வான் தமிழ்நாடு பாகம் 5:வேலூர் ,அரக்கோணம்,தஞ்சாவூர் விமான நிலையங்கள் ஒரு பார்வை

நாம் ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள சென்னை ,மதுரை ,திருச்சி ,கோவை சேலம், தூத்துக்குடி போன்ற விமான நிலையங்களை பற்றி பார்த்து விட்டோம். அதன் பிறகும் இன்னும் 10 விமான நிலையங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினேன், உங்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்.  ஓசூர் விமான நிலையம் பற்றியும் பார்த்துவிட்டோம். தமிழ்நாட்டில் மேலும் சுமார் 10 விமான நிலையங்கள் உள்ளன அவற்றில் வேலூரில் இருந்து மட்டுமே வாடகை விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

 தஞ்சை போன்ற ஒரு சில வானூர்தி நிலையங்கள் விமானப்படை விமான நிலையங்கள். சில விமான நிலையங்கள் இதுவரை பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இவை அனைத்தும் இந்திய அரசின் உதான் திட்டம், அதாவது பிராந்திய இணைப்பு சேவைத் திட்டம் என்று தமிழில் மொழிபெயர்க்கலாம். அந்த திட்டத்தின் கீழ் உள்ள அட்டவணையில் வருகின்றன  அந்த விமான நிலையங்கள் முறையே வேலூர், நெய்வேலி, உச்சிப்புளி(ராமநாதபுரம் மாவட்டம்) சூலூர்(கோயம்புத்தூர் மாவட்டம்) உளுந்தூர்பேட்டை- விழுப்புரம், கயத்தாறு- திருநெல்வேலி ,செட்டிநாடு- சிவகங்கை மாவட்டம், அரக்கோணம்- ராணிப்பேட்டை மாவட்டம் ,தாம்பரம்- சென்னை மாவட்டம் சோழவரம்- சென்னை மாவட்டம் ஆகிய 10 விமான நிலையங்கள்.

அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் 16 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் பயணிகள் போக்குவரத்து மற்றும் விமானப்படையால் இயக்கப்படும் விமானங்கள் விமான நிலையங்கள் ஆக மதுரை, கோவை, திருச்சி ,சேலம் ,தூத்துக்குடி ,வேலூர், தஞ்சை ,ராமநாதபுரம் -உச்சிப்புளி,  சூலூர்- மாவட்டம் ,அரக்கோணம்- ராணிப்பேட்டை மாவட்டம், தாம்பரம்- செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய வானூர்தி நிலையங்கள் உள்ளன .சோழவரம், கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, நெய்வேலி, செட்டிநாடு போன்றவை விமான சேவை இன்றி மற்றும் சில விமான நிலையங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

வேலூர் வானூர்தி நிலையம்

 

வேலூர் வானூர்தி விமான நிலையமானது தமிழ்நாட்டின் ஏழாவது அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாகும் .வேலூரில் இருந்து விமானங்களை இயக்கப்படுவது இல்லை என நீங்கள் நினைக்கலாம் .ஆனால் பயணிகள் விமானம் இயக்கப்படுவது இல்லை என்றாலும், வாடகை விமானங்கள் இயக்கப்படுகின்றன, வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றிற்கு அவசர நேரத்தில் வரும் நோயாளிகள் மற்றும் தனியார் வாடகை வானூர்திகள் இயக்கப்படுகின்றன வழக்கமான பயணிகள் விமான சேவைகள் இயக்கப்படுவதில்லை. அதனால் நிறைய பேர் வேலூர் ஆனது பயணிகள் சேவையில்லா விமான நிலையம் என்று நினைத்திருக்கிறார்கள். 

 

மேலும் வேலூர் விமான நிலையத்தில் விமான ஓடுதளம் ஆனது மிகச்சிறியது. எனவே 19 பேர் வரை செல்லும் விமானங்கள் மட்டுமே இயக்க முடியும் .மேலும் இரவில் விமானங்கள் தரையிறக்கும் வசதியும் கிடைக்காது என்று கிடையாது என்று நினைக்கிறேன். எனவே இரவு நேர சேவைகளை வழங்குவதிலும் பிரச்சினைகள் உள்ளன. இதே பிரச்சினை சேலம் விமான நிலையத்திலும் உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்திலும் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது இரவு நேர சேவைக்கான ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன, என்றாலும் விரிவாக்க பணிகளுக்காக அவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

 

மதுரை மாநகரத்தில் உள்ள வானூர்தி நிலையத்தில் கூட இரவு நேரத்து ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தாலும் இரவு 12 மணிக்கு பிறகு வானூர்தி    சேவைகள் இயக்கப்படுவதில்லை. 24 மணி நேரம் விமான சேவை இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், இதுவரை இயக்கப்படவில்லை. காரணம் கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்கிறார்கள். செக்யூரிட்டி/ காவலர்கள் மற்றும் வேறு பணிக்கான ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்கிறார்கள். உலகம் முழுவதும் குறிப்பாக மத்திய கிழக்கு, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு மனித வளத்தை அனுப்பி வைக்கும் இந்தியாவில் ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்லி விமான நிலையங்களின் வளர்ச்சிகளை தடுக்கிறார்கள். இதனால் மக்களின் வேலைவாய்ப்பு ,அந்த நகரின் வளர்ச்சி வானூர்தி நிலையங்களை நம்பி ஏற்படும் தொழில் வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் , வானூர்தி போக்குவரத்து போக்குவரத்துத் துறை அமைச்சகம் ,பிரதமர் போன்றோர் இணைந்து இந்தியாவின் பொருளாதாரத்தை  உண்மையிலே  உயர்த்த வேண்டும் எனில் இதுபோன்ற சிக்கல்களை கடந்து வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டும். 

 

வேலூர் வானூர்தி நிலையத்திலிருந்து  19 பேர் கொண்ட விமான சேவைகளை  சென்னை, கோவை ,மதுரை, திருச்சி சேலம், தூத்துக்குடி போன்றவற்றிற்கும் இயக்கலாம். குறிப்பாக கோவையிலிருந்து பகலில் மூன்று விமான சேவைகளை வேலூருக்கு, அதன் பின்னர் இரவு நேர விமான சேவையை வேலூருக்கு  இயக்க முடியாது என்பதால், இரவுநேர இரண்டு விமான சேவையை மதுரைக்கும் இயக்கலாம். அதேபோல் திருச்சியிலிருந்து மூன்று விமான சேவைகளை வேலூருக்கு ,இரவு நேர விமான சேவையை இரண்டு சேவைகள் கோயம்புத்தூருக்கு இயக்கலாம். இப்படிக்கு திருச்சி ,மதுரை, கோவை போன்ற வானூர்தி நிலையங்களில் இருந்து இருந்து 19 பேர் கொண்ட பயணிகள் வானூர்தியை காலை வேளைகளில் மூன்று விமான சேவைகள், மேலும் இரவு நேரங்களில் இரண்டு  வானூர்தி சேவைகள் இந்த நகரங்களுக்கு உள்ளாகவும், அல்லது அருகிலுள்ள பெங்களூரு கொச்சி போன்ற மாநிலங்களுக்கும் இயக்கினால் நன்றாக இருக்கும். அப்படி நடைபெறும் போது விரைவில் பயணிகள் போக்குவரத்து அதிகரிதது வேலூர் வானூர்தி நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, வேலூர் மற்றும் அதனை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் ,ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும்.

 

அரக்கோணம் வானூர்தி நிலயம்:

 

அரக்கோணம் வானூர்தி நிலையம் ஆனது சென்னைக்கு மிக அருகில் உள்ள வானூர்தி நிலையம். தற்போது அரக்கோணம் தாலுகா சென்னை மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது .சென்னை பெருநகராட்சி உடன் இணைக்கப்பட்ட  அரக்கோணம்  தற்போது சென்னை நகர எல்லைக்குள் வருகிறது.


மேலும் ஒரு விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க திட்டமிட்டார்கள, அவர்கள் பத்து பதினைந்து ஆண்டுகளாக இழுத்தடித்தது ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகள் வளர்ச்சி அடைந்து நிலத்தின் விலையும் அதிகரித்து இடம் வாங்குவதற்கு கூட முடியாத அளவுக்கு போய்விட்டது. அவர்கள் காஞ்சிபுரத்தில் பின்னர் வானூர்தி    நிலையம் அமைக்க திட்டம் போட்டார்கள். தற்போது அங்கேயும் நிலம் விலை கூடிவிட்டது ,அது மட்டுமல்ல அது சென்னையிலிருந்து வெகுதொலைவில் வேறு இருக்கிறது.எனவே அவர்கள் தற்போது சென்னை விமான நிலையத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வெகு விரைவாக இரண்டாம் வானூர்தி நிலையம் தேவைப்படுவதால் அரக்கோணம் அருகே பரந்தூர் பகுதியை இரண்டாவதுவானூர்தி நிலையத்திற்காக  தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அது நல்லது ஏற்கனவே அரக்கோணத்தில் விமான நிலையம் இருக்கிறது. 

 

2015 சென்னை வெள்ளப்பெருக்கின் போது கூட அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விமான சேவை இயக்கினார்கள். அரக்கோணம் கடற்படை விமான தளமாக இருந்தாலும் அதிலிருந்து விமான சேவைகளை இயக்க முடியும். ஏற்கனவே பெங்களூர்  எலங்கா விமானப்படை விமான தளமாக இருந்தபோதிலும் அதிலிருந்து பன்னாட்டு வானூர்தி சேவைகள் வரை இயக்கப்பட்டன. அதேபோன்று கோவா தற்போது வரை இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான நிலையமாக இருந்த போதும் அதிலிருந்து பன்னாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன .அந்த வகையில் அரக்கோணத்தில் விமான சேவைகள் என்பதில் பிரச்சனை ஒன்று இருக்காது. அரக்கோணம் விமான ஓடுதளம் மிகப்பெரியதாக இருப்பதால் இந்தியாவிலே பெரிய ஓடு தளங்களில் ஒன்றாக இருப்பதால் இது பெரிய ரக விமானங்களை இயக்க முடியும். மேலும் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னைக்கான இரண்டாம் விமான நிலையமாகவும் அதே போல் வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கான விமான நிலையமாகவும் இருக்கும். அரக்கோணம் விமான நிலையம் பற்றி பார்த்தோம் அதற்கு முன் சென்னை விமான நிலையம் தன்னுடைய முழு பயணிகள் கொள்ளளவை எட்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் அது எவ்வாறு என்று பார்ப்போம்.

 

சென்னை விமான நிலையம் முழு பயணிகள் கொள்ளளவை எட்டி விட்டதா?

 

சென்னை வானூர்தி நிலையம் ஆனது கொரானாவுக்கு முந்தைய காலம் வரை இரண்டரை கோடி முதல் 3 கோடி வரை விமான பயணிகளை கையாண்டு வந்தது. நிறைய நாட்களாக இவர்கள் சென்னை விமான நிலையம் முழு பயணிகள் கொள்ளளவை எட்டி விடும் என்று சொல்கிறார்கள் ,2021 என்றும் சொல்கிறார்கள். ஆனால் மும்பையில் உள்ளது போல் சென்னையிலும் இரண்டு ஓடு தளங்கள் உள்ளன. மும்பையில் இரண்டு தளங்கள் இருந்தாலும் அவை இரண்டும் குறுக்கும் நெடுக்குமாக ஒன்றையொன்று சந்திக்கும் வகையில் வருவதால் ஒரே ஒரு தளமாக கூறுகிறார்கள். இந்த ஓடுதளத்தில் ஒரு நாளைக்கு 770 மேல் விமானங்களில் ஏற்றி, இறக்குகிறார்கள் .மும்பை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் கையாளும் திறன சுமார் நான்கரை கோடி முதல் 5 கோடி . அப்படிப்பார்த்தால் சென்னையிலும் நான்கரை கோடி முதல் 5 கோடி வரை விமான பயணிகளை கையாள முடியம் ஆனால் இவர்கள் இப்போதே சென்னை விமான நிலையமானது முழு பயணிகள் கையாளும் திறனை எட்டி விட்டதாக கூறுகிறார்கள் . சென்னை விமான நிலையத்தில் செல்பவர்களே நெருக்கடியையும் கண்டிருப்பீர்கள்,  விமான நிலைய பயணிகள் முனைய கட்டிடம் புதிதாக கட்ட வேண்டும் ,அது தான் இதற்கு காரணம் .மும்பை விமான நிலையமானது 5 கோடியே 60 லட்சம் பயணிகளை கையாளும் விமான பயணிகள் முனையங்கள் கொண்டதாக உள்ளது.


சென்னை அந்த அளவுக்கு இல்லை, சென்னை விமான ஓடுதளம் ஆனது சுமார் 5 கோடிக்கு மேல் பயணிகள் கையாள்வதற்கு ஏற்றது. ஆனால் பயணிகள் முன்னைய கட்டிடங்கள் அந்த அளவுக்கு இல்லை. அதை இந்த விமான நிலையத்திலேயே கட்டலாம், இந்த விமான நிலையத்தில் பயணிகள் முனையம் கட்டுவதற்கான இடமில்லாததால் அப்படிக் கூறுகிறார்களோ? என்னவோ?  தெரியவில்லை. அப்படி பார்த்தால் இந்த வானூர்தி நிலையத்தை இன்னுமொரு 5-6 ஆண்டுகளுக்கு ஓட்டலாம். அரக்கோணம் வானூர்தி  நிலையத்தில் ஏற்கனவே ஓடுதளம் போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளன. அதில் விமானங்களை இயக்க வேண்டும் என்றால் உடனடியாக குறைந்த அளவில் இயக்கலாம், போகப்போக பயணிகள் முனையம் விமானப் போக்குவரத்துக்கு துணைபுரியும் கருவிகள் போன்றவற்றை நிறுவி,  ஐந்து ஆண்டுகளில் சென்னை அளவுக்கு முழு திறனுடன் இயங்கும் விமான நிலயம் ஆக மாற்றலாம். மேலும் அரக்கோணம் விமான நிலையம்  அதன் அமைவிடம் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறது. 


தமிழ்நாட்டின் பிற  கோயம்புத்தூர் ,மதுரை, திருச்சி ,சேலம், தஞ்சாவூர் மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் ,கொச்சி ,கோழிக்கோடு போன்றவற்றிலிருந்து அரக்கோணம் வழியாக மும்பை,டெல்லி, கொல்கத்தா போன்ற சேவைகளை இயக்க முடியும் .மேலும் வேலூர் மாவட்டத்தினர் நிறைய பேர் சிங்கப்பூர், மத்திய கிழக்கில் பணிபுரிகிறார்கள். இதனால் சர்வதேச விமானங்களையும் இயக்க முடியும். அதுமட்டுமல்ல சென்னை போல் அரக்கோணத்தில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்கி விட்டு தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்கள் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இணைப்பு வானூர்திகளை தொடங்கினால், மும்பை சென்னை போல் அரக்கோணம் பெரிய விமான நிலையமாக மாறும்.

 

தஞ்சாவூர் வானூர்தி நிலையம்

 

 தஞ்சாவூர் வானூர்தி நிலையம் ஆனது ஏற்கனவே சென்னை, கொழும்பு போன்ற இடங்களுக்கு வானூர்தி சேவையை வழங்கியுள்ளது, பின்பு நிறுத்தப்பட்டுள்ளது. பின்பு அருகிலேயே திருச்சி விமான நிலையத்தின் எழுச்சியானது தஞ்சாவூரை பல ஆண்டுகளுக்கு செயல்படாமல் வைத்துள்ளது .தற்போது பிரதமரின் உடான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரைச் செயல்பட வைக்க திட்டம் தீட்டுகிறார்கள். திருச்சிக்கு அருகில் சுமார் ஐம்பது அறுபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் ,தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் ,திருவாரூர் போன்ற மாவட்டங்கள் அருகில் உள்ளன.


மேலும் திருச்சி விமான ஓடுதளம் அது  குறுகியது என்பதால் வெளிநாடுகளுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வந்தாலும் எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ,மலேசியன் ஏர்லைன்ஸ் போன்ற சேவைகளை வழங்க முடியவில்லை .அதற்கு காரணம் அவை பெரிய விமானங்களை கொண்டிருப்பதுதான் .தஞ்சாவூர் வானூர்தி நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால்,  பன்னாட்டு வானூர்தி சேவைகளுக்கும் பயன்படுத்தலாம் .தஞ்சாவூர் விமானப்படை விமான தளம் என்பதால் இரவு நேர தரையிறங்கும் வசதி இருக்கும் என்றே நினைக்கிறேன். அப்படி இல்லாவிட்டால்  இரவு நேர தரையிறங்கும் வசதிகளை அமைக்க வேண்டும் .தஞ்சாவூர் வானூர்தி நிலையம் ஆனது தற்போது இலங்கையை கண்காணிக்க மத்திய அரசு தரம் உயர்த்தி வருவதாக கூறுகிறார்கள் . இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரித்து வருவதால் தஞ்சாவூருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறுகிறார்கள். எனவே இரவு நேர தரையிறங்கும் வசதிகளை செய்ய வேண்டியது அவசியம். தஞ்சாவூரிலிருந்து பெரிய விமானங்களை சர்வதேச விமான சேவைக்கு பயன்படுத்த முடியும். 


திருச்சி விமான நிலையத்தில் தற்போது பயணிகள் முனையம் விரிவாக்க பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. ஓடுதள விரிவாக்க பணிகள் நடைபெறவில்லை. எனவே பெரிய ஓடுதளம் கொண்ட தஞ்சாவூரை திருச்சிக்கு மாற்றாக பெரிய விமானங்களை இயக்குவதற்கு தற்போது பயன்படுத்தலாம். மேலும் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் மலேசியா போன்றவற்றிற்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் மேலும் வளர்ச்சியடையும் போது திருச்சியில் விரிவாக்கத்தை உடனடியாக செய்வதை விடுத்து, தஞ்சையில் விமானங்களை இயக்கி பின்னர் இரண்டு விமானங்களும் முழு கொள்ளளவை எட்டும் போது திருச்சி, தஞ்சையை விரிவாக்கம் செய்யலாம்.

 

 இதன்மூலம் திருச்சி நகர் கூட இரண்டு  வானூர்தி நிலையங்களை கொண்டதாக இருக்கும் .ஏற்கனவே நான் கூறியபடி சென்னையை சுற்றி அரக்கோணம் ,சோழாவரம் ,தாம்பரம் ஆகிய வானூர்தி நிலையங்கள் உள்ளன.  சென்னை தவிர அரக்கோணம், சோழவரம், தாம்பரம்  ஆகிய வானூர்தி நிலையங்களில் இருந்து பயணிகள் விமான சேவை இயக்கப்படுவதில்லை. பயணிகள் விமான சேவை இயக்கினால் சென்னையை சுற்றி நான்கு விமான நிலையங்கள் இருக்கும், லண்டனை சுற்றி ஐந்து வானூர்தி நிலையங்கள் இருப்பதுபோல், சென்னையை சுற்றி நான்கு வானூர்தி நிலையங்கள் இருக்கும். அதேபோல் தஞ்சையிலிருந்து வானூர்தி சேவைகளை இயக்கினால் திருச்சி சுற்றி இரண்டு வானூர்தி நிலையங்கள் இருக்கும். 

 

அதேபோல்  கோவைக்கு அருகில் சூலூர் விமான நிலையம் உள்ளது. அது ராணுவ விமான நிலையம் அங்கிருந்த விமான சேவைகளை இயக்கினால் கோவையை சுற்றியும் இரண்டு வானூர்தி நிலையங்கள் இருக்கும். கோவையிலும் தொடர்ந்து விரிவாக்கப் பணிகளை செய்து வருகிறார்கள் விரிவாக்கப் பணிகள் தாமதம் அடையும்போது சூலூர் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் சேவையை தொடங்கலாம். 


திருச்சியில் இருந்து சிங்கப்பூர் மலேசியாவுக்கு தினசரி 5 முதல் 7 தடவைகள் வரை இயக்கப்படுகின்றன அவற்றை பெரும்பாலும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து உபயோகப்படுத்துவார்கள்  என்றாலும், குறிப்பாக நாகப்பட்டினம் திருவாரூர் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு திருச்சிக்கு வருவதைவிட தஞ்சாவூர் வருவதது எளிதாக இருக்கும். எனவே தஞ்சாவூர் விமான நிலையத்தை இயக்கத் தொடங்கினார் தஞ்சாவூர் வெற்றிகரமான பன்னாட்டு மாநிலமாக இருப்பதற்கும் வாய்ப்பு அதிகம்.


வேலூர் விமான நிலையம் பற்றிய செய்தி துளிகள்:

1.வேலூர் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக இடிக்க வேண்டிய வீடுகள், வெட்ட வேண்டிய மரங்களை கண்டறிய விரைவில் சிறப்பு குழு வருகை தர உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

 ஏற்கனவே இருந்த 45 ஏக்கர் நிலத்துடன் அருகில் உள்ள தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, மொத்தமாக 96 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரவேற்பு அலுவலகம், ரன்வே அமைப்பது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.

 இதனிடையே விமானங்களில் ஓடுதளம் மற்றும் இறங்கு தளம் அமைய உள்ள பகுதியில் குறிப்பிட்ட தொலைவு வரை வீடுகள், மரங்கள் இடையூறாக இருக்கக்கூடாது என்பது விமான நிலைய கட்டுமான பணிகளில் முக்கிய அங்கமாக உள்ளது.

 அதற்காக சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா குழுவினர் எந்தெந்த பகுதியில் விமானங்கள் புறப்படும் மற்றும் எந்த பகுதியில் தரையிறங்கும் என்பதை ஆய்வு செய்தனர்.

 

2.வேலூர் விமான நிலையம் இறுதியாக நடப்பு நிதியாண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மத்திய அரசின் உதான் ஆர்சிஎஸ் ( Regional Connectivity Scheme) கீழ் உருவாக்கப்பட்ட வசதி - சென்னை -வேலூர் -பெங்களூரு பாதையை இரு திசைகளிலும் இணைக்கும் . இணைப்பு வசதி ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயால் தாமதமானது .

 சிவில் ஏவியேஷன் இயக்குநர் ஜெனரல் (டிஜிசிஏ) தேவையான அனுமதியை வழங்கியவுடன் நிதி ஆண்டின் இறுதிக்குள் செயல்பாடுகளைத் தொடங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஏஏஐ சென்னையைச் சேர்ந்த மண்டல நிர்வாக இயக்குனர் ஆர் மாதவன் கூறினார்.

 

அரக்கோணம் வானூர்தி நிலையம் பற்றிய செய்தி துளிகள்

 சென்னை நகரத்துக்கான இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை  வேகமானது, இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழு நகரத்தின் இரண்டு தளங்களை ஆய்வு செய்தது . காஞ்சீபுரம் மற்றும் அரக்கோணம் இடையே பரந்தூர், மற்றும் மாமண்டூர் மற்றும் செய்யூர் இடையே மற்றொரு இடம்.

 இந்த திட்டத்திற்காக சுமார் 3,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதாக மாநில அரசு உறுதியளித்துள்ளது. "மாநில அரசு விமான நிலையம்  சென்னையின் தெற்கே வெகு தொலைவில் இல்லாத ஒரு தளத்தை விரும்புகிறது.

 மற்றொரு விமான நிலையத்திற்கு அருகாமையில் இருப்பது புதிய வானூர்தி நிலையத்திற்கு தடையாக இருக்காது, என்று அதிகாரி வட்டாரங்கள் தெரிவித்தன. பெருநகரங்களில் இரண்டாவது விமான நிலையம் என்ற கருத்து வெளிவந்த பிறகு, இரண்டு விமான நிலையங்களுக்கிடையேயான தூரத்தை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தள்ளுபடி செய்துள்ளது. நவி மும்பை விமான நிலையம் மும்பை விமான நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.

 தஞ்சாவூர் விமான நிலையம் பற்றிய செய்தி துளிகள்:

 சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வேலூரை இணைக்க ஒரு பிராந்திய இணைப்பு திட்டத்தை முன்வைத்தாலும், இண்டிகோ அல்லது ஸ்பைஸ்ஜெட் போன்ற குறைந்த விலை  நிறுவனங்கள் ஆர்வம் காட்டினால் மட்டுமே முடியும் என்று அந்த அதிகாரி கூறினார்.

 பிராந்திய இணைப்புத் திட்டமான உதானின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு நெய்வேலி, வேலூர், ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூரில் விமான நிலையங்கள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் புதன்கிழமை ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

 சேலம் விமான நிலையத்திற்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர், நெய்வேலி மற்றும் தஞ்சாவூரிலும் பணிகள் நடந்து வருகின்றன. திமுகவின் வில்சனின் கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு பணம் வழங்கியதாக கூறினார்

 பிராந்திய இணைப்புத் திட்டமான உதானின் கீழ் பல்வேறு சுற்று ஏலங்களின் கீழ் ஐந்து விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

 சேலத்திற்கு ரூ .35 கோடி, நெய்வேலிக்கு ரூ .30 கோடி, வேலூருக்கு ரூ .44 கோடி, ராமநாதபுரத்திற்கு ரூ .36.72 கோடி, தஞ்சாவூருக்கு ரூ .50.59 கோடி ஏற்கெனவே அரசு அனுமதித்துள்ளது. இந்த விமான நிலையங்களில், சேலத்தில் சென்னையிலிருந்து விமானங்கள் உள்ளன .

நெய்வேலி புதுச்சேரிக்கு அருகில் உள்ளது. இருப்பினும், நெய்வேலி மற்றும் வேலூர், தஞ்சாவூர் மற்றும் ராம்நாதபுரம் ஆகிய இடங்களில் வேலைகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தயாராக உள்ளன. 

 

 

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு