கோயம்புத்தூர் மதுரை திருச்சி நெல்லை சேலம் மெட்ரோ ரயில் திட்டங்கள் ரத்து?
திமுக தேர்தல் அறிக்கையில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், ஆகிய இடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை. இந்த நகரங்களில் பெருந்திரள் போக்குவரத்து கொண்டு வரப்படும் என்கிறார்கள்.பெருந்திரள் போக்குவரத்து எனக்கு பிடிபடவில்லை ,தெரிந்தவர்கள் கூறலாம் .இது மிகுந்த கண்டனத்திற்குரியது. திமுக 1996 இல் தோற்றதற்கு காரணம் இதுவே தான். சென்னையில் அவர்கள் 14 தொகுதிகளில் 11 வென்றார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொகுதகளில் 23 முதல் 25 தொகுதிகளில் மட்டுமே வென்றார்கள். காரணம் அவர்கள் எல்லா திட்டங்களையும் சென்னையில் செய்ததுதான். இப்போதும் அதே பாதையில் பயணிக்கிறார்கள் .இது மொத்த தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தாகவே முடியும் . ஏற்கனவே கோயம்புத்தூரை விட குறைவான மக்கள் தொகை கொண்ட கொச்சியில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது .கோயம்புத்தூர் ,மதுரை ,சென்னை ,மதுரை, திருநெல்வேலி ,சேலம் ஆகிய 6 இடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வருவோம் என்று அறிவித்திருந்தார்கள். மத்திய அரசின் அறிவுரைப்படி குறைந்தது 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் கொண்டு வரமடியும். அப்படிப் பார்த்தால் திருநெல்வேலியில் 10 லட்சத்திற்கும் குறைவாக மக்கள் தொகை இருப்பதால் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர முடியாது. திருப்பூர் 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரம் என்பதால் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் கொண்டு வரமுடியும். தேர்தல் அறிக்கையிலேயே அவர்கள் தவறு செய்திருந்தார்கள் திருப்பூர் தான் இடம் பெற்றிருக்க வேண்டும் திருநெல்வேலி இடம் பெற்றிருக்க கடாது. இது தமிழ்நாட்டின் முக்கிய கட்சியான திமுக விற்கு தமிழ்நாட்டின் நகரங்களைப் பற்றிய அறிவின்மையே காட்டுகிறது. ஆனால் தவறை திருத்துவதற்காக அவர்கள் நெல்லையில் அதை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து 10 லட்சம் கொண்ட நகரமாக மாற்றி விட்டு மெட்ரோ ரயில் கொண்டு வந்திருக்கலாம் .ஆனால் அவர்கள் கோவை , திருச்சி ,மதுரை, சேலம் போன்றவற்றிற்கு மெட்ரோ ரயில் திட்டம் இப்போது இல்லை என்பதை போல்தான் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். பெருந்திரள் போக்குவரத்து எனக்கு தெரிந்தவரை ஏமாற்று வேலைதான். உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் .ஏற்கனவே லக்னோவில் மெட்ரோ ரயில் திட்டம் வந்துவிட்டது அதற்கடுத்ததாக கான்பூர் அலகாபாத் உள்ளிட்ட 5 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளது. அப்படிப்பார்த்தால் பின்தங்கிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மட்டும் இரண்டு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் உள்ளது தமிழ்நாட்டில் சென்னையில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் உள்ளது. தமிழ்நாடு அரசு கவர்னர் அறிக்கையில் இதை அறிவிக்காவிட்டாலும் , ஸ்டாலின் வரும் நாட்களில் இந்த திட்டங்களை அறிவிக்க வேண்டும். சென்னை மெட்ரோ ஏற்கனவே உள்ளது .சென்னை மெட்ரோ விரிவாக்கம், கோயம்பத்தூர் மெட்ரோ திட்டம், சேலம், திருப்பூர், திருச்சி ,மதுரை, மெட்ரோ திட்டங்கள் மற்றும் நெல்லை நகரை விரிவாக்கி, நெல்லை மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும். அப்போது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி சீராக செல்லும். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 3 கோடியே 90 லட்சம் தமிழ்நாட்டை விட பகுதி தான் ஆனால் அங்கேயே லாஸ் ஏஞ்சல்ஸ் ,சான் பிரான்சிஸ்கோ போன்ற இரண்டு முக்கிய மெட்ரோ நகரங்கள் உள்ளன. சென்னையில் உள்ளது போல் 10க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. இதனால் தான் கலிபோர்னியா ஜிடிபி( மொத்த உள்நாட்டு உற்பத்தி) ஆனது கிரேட் பிரிட்டனை விட ஒன்றரை மடங்கு அதிகமாக உள்ளது ஆனால் பிரிட்டனின் மக்கள் தொகை கலிபோர்னியா விட சுமார் ஒன்றே முக்கால் மடங்கு அதிகம் சுமார்(6.5 கோடி மக்கள் தொகை) தமிழ்நாட்டில் தற்போது வரை சென்னை மட்டும் மெட்ரோ நகரமாக உள்ளது. கோவை மதுரை ,திருச்சி இரண்டாம் நிலை நகரங்கள் ஆக உள்ளது .அதற்கு அடுத்த நகரங்களாக திருப்பூர், சேலம் உள்ளது .இந்த மெட்ரோ ரயில் திட்டங்களை அறிவித்தால் இந்த நகரங்கள் எல்லாமே முழு அளவிலான மெட்ரோ நகரங்கள் மற்றும் முதலீடுகள் அதிகரிக்கும் நகரங்களாக மாறும். வேலைவாய்ப்பு அதிகரிக்கும் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளரும். இல்லை பழையபடி சென்னை மட்டுமே சுற்றி நாங்கள் திட்டங்களையெல்லாம் கொண்டு வருவோம் என்றால் , சென்னையில் மக்கள் தொகை அதிகரித்து சுகாதார சீர்கேடுகள் மலிந்து டெங்கு ,சிக்கன் குனியா போன்ற நோய்கள் பெருகி தமிழ்நாடு முழுவதும் பரவும். கடந்த காலங்களில் திமுக தோற்றது போல் இந்த முறையும் தோல்வியடைய வேண்டி வரும் முன்பு அவர்கள் சென்னையில் மட்டும் வென்றார்கள் ஆனால் இப்போது அவர்கள் சென்னையிலே வெற்றி பெற பாடுபட வேண்டி உள்ளது .அதற்கு காரணம் சென்னை மக்கள் தொகை அதிகரித்து விட்டதால் அவர்கள் சென்னைக்கு நிறைய செய்ய வேண்டியது உள்ளது. சுகாதாரம் உட்பட நிறைய துறைகளில் செய்ய வேண்டிய பணிகள் அதிகரித்துவிட்டது. அதைக்கூட திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை எனவே தான் அவர்கள் சென்னையிலும் தொடர்ந்து தோற்கிறார்கள். பெரும்பாலும் தற்பொழுது நிலவரப்படி அவர்கள் சென்னையில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே வெல்கிறார்கள் .ஆளுங்கட்சியாக இருக்கும்போது பகுதி தொகுதிகளில் வெற்றி பெற்றாலே பெரிய சோதனையக மாறிவிட்டது
கருத்துகள்
கருத்துரையிடுக