மாநில வளர்ச்சி குழு உறுப்பினர்கள் ஒரு பார்வை தொடர்ச்சி -3(மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு பார்வை)
மாநில வளர்ச்சி குழு பற்றி ஏற்கனவே பார்த்தோம் பெரும்பாலும் பொருளாதார வல்லுனர்கள் இருக்கிறார்கள். ஆனால் பொறியியல் வல்லுனர்கள் இல்லை .அது ஒரு பெரிய பின்னடைவு தான் சீனா எவவளவு பெரிய பொருளாதார வல்லரசாக உருவாவதற்கு அதன் கட்டுமானம் குறிப்பாக மின்சார அலைகள், அதிவிரைவு தொடர்வண்டிகள், சாலைகள் ,விமானநிலையம் காரணம். இவற்றை அமைப்பதற்கு அமைப்பதற்கு பொறியியல் வல்லுனர்களை காரணம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி மன்ற குழுவில் பொறியாளர்களும், அறிவியலாளர்களும் நிரம்பி வழிந்ததே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதுபோல தமிழ்நாட்டிலும் பொறியியல் வல்லுநர்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவானது எந்த மாவட்டங்களில் எவ்வளவு அணைகளை கட்ட வேண்டும். அந்த அணைகளை ஒட்டி எவ்வளவு மின்சாரம் தயாரிக்கலாம், எந்த கடற்கரை மாவட்டங்களில் துறைமுகங்கள் அமைக்கலாம்,அந்த துறைமுகங்களை ஒட்டி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கலாம். மற்றும் எந்தெந்த மாவட்டங்களில் சூரிய ஒளி மின்சக்தி அமைக்கலாம் என்று முடிவு செய்து தொடர்ந்து கட்டுமானத்துறையில் முன்னேற்றிக் கொண்டு செல்ல வேண்டும் மேலும் வளர்ச்சி குழுவிலுள்ள பொருளாதார வல்லுனர்கள் பலர் நோபல் பரிசு பெற்றவர்கள் ,மற்றும் நிறையபேர் தமிழ்நாட்டைப் பற்றி தெரியாதவர்கள், அறிமுகமில்லாதவர்கள். இனிமேல் தான் தமிழ்நாட்டைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாக சொல்கிறார்கள். தமிழ்நாடு பற்றிய அறிவு உள்ளவர்கள் தமிழ்நாட்டை பற்றிய அறிவு உள்ளவர்கள், ஏற்கனவே தமிழகத்தின் வளர்ச்சி பற்றி சிந்தித்து எழுதியவர்கள், பேசுகிறவர்கள் போன்றவர்கள் நியமித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் மேலும் மல்லிகா ஸ்ரீனிவாசன் போன்றவர்களை நியமித்திருக்கிறார்கள், வளர்ச்சிக் குழுவானது ஆலோசனை குழுவாகவே இருக்கிறது .இதனை செயல்படுத்தும் ஒரு குழுவை வேண்டும் தொழிலதிபர்கள் இடம்பெற செய்து இருப்பது நல்லதுதான் ஆனால் தொழிலதிபர்கள் தங்களது வேலைகளை விட்டு விட்டு இறங்கி வேலை செய்ய முடியாது .எனவே இந்த ஆலோசனைக் குழுவோடு இன்னொரு செயல்படுத்தும் குழு அமைக்கவேண்டும். அந்தக் குழு பொறியாளர்கள் ,அறிவியலாளர்கள் நிரம்பியதாக இருக்கவேண்டும் அந்தக் குழுவே களத்தில் திட்டங்களை எடுத்துச் செல்வதாகவும் இருக்க வேண்டும். மேலும் நர்த்தகி நடராஜ் அவர்களைஆலோசனைக் குழுவில் நியமித்து இருக்கிறார்கள் அவர்கள் நடனக்கலைஞர் என்று எனக்கு தெரியும் அவர் பொருளாதாரம் பற்றிய ஆர்வம் உள்ளவராக ஏதாவது புத்தகங்கள் எழுதி இருக்கிறாரா, என்பது தெரியவில்லை ஆனால் நடனக்கலைஞர் என்பதற்காகவே அவர் நியமித்து இருந்தால் அது நல்லதல்ல இந்தியா டுடே தொழில் மாநாடு போன்றவற்றின் போது ஐஸ்வர்யா ராயை அழைத்துப் பேச வைத்தார்கள் வாசகர்களை கவர்வதற்காகவும், வியாபாரத்திற்காகவும், நடைபெறக்கூடிய ஒரு சம்பவம். அதுபோன்று நிகழ்வுகள் இந்த ஆலோசனைக் குழுவை தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து.
கருத்துகள்
கருத்துரையிடுக