சென்னை 5 மாநகராட்சிகளாக பிரிக்கப் வரபடம் வேண்டும்வேண்டும்.
சென்னை-5 மாநகராட்சிகள் ஆக பிரிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்களும் உள்ள மாநகராட்சிகள் பற்றிய அறிவு உள்ளவர்களுக்கு, ஆய்வு செய்து வருபவர்களுக்கு வியப்பாக இருக்காது. உலகெங்கிலும் உள்ள மாநகராட்சி உற்றுநோக்கி வருபவர்களுக்கு அதுவே சரியான தேர்வாக இருக்கும் .டெல்லி கூட மூன்று மாநகராட்சியாக பிரிக்கப்பட்டிருக்கிறது. சென்னையின் பிரச்சனைகளுக்கு குறிப்பாக சுகாதாரம், எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம் ,போன்ற பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சென்னை நிர்வாக ரீதியாக சரியாக பிரிக்கப்படாதது. குறிப்பாக தற்போது சென்னை மாவட்டம் 71 லட்சம் மக்கள் கொண்டதாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பகுதிகளை இணைத்து ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால் 20 லட்சம் தொகை கொண்ட மாவட்டங்களை நிர்வாகிக்க நிர்வாகிகள் , ஆட்சியர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்குத் தெரியும் .71 லட்சம் மக்கள் கொண்ட மாவட்டமாக வைத்திருப்பது மிகவும் கடினமான காரியமாகும். இதனால் மக்கள் பிரதிநிதிகளின் அளவு குறையும். குறிப்பாக சென்னை குறைந்தபட்சம் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு வேண்டும் .வடசென்னை, தென் சென்னை, மத்திய தினம் என்று மூன்று மாவட்டங்களாகப்பட வேண்டும். அப்படி இருக்கும் போது மூன்று கலெக்டர்கள், மற்றும் மும்மடங்கு அதிகாரிகளைக் கொண்டு இருந்தால் ஓரளவு சென்னையை நிர்வகிக்கலாம். ஆனால் அதிகாரிகள், அரசு அலுவலகங்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதே சென்னையின் சுகாதார, போக்குவரத்து நெருக்கடி ,எங்கும் கூட்டம் எதிலுரம் கூட்டத்திற்கு காரணம் .குறிப்பாக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் தொகுதிகளை பற்றி கவலைப்படுவது கிடையாது. அவர்கள் பாட்டுக்கு ஒரே மாவட்டத்தில் 3 எம்பி தொகுதிகள் வருவது மாதிரி கூட செய்துவிட்டுப் போகிறார்கள். சென்னை பொறுத்தவரை வடசென்னை ,தென் சென்னை ,மத்திய சென்னை என்று மூன்று நாடாளுமன்ற தொகுதிகள் கொண்டதாக உள்ளது. அடுத்ததாக பார்த்தால் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி ஆனது ஸ்ரீபெரும்புதூர்சட்டமன்றத் தொகுதி தவிர மற்ற சட்டமன்ற தொகுதிகளான தாம்பரம், பல்லாவரம் அம்பத்தூர் போன்ற சென்னை பெருநகரத்தின் பெரும் பாலான சட்டமன்றத் தொகுதிகள் ஸ்ரீபெரும்புதூர் நாடாமன்றத்திற்கு உள்ளேயே வருகின்றன. மற்றபடி பார்த்தால் திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியின் மாதவரம் ,ஆவடி, பொன்னேரி போன்ற பகுதிகள் சென்னை மாநகராட்சிக்குள் வருகின்றன .மதுரை, திருச்சி போன்ற மாநகராட்சிகளில் 6 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட நாடாளுமன்ற தொகுதிகள் இருந்தாலும், அவற்றில் 3 அல்லது 4 தொகுதிகள் மட்டுமே மாநகராட்சி பகுதிகளுக்குள் வருகின்றன. ஆனால் சென்னையில் தற்போது தற்போது நிலவரப்படி சென்னையில் சுமார் 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகள் மாநகராட்சிப் பகுதிக்குள் வருகின்றன இதிலிருந்து எவ்வளவு கடினம் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக