தமிழ்நாடு நிர்வாகம் முழு பதிப்பு பாகம் 1

தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலுார், குடந்தை, சிவகாசி ஆகிய ஆறு நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தமிழக அரசு தரம் உயர்த்தியுள்ளது.
காஞ்சிபுரம், கரூர், கடலுார், குடந்தை, சிவகாசி ஆகியவை 5 லட்சம் மக்கள் தொகை கொண்ட வட்டங்கள்(தாலுகா) என்பதால்  மாநகராட்சியாக அறிவித்ததில் தவறு இல்லை.5 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் கொண்ட தாலுகாக்களை மாவட்ட தலை நகர் தாலுகாக்களை மாநகராட்சியாக அறிவித்து பின்னர் தலைநகர் அல்லாத கும்பகோணம் ணபோன்ற 5 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் கொண்ட நகர்களை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பது என்னனுடைய கருத்து. ஆனால் சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறேன். இந்தியவில் அதிக வருமானம் அரசுக்கு ஈட்டித்தரும் மாவட்டமாக விருதுநகர் இருப்பதற்கு காரணம் சிவகாசி நகரமே ஆகும் நியாயப்படி பார்த்தால் சிவகாசி தலைநகர் ஆகியிருக்க வேண்டும் .ஆனால் காமராஜர் பிறந்த ஊர் என்பதால் விருதுநகரை தலைநகர் ஆக்கிவிட்டார்கள் .இதனால் சிவகாசியின் வளர்ச்சி தடைபட்டது. சிவகாசி அரசுக்கு அள்ளி தந்த வருமானம் ,சிவகாசிக்கு அடிப்படை தேவைகளாக, உட்கட்டமைப்பு தேவைகளாக திரும்பி வரவில்லை இருந்தாலும் சிவகாசி 1 லட்சம் பேருக்கு மேல் வேலை கொடுக்கும் நகரமாக உள்ளது மற்றும் சிவகாசி ஐந்து லட்சம் பேருக்கு பேருக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட தாலுகாவாக உள்ளது எனவே சிவகாசியை மாநகராட்சி ஆக்குவதன் மூலம் சிவகாசியில் அடிப்படை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிவகாசியில் மிக விரைவாக வளர்ச்சியடையும். தென் தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடிக்கு அடுத்த தலைசிறந்த நகரமாக சிவகாசி விளங்கும்.

சிவகாசி மாநகராட்சி பற்றிய மீண்டும் பார்ப்போம். சிவகாசி வருங்காலத்தில் மாவட்ட தலைநகராகவும் வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் விருதுநகர் மாவட்டம்  தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாக சுமார் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு மேல் உள்ளது மற்றும் மக்கள் தொகை சுமார் 17 லட்சம் 2011 இல். இப்போது 20 லட்சமாக இருக்கலாம் மற்றும் தற்பொழுது 3 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருவதால் 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தலைநகராகக்கொண்டு வருங்காலத்தில் புதிய மாவட்டம் வரவும் வாய்ப்புள்ளது அப்போது திருப்பூர் போல் சிவகாசியை வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது .

கும்பகோணம்.
மற்றொரு மாநகராட்சி கும்பகோணம். கும்பகோணத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக  தனி மாவட்ட கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் மாநகராட்சி கோரிக்கை வைக்கவில்லை .ஆனால் அரசாங்கம் அவற்றை மாநகராட்சி அறிவித்துள்ளது இது சற்றே வேடிக்கையானது, கும்பகோணம் கூட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தாலுகா தான் , இருந்தாலும் மாவட்டத் தலைநகராக இல்லாததால் நான்  முதல்வராக இருந்தாரல்  மாவட்ட தலைவராக அறிவித்து விட்டு பின்னர் 5 ஆண்டுகள் கழித்து மாநகராட்சியாக அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சுமார் ஏழு லட்சம் மக்கள் தொகை கொண்ட தாலுகாக்களான திருவண்ணாமலை, விழுப்புரம் போன்றவற்றை மாநகராட்சியாக கோரிக்கை வைத்தும் அவற்றை அவர்கள் மாநகராட்சி ஆக்காமல் அதைவிட குறைந்த மக்கள் தொகை கொண்ட தாலுகாவான கும்பகோணத்தை மாநகராட்சி ஆக்கியிருக்கிறார்கள் இத்தனைக்கும் கும்பகோணம் மாவட்ட தலைநகர் வேறு கிடையாது . அதேபோல் காரைக்குடியை மாவட்டத் தலைநகரமாக கோரிக்கை இருந்தபோதும் மன்னிக்கவும் மாநகராக கோரிக்கை கோரிக்கை இருந்தபோதும் ஆக்கப்படவில்லை அதற்கு அவர்கள் கூறும் காரணம் மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே மாநகராட்சி ஆக்க முடியும் என்று. ஆனால் ஏற்கனவே மாவட்டத் தலைநகர் அல்லாமல் ஓசூர் மாநகராட்சி ஆக்கிவிட்டார்கள். இப்பொழுது அறிவிக்கப்பட்ட 2 மாநகராட்சிகளில் சிவகாசி கும்பகோணம் ஆகியவை மாவட்ட தலைநகர் கிடையாது .அப்படி இருந்தும் மக்கள் கோரிக்கை வைத்த காரைக்குடி மாநகராட்சி ஆக்கவில்லை காரைக்குடி கூட சிவகங்கை மாவட்டத்தில் பெரிய நகரமாக இருந்தாலும் சிவகங்கை அங்கு தலைநகராக உள்ளது எனவே காரைக்குடியை மாநகராட்சி ஆக்குவதன் மூலம் காரைக்குடி மாநகராட்சியும வளர்ச்சி அடைய முடியும்.
தாம்பரத்தை மாநகராட்சி ஆக்கியிருக்கிறார்கள் தாம்பரத்துடன் பல்லாவரம் போன்ற பகுதிகளை இணைத்திருக்கிறார்கள் .இதற்கு பல்லாவரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் அவர்கள் கூறும் காரணம், ஏற்கனவே ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போதும் அங்கே பெரிய வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்பதே. எனவே பல்லாவரம் பகுதியை தாம்பரம் மாநகராட்சியுடன் நினைப்பதை விட சென்னையுடன் இணைப்பது நல்லது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கோரிக்கை நியாயமானது காரணம் சென்னை அளவிற்கு மற்ற மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் கவனிக்க படுகிறதா என்பது சந்தேகமே, சென்னை பெருநகர வளர்ச்சி தமிழ்நாட்டில் ஒரே பெருநகர வளர்ச்சி குழுமம் ஆக இருந்து வந்தது .தற்போது கோயம்புத்தூர் இரண்டாவது பெருநகராட்சி குழுமமாக ஆக்கப்பட்டுள்ளது என்னைக் கேட்டால் மதுரை, திருச்சி ,சேலம் திருப்பூர் போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களையும் பெருநகர வளர்ச்சி குழுமமாக அறிவிக்க வேண்டும். என்பதே என்னுடைய கருத்து, வெளிநாடுகளை எடுத்துக்கொண்டால் சுமார் 5 லட்சம் கொண்ட நாட்டின் தலைநகர்கள் கூட பெரு நகரங்களாக உள்ளன .அவற்றின் மெட்ரோ ரயில்கள் விமான நிலையங்களில் பயணிகள் கையாளும் திறன் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட சென்னைக் இணையாக உள்ளது. மத்திய அரசும் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில்கள் தொடங்கலாம் என்று அறிவித்து இருக்கிறது எனவே மதுரை சேலம் திருச்சி திருப்பூர் போன்றவற்றையும் பெருநகர குழுமங்களாக அறிவித்து மெட்ரோ ரயில் போன்ற சேவைகளை கொண்டு வந்து வளர்ச்சி அடையச் செய்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சென்னை மாவட்டம் 46 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக 2011-இல் இருந்தது தற்போது  அருகில் அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பகுதிகளை இணைத்து சென்னை மாவட்டத்தை 76 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக மாற்றி இருக்கிறார்கள். இது மூன்று வருவாய் வட்டங்களாக மாற்றியிருக்கிறார்கள். அம்பத்தூர் தலைமையிடமாக கொண்டு ஒன்று, தண்டையார்பேட்டை கொண்டு தலைமையிடமாகக் கொண்டு வட சென்னை,கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு தென்சென்னை.  அதை கொண்டிருக்கிறது .3 வருவாய் வட்டங்கள் ஆக இருந்தாலும் அது ஒரே மாநகராட்சி ஆகத்தான் இருக்கிறது. ஒரே மாநகராட்சியாக சென்னை முழுவதையும் ஒரு மாநகராட்சி தலைவர், ஒரு அதிகாரி  கையாள முடியுமா என்ற சந்தேகம் நெடுங்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது ,அது உண்மையே சென்னையை பொறுத்தவர வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளை மூன்று மாநகராட்சியாக பிரிக்க வேண்டும் .அப்படி பிரித்தால் ஒவ்வொரு மாநகராட்சியும் சுமார் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட தாக இருக்கும். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் நாடாளுமன்ற தொகுதியில்  பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகள் சென்னை பெருநகரத்தில் உள்ளே வருகிறது உதாரணமாக தாம்பரம் ,பல்லாவரம், அம்பத்தூர் போன்ற  குறைந்தது ஐந்து சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் மட்டுமே பெருநகரத்திற்கு வெளியே வருகிறது இந்த ஐந்து தொகுதிகளை இணைத்து சென்னை மேற்கு என்று தனி மாநகராட்சி உருவாக்கலாம். அதேபோல திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளான பூந்தமல்லி ,  மாதவரம் ,ஆவடி போன்றவற்றை இணைத்து சென்னை வடமேற்கு என்ற ஒரு மாநகராட்சி உருவாக்கலாம். 5 ஐந்து மாநகராட்சி களை உருவாக்கி அவை அனைத்தையும் ஒரே பெருநகராட்சி குழுமத்தின் கீழ் கொண்டு வரலாம.இது சென்னையின் வளர்ச்சிக்கு மிக மிக உதவும். சிறிய நாடுகள், சிறிய மாநிலங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது போல் சென்னை 5 மேயர்கள் 5  துணைமேயர்கள், 5 மாநகராட்சி அதிகாரிகளை கொண்டு சிறப்பாக நிர்வகிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் 70 லட்சம் பேர் கொண்ட மாநகராட்சியாக இருப்பது ,ஒரு மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரி கையாள்வது கடினம்.
சென்னை மாநகராட்சி 5 மாநகராட்சி பிரிக்கப்பட வேண்டும் என்று கூறினேன் .ஆனால் எப்படி  பிரிப்பது என்று இதுவரை கூறவில்லை வட சென்னை ,தென் சென்னை ,மத்திய சென்னை என்ற மூன்று நாடாளுமன்ற தொகுதிகளை தனியாக கொண்டு மூன்று மாநகராட்சிகள் .இப்படிப் பார்த்தால் ஒவ்வொரு மாநகராட்சியும் இருபதிலிருந்து இருபத்தைந்து லட்சம் மக்கள் கொண்டதாக இருக்கும். மதுரை கோயம்புத்தூரின் மக்கள் தொகையே அவ்வளவுக்கு வராது .அதற்கு அடுத்தது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உட்பட்ட அம்பத்தூர் ,மதுரவாயல், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் சட்டமன்ற தொகுதிகளை கொண்டு சென்னை மேற்கு என்ற மாநகராட்சி அமைக்கப்பட வேண்டும். இதன் மக்கள்தொகை குறைந்தபட்சம் 15 முதல் 20 லட்சமாக இருக்கும், இது 2001 கணக்கெடுப்பின்படி 15 லட்சம் இருக்கலாம் ஆனால் இது தொழில் வளர்ச்சியின் மூலம் வேகமாக வளர்ந்து வரும் பகுதி என்பதால் இப்போது 20 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியாக இருப்பதற்கு வாய்ப்பு உண்டு.
 அடுத்ததாக திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் சென்னை மாநகராட்சி பகுதிகளான அவடி ,மாதவரம், பூந்தமல்லி, ஆகிய சட்டமன்ற தொகுதிகள்,பொன்னேரி, கும்மிடிப்பூண்டியின் சில பகுதிகள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் வருகின்றன, அவற்றை இணைத்து சென்னை வடகிழக்கு என்ற தனி மாநகராட்சியை உருவாக்கலாம்.இதன் மூலம் 20-30 லட்சம் மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகள் கிடைக்கும். இந்த ஐந்து மாநகராட்சிகளை 5 மாவட்டங்களாக அறிவித்து ,சென்னை-5 மாநகராட்சி மற்றும் 5 மாவட்டங்கள் கொண்டதாகவும் ,ஒரு பெருநகர வளர்ச்சி குழுமம் கொண்டதாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.
 வேண்டுமென்றால் திருவள்ளூர் மாவட்டத்தின் பகுதிகளான சென்னை வடகிழக்கு மாநகராட்சி மற்றும் சென்னை வடக்கு மாநகராட்சி ஆகியவற்றைக் கொண்டு தனியாக வட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், மற்றறும் தென் சென்னை மத்திய சென்னை சென்னை மேற்கு ஆகியவற்றைக் கொண்டு தென் சென்னை பெருநகர பெருநகர கழகம்  நிறுவினாலும் நல்லது. இதன் மூலம் வடசென்னையின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். இல்லாமல் எல்லாம் ஒரே மாநகராட்சியாக அமைத்தால் மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரியால் கவனிக்க முடியாமல் போவதோடு, இந்த மாநகராட்சி ஆனது என்னதான் சென்னை முழுமைக்கும் மாநகராட்சியாக இருந்தாலும் ,அது தென் சென்னை ,மத்திய சென்னை தொகுதிகளை  அடிப்படையாகக் கொண்ட மாநகராட்சி ஆகவும், அங்கேயே வளர்ச்சி பணிகள் நடைபெறுவதாகவும் இருக்கும், இதனால் வட சென்னை மற்றும் சென்னை சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம் பல்லாவரம் போன்றவற்றின் வளர்ச்சியும் பாதிக்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு