அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் வாங்கி மோசடி.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக செந்தில்பலாஜி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது .பொதுவாகவே வேலைகளுக்கு பணம் வாங்குவது அதிமுக ஆட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது என்று நினைக்கிறேன். எனக்கு தெரிந்து திமுக ஆட்சியில் பணம் எதுவும் கொடுக்காமல் நிறைய பேர் வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். சில சமயங்களில் அவர்கள் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை தெரிந்து சில புரோக்கர்கள் நாங்கள் உங்களுக்கு வேலை எடுத்துத் தருகிறோம் என்று தகுதி அடிப்படையில் தேர்வானவர்களிடம் கூட பணம் வாங்கும் செயல்கள் நடைபெறுகிறது. அரசு வேலைக்கு பணம் வாங்குவது அடியோடு ஒழிக்க வேண்டும். தமிழ் நாட்டில் ஏழை எளிய வாழ்வில் முன்னேற காரணம் காமராஜர் காலத்திலிருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்டு வந்த வேலை வாய்ப்பு. இதனால் ஏழை எளிய மக்கள் வீடு இல்லாதவர்கள் ,ஓட்டு வீட்டில் இருப்பவர்கள் ,கூரை வீட்டில் இருப்பவர்கள் எல்லாமே வேலை பெற்று வாழ்க்கை வளர்ச்சி அடைந்தது. ஆனால் இப்பொழுது 5 லட்சம் 10 லட்சம் என்று பணம் வாங்குவது ஏழை மக்கள் அரசு அரசு வேலைக்கு வருவதை தடுப்பதோடு மிகப் பெரிய சமூகப் சமூக பொருளாதார பின்னடைவிற்கு வழிவகுக்கும். இத்தனைக்கும் கடன் வாங்கிக் 5 லட்சம், 10 லட்சம் கொடுத்து இந்த மாதிரி ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்வது , கூலிவேலை செய்வதுகடனை அடைக்க வெளிநாடுகளுக்கு செல்வது , போன்ற செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அரசு வேலைக்கு பணம் வாங்குவதை முற்றாக ஒழிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் எதிர்க் கட்சிகளின் செயல்பாடு மிக மோசம் தயாநிதி மாறன் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தபோது எதிர்க்கட்சிகள் அவர் மீது நாடாளுமன்றத்தில் அமளி செய்து அவரை பதவி விலகச் செய்தன. அதேபோல் சசி தரூர் ஐபிஎல் ஊழல் செய்த போதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவரை ஈடுபட்டு அவரை பதவி விலக்கி வைத்தனர். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் இதுபற்றி குரல் கொடுத்தது போலவே தெரியவில்லை. மேலும் இன்னொன்று செந்தில் பாலாஜி பணத்தை இழந்தவர்களுக்கு பணத்தை கொடுத்து இப்பொழுது நீதிமன்ற வழக்கில் இருந்து விடுபட்டு வெளியே வந்திருக்கிறார் .எப்படியோ பணம் கொடுத்தவர்களுக்கு பணம் கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும் ,ஏமாந்து வழக்கு தொடராமல் இன்னும் எத்தனையோ பேர் இருப்பார்கள். அவர்கள் பணம் கொடுத்து ஏமாந்து ஆண்டுக்கணக்காக இதற்காக எவ்வளவு செலவு, வட்டி கொடுத்து இருப்பார்கள் .அதற்கு ஈடாக இழப்பீடு கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. என இந்த மாதிரி வேலைக்கு பணம் வாங்கி ஏமாற்றும் செயல்கள் நடைபெறாமல் பார்த்த கொள்வது முக்கியம். எதிர்க்கட்சிகளும் பொறுப்புடன் செயல்பட்டு ஊழல் அமைச்சர்கள் பதவி விலக போராட்டங்களில் ஈடுபட வேண்டும். திமுக திமுக அதிமுக நாம் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் தானே செய்யப்போகிறோம் என்று இருந்தாலும் , மற்ற சிறு சிறு கட்சிகளும் மூன்றாம் நிலை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு ஊழலை தடுக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக