ஈழம் தோல்வி ஏன்
ஈழப்போரில் தோல்வி நம்மில் பலருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாகவே உள்ளது. அவ்வளவு ஏன் விடுதலைப்புலிகள் தோற்பார்கள் என்று ராணுவ வல்லுனர்கள்/போர் ஆராய்ச்சியாளர்கள் என யாரும் தோல்விக்கு 1-2 மாதங்களுக்கு முன்பு கூட நினைத்து இருக்க மாட்டார்கள்.இந்த நிலையில் ஈழப்பிரச்சினையின் தோற்றம் என்ன ஈழத்தின் வரலாறு என்ன என்று துவக்கத்தில் இருந்து பார்ப்போம்.நான் விபரம் தெரிந்த சிறுவயதில் இருந்து தழிழ் நாட்டில் மட்டுமே தமிழர்கள் இருக்கிறார்களா ,அருகில் உள்ள நாடுகளில் இல்லையா என்று நினைத்தேன். பின்னர் இலங்கையில் தமிழர்கள் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் பின்னாளில் ஈழத்தமிழர்கள் அனுபவித்த இன்னல்களை பார்த்த பிறகு இலங்கையில் தமிழர்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். முதன்முதலில் நாளிதழில் இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்றவர்கள் அவர்கள் இலங்கையில் தனிநாடு கேட்டு போராடி வருகின்றனர் என்று படித்தேன். இங்கே தான் நிறையபேர் தவறான புரிதலில் உள்ளனர். இலங்கையில் தமிழர்கள் இருவகைப்படுகின்றனர் என்று கூறப்படுகின்றனர்.என்னைப் பொறுத்தவரை ஈழத்து தமிழர்கள், மலையகத் தமிழர்கள், கரையோரத்தமிழர்கள்,சிங்களர்களாக மாறிப்போன தமிழர்கள் என நான்கு வகைப்படுத்தலாம்.இதில் கரையோரத் தமிழர்கள், வடக்கு, கிழக்கு மாகாணத்தமிழர்கள் இலங்கையின் மண்ணின் மைந்தர்கள்.சிங்களர்கள் குடியேறும் முன்னரே ஈழத்தில் குடியேறியவர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக