விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டி வாழ்த்துக்கள்.

விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் போட்டியிட விஜய் அனுமதி கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுளளது வாழ்த்துக்கள். தமிழ்நாட்டிற்கு அரசியலுக்கு புதியவர்கள் நிறைய பேர் வர வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். அதிலும் குறிப்பாக மருத்துவர்கள் ,பொறியாளர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்கள் வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். அமெரிக்காவிற்கு டொனால்ட் ட்ரம்ப் போன்றவர்கள் வந்தது போன்று வர வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலும் நடிகர்கள் மட்டுமே வருகிறார்கள் .எம்ஜிஆர் முதலில் வந்தபோது ஒரேயடியாக வரவில்லை. சுமார் 25 ஆண்டுகள் திமுகவில் இருந்து தன்னுடைய தேர்தல் தோல்வியை திமுக வின் தோல்வியாக காட்டி வந்தவர் தான் எம்ஜிஆர். எம்ஜிஆர் தோற்கடிக்கவே முடியாதவர் என்று என்று கூறப்பட்டாலும் அவர ஆதரித்த திமுக 1957,1962 தேர்தல்களில் தோற்றது யாரும் மறுக்க முடியாது. 1937 இல் சினிமாவில் நடிக்க வந்து 15 ஆண்டுகள் திணறி 15 ஆண்டுகளுக்கு பிறகு 1952  இல் மலைக்கள்ளன் வெற்றி கொடுத்த பிறகு அவர் நட்சத்திர நடிகர் ஆனார். அதுபோல் விஜய் கூட தன்னுடைய ஆரம்பகால படங்களில் மிகவும் திணறி இருப்பார் இப்போதுகூட விஜயின் ஆரம்பகால படங்கள் ஆபாசகாட்சி நிறைந்ததாக விமர்சனங்கள் உண்டு. இது சினிமாவுக்கு மட்டுமல்ல எல்லா தொழில்களுக்கும் இப்படித்தான் தடைகளைக் கடந்துதான் வரவேண்டும். அதேபோல்தான் அரசியல் ,அரசியலில் சினிமா நடிகராக இருப்பது ஆரம்பகால அறிமுகத்திற்கு வேண்டுமானாலும் பயன்படுமே தவிர ஒரேயடியாக வெற்றி பெறுவதற்கு பயன் கொடுக்காது. அதுதான் எம்ஜிஆர் விஷயத்தில் நடந்தது அவர் 25 ஆண்டுகள் அரசியல் அனுபவத்தை மூலமாகவே அவர் வெற்றி பெற்றார். ஆனால் மற்றவர்கள்  ஏதோ அவர் கட்சி தொடங்கிய உடனே வெற்றி பெற்றதாக முட்டாள்தனமாக கூறி அலைகிறார்கள். எம்ஜிஆருக்கு அண்ணா போன்ற சிறந்த தலைவர் கிடைத்தது அவருடைய நற்பேறு. இந்த காலத்தில்  சீமான் கூட விஜய் அவர்கள் ளை தங்கள் கட்சியில் சேர்க்க மாட்டேன் என்கிறார் .ஆனால் அண்ணா அப்படியல்ல அனைவரையும் அரவணைத்து கட்சியை வழி நடத்தினார் .அதனால் தான் அண்ணாவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது .கடந்த 50 ஆண்டுகளாக அண்ணாவிற்கு பிறகு யாரும் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தது இல்லை என்பதற்கு அண்ணாவின் தன்னம்பிக்கையே காரணம். அண்ணா எத்தனை பேர் வந்தாலும் தன்னுடைய தலைமையை யாராலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் .ஆகவே தான் அவரால் வெற்றி பெற முடிந்தது .சீமான் விஜய் போன்ற நடிகர்களை பயன்படுத்தி விட்டு அவர்கள் வெளியே போகும்போது போகட்டும் என்று விட்டு இருக்கலாம் .ஆனால் அப்படி செய்யாமல் இருப்பது தன்னம்பிக்கை குறைவை காட்டுகிறது விஜயும் படிப்படியாக அரசியலுக்கு வர முயற்சிப்பது  நல்லது வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு