பழைய நிலைக்கு திரும்பும் ஆதிமுக

அதிமுக வானது திமுக மற்றும் பாஜகா கொடுத்த குடைச்சல்களைத் தாண்டி பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது. விளைச்சல் அதிகம் உள்ள இடங்களில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டிருக்கிறார், இதை எதிர்த்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் அறிக்கை விட்டிருக்கிறார். அதேபோல் பன்னீர்செல்வமும்  பெட்ரோலை ஜிஎஸ்டி கொண்டு வர வேண்டும் என்பதை திமுக எதிர்ப்பதாகவும் கூறிய அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல திமுக ஆட்சிக்கு வரும் முன் பெட்ரோலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று கூறியதாகவும் இப்போது எதிர்ப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். திமுக ஆட்சியில் இல்லாத போது ஒரு வாறும், ஆட்சியில் இருக்கும்போதும் ஒரு வாறும் பேசுவதாக கூறியிருக்கிறார்.  திமுக மட்டுமல்ல மாநில அரசுகள் அனைத்தும் பெட்ரோலை சரக்கு மற்றும் சேவை வரி வரம்புக்குள் கொண்டு வர வேண்டாம் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. இப்போது தங்களுக்கு  கிடைக்கும் ஒரே வருவாய் பெட்ரோல் மற்றும் டீசல் வரி வருவாய் தான். அதையும்  அவர்கள் சரக்கு மற்றும் சேவை வரி வரி வரி வருவாய் வரம்புக்குள் கொண்டு வந்தால் வேறு வரி  வருமானம் கிடைக்காது என்று கூறுகிறார்கள். அவர்களின் கோரிக்கை நியாயமானதே, பழையபடி மாநில அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய் நேரடியாக தங்களுக்கு வருமாறு வேலைகளை செய்து கொள்வதே நல்லது. அல்லது பெட்ரோல் விலையை மட்டும் நம்பி இருக்க வேண்டியதுதான்.  பிஜேபி அதிமுகவை அழித்து விடும் என்று சிலர் கூறுவார்கள் அது மிகப் பெரிய நகைச்சுவை, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் கூட நாம் தமிழர், மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளே உள்ளன .மக்கள் நீதி மையம் மூன்றரை சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது. நாம் தமிழர் 6.6 சதவீதத்திற்கு  சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. பிஜேபியின் வாக்கு எண்ணிக்கை அவர்கள் தனித்து நின்றபோது பெற்ற 2.9 சதவிகிதம் மட்டுமே. மத்தியில் ஆட்சி இருப்பதை வைத்து பிஜேபி தமிழ்நாட்டில் அதிமுகவை பலவீனப்படுத்தி விட்டு ஆட்சியை பிடிக்கும் என்றால் அதெல்லாம் பெரிய நகைச்சுவை. அதிமுக இல்லாமல் பிஜேபியால் தமிழ்நாட்டில் தேர்தலை சந்திக்க முடியாது என்பதே உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு