ஒலிம்பிக் அமெரிக்கா முதலிடம்
ஒலிம்பிக் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருந்தது, ஆனால் எப்படியும் அமெரிக்கா முதலிடம் பிடிக்கும் என்று நினைத்தேன். கடைசி நாளுக்கு முந்தின நாள் கூட பதக்கப் பட்டியலில் சீனா முன்னிலை வகித்தது. இருந்தாலும் கடைசி நாளில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்று நினைத்தேன் அதைப்போலவே பிடித்தது. 2008ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் மட்டும் சீனா முதலிடம் பிடித்துள்ளது . 2012ஆம் ஆண்டு நண்பருடன் லண்டன் ஒலிம்பிக் பார்த்துக் கொண்டிருக்கும்போது நண்பர் சொன்னார் இந்த முறையும் சைனா முதலிடம் பிடிக்கும் என்று .நான் சொன்னேன் இல்லை அமெரிக்கா தான் முதலிடம் பிடிக்கும் கடந்த முறை ஒலிம்பிக் சைனாவில் நடந்ததால்தான் முதலிடம் பிடித்தது என்று .அதை அவர் ஒத்துக் கொள்ளவில்லை ஆனால் நான் சொன்னது போலவே நடந்தது சைனாவை முந்தி அமெரிக்கா முதலிடம் பிடித்தது. பின்னர் 2016 ஒலிம்பிக்கில் முதலில் சில நாட்கள் சீனா முன்னிலையில் இருந்தாலும் பின்னர் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. அதுபோல் இந்த ஒலிம்பிக் ஆசியாவில் நடந்ததால் தொடக்கம் முதலே சீனா ஆதிக்கம் செலுத்தியது ஜப்பான் மூன்றாவது இடத்தில் வந்தது . கடைசி நாள் அமெரிக்கா முதலிடத்தை பிடித்து நீண்ட காலமாக முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு போட்டியாக இருந்த ரஷ்யா இந்த முறை போதைப்பொருள் குற்றச்சாட்டால் இடம்பெறவில்லை . ரஷ்யன் ஒலிம்பிக் கமிட்டி இடம்பெற்று ஓரளவு பதக்கங்களைப் பெற்றது. இதற்கு முன்பு 2008 ஒலிம்பிக்கில் முன்புவரை ரஷ்யா உடன் சைனா போட்டி போட்டது. இதே போன்ற கடைசி நாட்களில் சில சில பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தை ரசியா தக்க வைத்துக் கொண்டது .தற்போது சீனா முதலிடத்தில் அமெரிக்காவுடன் போட்டி போட்டு கடைசி நாட்களில் தோற்று வருகிறது விளையாட்டுகளை போர் என்று சொல்வார்கள் . இங்கேயும் வல்லரசு நாடுகளே ஆதிக்கம் செலுத்தினார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக