போர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்' என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்

1996 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்று எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை கூட இழந்தபின் ஜெயலலிதாவின் 4 எம்எல்ஏக்கள் உடனே இருந்தார். அப்பொழுதும் அவர் கருணாநிதியை அறிக்கைகள் மூலமாக எதிர்த்து கொண்டிருந்தார். எதிர்க்கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ், கருணாநிதி ஆதரவு நிலை கொண்டிருந்ததால், ஜெயலலிதாவின் எதிர்ப்பு ஏடுபட்டது.

5 ஆண்டுகள் அறிக்கைகள் மூலமாகவே பெரும்பாலும் ஜெயலலிதா ,கருணாநிதி அரசை எதிர்த்து ஆட்சியைப் பிடித்தார். ஆனால் ஜெயலலிதா பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை தொண்டர்கள் போராட்டங்களை முன் எடுத்தார்கள். அதேபோல்தான் கமலும் செயல்படுகிறார் அறிக்கைகள் மூலம்  அவர் அரசியல் நடத்துகிறார்.

ஆனால் ஜெயலலிதா முதலமைச்சர் ஆவதற்கு முன்பு மக்களை நேரில் சென்று மாவட்டம் வாரியாக, சட்டமன்ற தொகுதி வாரியாக மக்களை நேரில் சென்று சந்தித்து வாக்கு சேகரித்து இருக்கிறார் அவர் முதல்வரான பிறகு மக்களை சந்திப்பதைக் குறைத்துக்கொண்டார் என்றாலும் மாநாடுகள், தேர்தல் பிரச்சாரங்கள் போன்றவற்றின் மூலம் மக்களை சந்தித்துக் கொண்டுதான் இருந்தார். கமல் அறிக்கை விடும் அளவுக்கு மக்களை சந்திப்பதில்லை. அறிக்கை விடுவது நல்லது தான் அதோடு மக்களையும் சந்திக்கப் பழகிக்கொள்ளவேண்டும். கமலின் அறிக்கையின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும்' என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கூறியுள்ளார்.கமிஷன்' சாம்ராஜ்யத்தால் கார் நிறுவனம் அல்லாடியது.

'எங்களுக்கு பலத்த நஷ்டம், நிறுவனத்தை விரைவில் மூடப்போகிறோம்' என்று போர்டு நிறுவனம் அறிவித்திருக்கிறது. நிர்வாகத்தின் இந்த முடிவால் ஊழியர்களும் குடும்பத்தாரும் நிலைகுலைந்து போயுள்ளனர்.ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நசிவு, கொரோனா கால வருவாய் இழப்புகள் என தமிழகம் தத்தளித்து வருகிறது.

தமிழக அரசு உடனடியாக, இந்த விவகாரத்தில் தலையிட்டு, போர்டு நிறுவன ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு