தமிழ்நாடு தேர்தல்கள் ஒரு பார்வை :2021 சட்டமன்ற தேர்தல்

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தேர்தலானது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. காரணம் அதிமுக ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்தது .எனவே திமுக வெற்றி அடையும் என்று பெரும்பாலோர் கணித்து இருந்தார்கள் . 200க்கு மேல் இடங்களை திமுக கூட்டணி பிடிக்கும் என்று நிறைய பேர் கூறினார்கள். ஆனால் எடப்பாடி நாடாளுமன்றத் தேர்தல் உடன் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் தேவையான அளவு இடங்களை பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதை யாரும்  கவனிக்கவில்லை. அதே வித்தையைத்தான் இடைப்பாடி இந்த தேர்தலிலும் கடைபிடித்தார் ரூபாய் 2500 பொங்கல் பரிசாக அறிவித்தார், அது அறிவித்த சிறிது நாட்களிலே கருத்துக்கணிப்புகள் குறிப்பாக  காணொளி தளங்களில் பார்த்தபோது காணமுடிந்தது ,பெரும்பாலான மக்கள் 2500 கிடைத்ததால் எடப்பாடிக்கு தான் ஓட்டு போடுவோம் என்று சொன்னார்கள். எம்ஜிஆர் காலத்திலிருந்தே தங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது இலவசமாக கிடைத்து வருவதாகவும் அவர்கள் கூறினார்கள்.இது அதிமுகவின் மோசமான செயல்பாடு தான் என்றாலும் மக்களை நேரடியாக பணம்  சென்று அடையும் போது மக்களின் வாக்குகளை பெறுவது எளிதாகிறது. நான் அப்போதே நினைத்திருந்தேன் அதிமுக ஒரு 60 இடங்கள் வரை வெல்லும் என்று. இதே கதைதான் 2004 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நடந்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி அடைந்து இருந்தார். பின்னர் அவர் மகளிருக்கு இலவச சைக்கிள் என ஓரளவு இலவசங்களை அள்ளித் தெளித்தார்கள். இதன் மூலமாகவும் மேலும் விஜயகாந்த்  தனிக்கட்சி தொடங்கி சட்டமன்ற தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பிரித்ததால் ஜெயலலிதா 66 இடங்களை பிடிக்க முடிந்தது. அதேபோல் இந்த தேர்தலில் கமல் மற்றும் சீமான் சுமார் 10 சதவீத வாக்குகளைப் பிரித்து இருந்தார்கள் தினகரன் கூட 2 சதவீத மக்கள் அப்படி மொத்தமாக  12 சதவிகித ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளை பிரித்து இருந்தார்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகள் பிரியும்போது ஆளுங்கட்சி வெற்றி அடையும் .ஆனால் இங்கே எடப்பாடி கட்சி தோல்வி அடைவதற்கு மற்றுமொரு காரணம் பிஜேபியுடனான கூட்டணி அது அனைவருக்கும் தெரிந்ததே, பாஜக உடனான கூட்டணி  13 சதவிகித கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் வாக்குகளை மட்டும் அல்லாது தமிழ்நாட்டில் உள்ள திராவிடர் கழகம் போன்றவற்றின் பின்னால் உள்ள இறைமறுப்பாளர்கள் மற்றும் வட இந்தியாவில் உள்ளது போல் தமிழ்நாட்டில் மதக்கலவரம்  ஏற்படுவதை விரும்பாத இந்து சமயத்தவர்கள் போன்றவர்களின் வாக்குகளையும் அதிமுகவுக்கு வர முடியாமல் செய்துவிட்டது. பிஜேபி மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக இன்னும் அதிகமான வாக்குகளை பெற்று கடும் போட்டி கொடுத்திருக்கும் .ஸ்டாலின் முதல்வராக முடியாது என்றெல்லாம் ஜோசியம் கூறியவர்களின் வாக்குகளை எடப்பாடி மெய்ப்பிக்கா விட்டாலும் நெருங்கி கடும் போட்டியை கொடுத்திருப்பார் .ஆனால் பிஜேபியின் மூலமாக ஸ்டாலின் ஜோசியக்காரர்கள், குடுகுடுப்பைக்காரர்கள் வாக்குகளை பொய்யாக்கி முதல்வர் ஆகியிருக்கிறார் .2021 தேர்தல் திமுக, அதிமுக ஆட்சியே தமிழ்நாட்டில் தொடரும் என்பதை மெய்ப்பித்து இருக்கிறது. நாம் தமிழர் புதிய நம்பிக்கை ஒளியாக விளங்குகிறது. அடுத்த தேர்தலுக்குள் சீமான் 15 சதவீத வாக்குகளைப் பெறுவார் என்று நம்புகிறேன், அது திமுக ஆட்சி தொடர்வதற்கு வழிவகுக்கும் . சீமான் யாருடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன் .அதிமுக அனுதாபியாக இருந்தாலும் அவர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. அவர் அதிமுக அனுதாபியாக முன்பு இருந்தது ,திமுக ஈழத் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் ஆதரித்ததால் ஏற்பட்ட வெறுப்பினால் தவிர அதிமுகவின் மீது உள்ள பாசத்தால் அல்ல. அடுத்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடிக்கு சீமான் கடும் போட்டியாக இருப்பார் என்பதை இந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு