையைப் பொறுத்து திட்டமிடப்படவேண்டும். திமுக ஆட்சியில் யானைப்பசிக்கு சோழப்பொரிபோல தகவல் தொழில்நுட்ப பூங்கா போன்ற சில திட்டங்கள் செயல் படுத்தப்பட்டிருந்தாலும்,ம.கோ.ராமச்சந்திரன் ஆட்சியில் ஒரு அணை கூடக் கட்டப்படவில்லை,மொத்த பொருளாதார மும் இலவச திட்டங்களுக்காக திருப்பி விடப்பட்டு தொழில் வளர்ச்சி பின் தங்கியது என்ற குற்றச்சாட்டு உள்ளது. செயலலிதா ஆட்சியும் அதை மிஞ்சும் வித்தத்தில் எந்த திட்டமும் கொண்டு வராமலே ஊழல் செய்வது எப்படி என்று கற்பிக்கும் ஆட்சியாக இருந்தது. 2006-2011 திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு க்கு 2001-2006 திமுக ஆட்சியில் எந்த மின் திட்டமும் கொண்டு வரப்பட்டததே காரணம் எனக்கூறப்பட்டது.ஆனால் மீண்டும் 20011இல் அதிமுக ஆட்சியில் வந்ததும் அதையே காரணமாக வைத்து தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்தார்கள்.மணல் விலையை ஏற்றி ஊழல் செய்து கட்டுமானத்துறையை முடங்க வைத்து வேலைவாய்ப்பைக் குறைத்தார்கள்.ஏற்கெனவே பலமுறை சொல்லி இருக்கிறேன் மின்துறை அதிக முதலீடுகளுடன் வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாகவும் உள்ளது. மின்நுகர்வே ஒருநாடு வளர்ச்சி அடைந்த நாடா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.ஆனால் இன்று தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி ஊழல் செய்து விட்டு மின்மிகை மாநிலம் என்று பீற்றிக் கொள்கிறார்கள்.முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் கூட மின்மிகை மாநிலம் என்றால் நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்வது வெளியே இருந்து வாங்குவது அல்ல என்று விளக்கம் கொடுத்து இருக்கிறார்.மின்சாரம் தான் அடிப்படை தேவேயாக உள்ளது. மின்சாரம் இல்லாமல் முதலீடுகள் மூலம் தொழிற்சாலைகளைக் கொண்டு வந்ததாலும் மின் வெட்டு விடுப்பு கொடுக்க வேண்டியதுதான்.2006-2011 இல் BHEL உள்ளிட்ட ஆலைகளுக்கு மின்வெட்டு கொடுக்கப்பட்டதை நினைவு கூரவேண்டும்.செயரஞ்சன் அவர்களுக்கு விவசாய கொள்கை மற்றும் திட்டமிடல் கொடுக்கப்பட்டிருந்தாலும் ,அவரே வளர்ச்சிக் குழுவின் (துணை) தலைவராக உள்ளார். எனவே அவர் மின்சாரம் உட்பட மற்ற துறைகளுக்கான ஆலோசனைகளைப் பெற்று முதல்வருடன் இணைந்து செயல் படுத்தி சரியாக கண்காணித்து உரிய காலத்தில் முடிக்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு