16 கோடி ஊசி செலவை தமிழக அரசு ஏற்க வேண்டும்
தஞ்சாவூரில் என்று நினைக்கிறேன், ஒரு குழந்தை வித்தியாசமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமென்றால் 16 கோடி ரூபாய் ஒரு ஊசிக்கு செலவாகும் என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. சன் டிவி போன்ற தொலைக் காட்சிகளிலும் இந்த செய்தி வெளியானது. தற்போதும் யூட்யூப் காணொளியில் இதற்காக நிறைய பேர் அழுது கொண்டிருக்கிறார்கள் எப்படியாவது இந்த குழந்தையை காப்பாற்றுவதற்கு உதவுங்கள், நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு பத்து ரூபாயும் இந்த குழந்தையின் உயிரை காப்பாற்ற உதவும் என்று கூறுகிறார்கள். இது நிச்சயமாக தமிழக அரசின் கவனத்துக்கு வந்து இருக்கும் என்று நினைக்கிறேன் . 16 கோடி என்பது எவ்வளவு பெரிய தொகை என்பது நமக்கு தெரியும் இது தமிழ்நாட்டில் தொழிலதிபர்கள், அதிகம் சம்பாதிக்கும் நடிகர்கள் ,அரசியல்வாதிகள் தவிர வேறு யாராலும் செலுத்த முடியாத தொகை. ஆகவே இந்த மாதிரியான நேரங்களில் தமிழக அரசு இதற்கான செலவை முன்வந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே என் கருத்து இது தொடர்பாக தமிழக அரசுக்கும் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கலாம். ஏன் இவ்வளவு தாமதம் என்பது எனக்கு தெரியவில்லை .தமிழக அரசு இந்த செலவை ஏற்றுக் கொண்டால் எனக்கு மிக்க மகிழ்ச்சி .அதற்காக அவர்கள் ஏற்கனவே நிதி திரட்டுகிறார்கள், அந்த நிதி போக மீதி நிதியையாவது தமிழக அரசு வழங்கி குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.
கருத்துகள்
கருத்துரையிடுக