தமிழ்நாடு தேர்தல்கள் ஒரு பார்வை :2019 நாடாளுமன்ற தேர்தல்
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஊடகங்கள் சரியாக கணிக்கத் தவறிய இருந்தன. என்றாலும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அவர்கள் ஓரளவு கணித்து இருந்தார்கள். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் ஆனது அதிமுகவினரின் கரன்சி கட்டுகளை உடைக்கும் சத்தம் ஆனது திமுகவினரை கலங்கடிப்பதாக செய்தி வெளியிட்டிருந்தார்கள்.இந்தத் தேர்தலானது பணத்தால் முடிவு செய்யப்படும் என்றும் ஊடகங்கள் கூறியது. மேலும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான அலை அடித்தால் மட்டுமே திமுக, அதிமுகவின் பணத்தைத் தாண்டி வெற்றிபெற முடியும் என்றும் கூறின. ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் திமுக 30 லிருந்து 39 இடங்கள் வரை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றன என்பதை சரியாகக் கணித்து இருந்தன. பிஜேபியால் அதிமுக கூட்டணிக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த கருத்துக் கணிப்புகள் சரியாக கணித்து இருந்தன. இதற்கு முந்தைய 2014 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லாமல் அதிமுக 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறி பெரிய அளவில் கூட்டணி வைக்காமல் விடுதலைச் சிறுத்தைகளுடன் மட்டும் கூட்டணி வைத்து தேர்தல் களம் கண்ட ஸ்டாலின், கருணாநிதி இறந்த பின் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ,விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக என கூட்டணி வைத்து தேர்தலை கண்டார். எடப்பாடி ஓரளவுக்கு கடும்போட்டி கொடுப்பார் என்று ஊடகங்கள் சொல்ல வைத்ததற்கு காரணம் அவரும் ஒரு வலுவான கூட்டணி அமைத்தது. தேமுதிக, பாமக போன்ற கட்சிகளை இணைத்து அவர் கூட்டணி அமைத்து இருந்தார் .பிஜேபியால் போகும் வாக்குகளை தேமுதிக ,பாமக வாக்குகளை வைத்து பிடித்து விடலாம் என்று எடப்பாடி கணக்கு வைத்திருந்தார் .ஆனால் ஜெயலலிதா இறந்த பிறகு ஆட்சியில் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பம் மற்றும் பிஜேபியுடன் கூட்டணி ஆகியவை மொத்தமாக அதிமுக கூட்டணி தோல்வியடைய வழிவகுத்தது. முன்னாள் முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் மகன் மட்டும் தேனியில் வெற்றி பெற்றார் 2004 தேர்தலில் கூட பெரியகுளத்தில் தினகரன் மட்டுமே 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார் மற்றவர்கள் அனைவரும் 50 ஆயிரத்திலிருந்து ,ஒன்றரை லட்சம், இரண்டரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றார்கள். இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவே பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் அதிமுக தேவையான அளவு தொகுதிகளை வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இது நிறைய பேரை எடப்பாடியை திரும்பி பார்க்க வைத்தது என்ன இருந்தாலும் எடப்பாடி வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்றிவிட்டார் என்று பேச ஆரம்பித்தார்கள். இதுதான் எடப்பாடி தமிழ்நாடு அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியது. ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை சொல்வார்கள் ஒரு முறை மன்னரானால் எப்போதும் மன்னர் என்று (once a king always a king)அதை எடப்பாடி நிரூபித்தார் . நான் ஒருமுறை முதலமைச்சர் ஆகிவிட்டேன் இனிமேல் நான் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் என்று எடப்பாடியை நிரூபித்துக் காட்டினார். மற்றபடி இந்த தேர்தலானது காங்கிரஸ் மீண்டு வருவதற்கும் வழிவகுத்தது. ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரின்போது நடந்த 2009 தேர்தலில் வெற்றி பெற்றாலும், அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் தமிழ் ஆதரவாளர்கள் சுதாரித்துக் கொண்டு பிரச்சாரம் செய்ததால் திமுக மற்றும் காங்கிரஸ் இரண்டுமே தோற்றுப்போனார்கள் 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 40 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றார்கள் என்று நினைக்கிறேன் அந்த சமயம் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்காததற்கு காரணம் காங்கிரசு தான். காங்கிரஸ் ஓரளவுக்கு சீட்டுகளை பிடித்திருந்தால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்றும் திமுகவினர் கூறினார்கள் .அதனால்தான் இந்த முறை காங்கிரஸ்காரர்களுக்கு குறைவான தொகுதிகளையும் ஒதுக்கினார்கள் .அப்படியிருந்தும் காங்கிரஸ் இந்த சட்டமன்ற தேர்தலில் ஓரளவு ஓரளவுக்கு இடங்களில், 20 இடங்களில் வெற்றி பெற்று தங்கள் பலத்தை நிரூபித்து இருக்கிறார்கள். இது அவர்களின் பலம் இல்லை என்பது நமக்குத் தெரியும். தற்போது தற்போது ஈழத் தமிழர் பிரச்சனையை விட பிஜேபியின் மதவாத பிரச்சினை முக்கியம் என்று என்று அனைத்து கட்சிகளும் குறிப்பாக கம்யூனிஸ்ட் உட்பட அனைத்து கட்சிகளும் திமுக கூட்டணியில் இணைந்ததால தான் காங்கிரஸ் பெற முடிந்தது .
கருத்துகள்
கருத்துரையிடுக