மாநில வளர்ச்சிக் கொள்கைக்‌ குழு உறுப்பினர் ஒரு பார்வை-. ஆர்.சீனிவாசன்‌ - திட்ட ஒருங்கிணைப்பு.

திரு.சீனிவாசன் திட்ட ஒருங்கிணைப்பு பொறுப்பாளரக நியமிக்கப்பட்டிருக்கிறார்.செயல்படுத்த ப்படும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைப்பவராக இவர் இருப்பார் என நினைக்கிறேன். அப்படி பார்த்தால் துணைத்தலைவர் மாதிரி வருகிறார். என்ன ஒருங்கிணைக்க போகிறார்கள் என தெரியவில்லை. சென்னை மெட்ரோ ரயிலில் தொடங்கும் போது பேருந்து ,புறநகர் ரயில், மெட்ரோ ரயில் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்ய வைப்போம் என்று சொன்னார்கள், அந்த மாதிரி ஒருங்கிணைக்க போகிறார்களோ?இல்லை ஒவ்வொரு மாவட்டங்களிலும் செய்ய வேண்டிய வளர்ச்சிப் பணிகள்/தொழில் முதலீடூகளுக்கு முன்னால் கொண்டு வரப்பட்ட வேண்டிய சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள், அதனால் ஏற்படும் மக்கட் பெருக்கத்தினை பெருநகரங்களில் சமாளிக்க கொண்டு வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்றவற்றை முன்கணித்து கொண்டு வருவது பற்றியது என்றால் மகிழ்ச்சி.   இவரும் பொருளாதார பேராசிரியராக இருந்திருக்கிறார் . நான் ஏற்கனவே ஒரு முறை சொன்னேன்  சீனாவின்  அதிவேக  வளர்ச்சிக்கு  சீனா ஆட்சிமன்றக் குழுவில் பொறியாளர்களும் அறிவியல் பட்டதாரிகள் நிறைந்திருந்ததே  காரணம் . ஆனால் தமிழக மாநில வளர்ச்சி  குழுவில் பெரும்பாலும் பொருளாதார  பேராசிரியர்களே  இருக்கிறார்கள் . உங்களுக்குத் தெரியும் சமீப ஆண்டுகளில் பொறியியல் துறையில் ஏற்பட்ட வளர்ச்சியே அதன் பின்னர்  வணிகவியல் பட்டம் பெற்றவர்களின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது அதன் பின்னரே வணிக வளாகங்கள் வந்து கடைகள் வேலைவாய்ப்புகள் பெருகின . பொறியியல் துறை வளர்ந்த பின்பு அதனை இணைந்து இணைந்து வளரும் துறைகளாக பொருளாதாரம் மற்றும் வணிகத் துறைகளில் வளர்ச்சி பெற்றன .  தமிழ்நாடு மாநில குழு  மாவட்ட அளவில் விரிவாக்கம்  செய்யப்பட  வேண்டும் அப்பொழுது பொறியாளர்கள்  மற்றும் ஓய்வு பெற்ற பொறியாளர்கள்  சேர்க்கப்படவேண்டும், மெட்ரோ ரயில் துறைமுகம் போன்ற பொறியியல் திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு