ஒலிம்பிக் ஒரு பார்வை

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற மகிழ்ச்சியில் கடலில் ஆழ்த்தி இருக்கிறார. ஒலிம்பிக் போட்டிகள் பெரும்பாலும் வெண்கலம் வாங்குவதே 1996,2000  ஆண்டுகளில் பெரிய விஷயமாக இருந்தது .ஆனால் தற்போது இரண்டாவது முறையாக தங்கம்  வாங்கியிருக்கிறார்கள் .இவை அனைத்திற்கும் அவர்களது தனிப்பட்ட முயற்சியே காரணம் . அரசாங்கத்தின் பெரிய ஊக்குவிப்பு ஒன்றும் கிடையாது. தமிழக ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கும் பதக்கம் வென்றால் ஒரு கோடி, இரண்டு கோடி, 3 கோடி என்று ஸ்டாலின் அறிவித்திருந்தர் . ஆனால் கடைசி நேர அறிவிப்புகள் பெருமளவில் பலன் கொடுக்கவில்லை. ஊக்குவிப்பு மிக முக்கியம் ,கலந்து கொள்பவர்களுக்கும் பரிசு கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் .அது அவர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று நினைத்தேன் .அதே போல் ஸ்டாலின் 5 லட்சம் பரிசு கலந்து கொள்பவர்களுக்கு அறிவித்தார். அனால் பணம் அவர்களுக்கு இதுவரை கிடைத்ததா இல்லையா எனக்கு என்று தெரியவில்லை .பொதுவாகவே தமிழ்நாட்டை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரிட்டன்  போன்ற நாடுகள் பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் வந்துவிட்டனர், இந்தியா 45 தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழ்நாடு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்றால் தொடர்ந்து ஊக்குவிப்பது அவசியம்.  இது வரை தமிழ்நாடு வீரர்கள் வீரர்கள் யாரும் தனிநபர் போட்டிகளில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதில்லை. 1980 இல்  தங்கம் வென்ற ஹாக்கி  அணியின்  கேப்டனாக இருந்தவர் தமிழரான பாஸ்கரன் என்று நினைக்கிறேன் .1996, இரண்டாயிரம் ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால்  ஆக்கி நிர்வாகத்தின் மோசமான செயல்பாடுகள் காரணமாக வாங்க முடியவில்லை. ஆசிய போட்டிகளில் வெற்றி பெற்று வரும்போது வீரர்களை கேவலப்படுத்துவது போன்ற ஹாக்கி அமைப்பின் செயல்பாடுகள் இருந்தன. கில் நிர்வாகத் தலைவராக இருந்தார். அவர் ஐஏஎஸ் அதிகாரி என்று கூறினார்கள். அவரின் மோசமான செயல்பாடுகளே ஹாக்கி அணியின் தோல்விகளுக்கு காரணம். தற்போது ஹாக்கி அணி பற்றி பேச்சு இல்லாத நேரத்தில் ஹாக்கி அணி பதக்கம் வாங்கி வந்துள்ளது.  நாற்பத்தொரு ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்றது நிறையபருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கும் வருங்காலத்தில் தங்கம் ,வெள்ளி போன்ற பதக்க வேட்டையை தொடர வாழ்த்துக்கள். தமிழக அரசும் ஹாக்கி போட்டிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்று ஹாக்கி போட்டிகளை தமிழக அளவில் நடத்த வேண்டும். பெரும்பாலும் அரசாங்கத்தின் ஆதரவு இல்லை என்றாலும் வீரர்கள் வெற்றி பெற்ற பிறகாவது நமக்கு கோடிக் கணக்கில், லட்சக்கணக்கில் பரிசு தொகை கிடைக்கும் என்ற  ஒரே ஒரு நம்பிக்கை வைத்து  மட்டுமே வெற்றி பெற்று வருகிறார்கள். ஆனால் பதக்கம் பெறும் முன்பே ஊக்குவித்தால் அவர்கள் இதை விட சிறப்பாக செயல்படுவார்கள். தமிழக அரசும் தமிழக வீரர்களைத் தேர்ந்தெடுத்து தேசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு குறைந்தது 5, 10, 15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். மேலும் கலந்து கொள்பவர்களுக்கும் 2 லட்சம் முதல் 3 லட்சம் என்ற அளவில் கொடுக்கலாம் இதன் மூலம் நிறைய ஊக்குவிப்பு கிடைத்து அவர்கள் பதக்கப்பட்டியலில் தமிழகத்தின் சார்பில் நிறைய பதக்கம் வாங்க வாய்ப்பு உணடு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு