தமிழ்நாடு நிர்வாகம்: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
சென்னையை 5 மாநகராட்சியாக பிரித்து ஒரே சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அல்லது வட சென்னை, தென் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமங்கள் என இரண்டு குழுமங்கள் பிரித்து கையாளலாம் என்று கூறியிருந்தேன். தற்போது சென்னை ஒரே பெருநகர வளர்ச்சி குழுமம் ஆக உள்ளது. இதற்குள் சென்னை மாநகராட்சி சுமார் 71 மக்கள் லட்சம் மக்கள் தொகை கொண்டது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சில தாலுகாக்கள் (ஸ்ரீபெரும்புதூர் போன்ற தாலுகாக்கள்), திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில தாலுகாக்கள் (ஆவடி, பூந்தமல்லி), வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம் தாலுகா ஆகியவற்றை இணைத்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆக மாற்றியிருக்கிறார்கள். தற்போது அவர்கள் போட்டிருக்கும் திட்டத்தின்படி முழு சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டம், பிரிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டத்தின அரக்கோணம் தாலுகாவையும் சேர்த்து மொத்தம் 8300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட சென்னை மாநகராட்சி குழுமத்தை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். அப்படிப் பார்த்தால் அது நியூயார்க் நகருக்கு இணையான பரப்பளவு மற்றும் மக்கள் தொகை(1.5 கோடி) கொண்டதாக இருக்கும் .ஆனால் நியூயார்க் நகரின் மொத்த நகர(City GDP) உற்பத்தி சுமார் 1700 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சென்னை பெருநகரின் மொத்த உற்பத்தியில் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள். வருங்காலத்தில் மெட்ரோ ரயில் சேவை, பாலங்கள் ,சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சென்னைப் புறநகர்ப் பகுதிகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரும்போது, மேலும் விமான நிலையங்கள் போன்றவை பெரிய அளவில் காட்டப்படும் போது சென்னையில் உள்நாட்டு உற்பத்தியும் நியூயார்க் அளவுக்கு இல்லை என்றாலும் அதில் பாதி அளவு அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். இப்போது இதற்கான உட்கட்டமைப்பு மற்றும் தொழில் கட்டமைப்பை உருவாக்கி திட்டமிட்டு உருவாக்கினால் தான் சுமார் 10 ஆண்டுகளில் நியூயார்க் நகரின் உற்பத்தியில் பகுதியை அதாவது சுமார் 750 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வர முடியும். மேலும் சென்னையை சுற்றி தொழிற்சாலைகள் குறிப்பாக கார் தொழிற்சாலைகள் அதிக அளவில் இருக்கின்றன .தொழிற்சாலைகளை அதிக கொண்டுவருவது ஏற்கனவே மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகள் மிகுந்த சென்னையில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் .எனவே தொழிற்சாலைகள் போன்றவற்றை தூத்துக்குடி போன்ற தொழில் வளர்ச்சி குறைவாக இருக்கும் சிறு நகரங்களுக்கு ,அதேசமயம் துறைமுகம போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட நகர்களுக்கு மாற்றுவதே நல்லது .சென்னையை பொறுத்தவரை தேவையானவை சாலைகள், மேம்பாலங்கள், மெட்ரோ ரயில்கள், மோனோ ரயில், சென்னை புறநகர் ரயில் விரிவாக்கம் போன்றவை. இவற்றில் முதலீடு செய்யவேண்டியது பில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்கள் அல்லது லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை முதலீடு செய்ய வேண்டி உள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் பெரும்பாலும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தகவல் தொழில்நுட்ப பூங்காக்களால் போக்குவரத்து நெருக்கடி போன்றவை ஏற்பட்டு உள்ளன எனவே சென்னை போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்காக காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,திருவள்ளூர் ,பூந்தமல்லி போன்ற சென்னையின் புறநகர் பகுதிகளில் நிறுவுவதே நல்லது இதன் மூலம் சென்னை நகரின் வளர்ச்சியும் விரிவடையும். சென்னை பிரித்து-5 மாநகராட்சிகள் ஆக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். ஆனால் தற்போது தாம்பரத்தை தனி மாநகராட்சி ஆக்கிவிட்டார்கள். தாம்பரத்தடன் பல்லாவரம் மற்றும் அதன் பக்கத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை இனணத்து மாநகராட்சி ஆக்கியிருக்கிறார்கள் .இதன் மக்கள்தொகை 9 லட்சத்திற்கும் மேல் வருகிறது .மத்திய அரசின் புதிய அறிவிப்பின் படி 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் கொண்டு வரலாம். அப்படிப்பார்த்தால் தாம்பரத்துடன் மேலும் ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளை இணைத்து, தாம்பரத்திலிருந்து மெட்ரோ ரயில் கொண்டு வரலாம. மன்மோகன் சிங் காலத்திலேயே மத்திய அரசு 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களை பெரு நகரங்களாக அறிவித்து அவற்றிற்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களை அறிவித்து, ஜவர்கலால் நேரு நகர வளர்ச்சிக் கழகம் என்ற பெயரில் முன்னேற்ற போவதாக அறிவித்து இருந்தார்கள் ஆனால் பெரிய அளவில் அந்த திட்டம் செயல்படுத்தப்பட வில்லை இருந்தாலும் அதிக அளவில் நிதி ஒதுக்கப் போவதாக அறிந்த கேரள அரசு அதற்கு முன் 3- 5லட்சம் கொண்டிருந்த மாவட்ட தலைநகரங்களில் உடன் 700000 மாவட்டத்தின் மக்கள்தொகை கொண்ட மாவட்டத்தின் பிற பகுதிகளை இணைத்து 10 லட்சம் கொண்ட பெருநகரமாக பதிவாக்கி நிதியை பெறுவதற்கு திட்டம் வகுத்தார்கள் ஆனால் பெரிய அளவில் நிதி ஒதுக்கப்படவில்லை அந்த திட்டம் தோல்வியடைந்தது. தாம்பரம் சுமார் 9 லட்சம் மக்கள் கொண்ட நகரமாக இருப்பது தான் அதற்கு பெரிய நன்மையை ஆகும் விரைவில் அது 10 லட்சம் கொண்ட மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியாக மாறும் போது அது மெட்ரோ ரயில் போன்ற சேவைகள் துவங்குவதற்கு தகுதியான மாநகராட்சியாக மாறிவிடும் .ஆனால் பல்லாவரம் மக்களின் கோரிக்கையை பார்க்கும் போது இது எல்லாம் நடக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் கருத்து என்னவெனில் சென்னைக்கு அருகில் உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில் எவ்வித வளர்ச்சி திட்டங்களும் செயல்படுத்தப்பட வில்லை. எனவே பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்படக் கூடாது .அதைவிட சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் .சென்னை மாநகராட்சியில் தான் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள் .இந்த குறைகளை பார்க்கும்போது ஏற்கனவே அறிவித்தபடி சென்னையை 5 மாநகராட்சியாக பிரிப்பது தான் நல்லது. அப்போது தான் இதுவும் சென்னையின் ஒரு பகுதி என்று நினைத்து வளர்ச்சிப்பணிகளை செய்வார்கள். இப்போதைய நிலையில் சென்னை-5 மாநகராட்சிகளில் பிரிப்பதற்கு வாய்ப்பே இல்லை. இன்னும் ஏழு மாதங்களில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார்கள் ,இருந்தாலும் வருங்காலத்தில் டெல்லியை 3 மாநகராட்சி பிரித்தது போல், சென்னை-5 மாநகராட்சியாக பிரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே வடசென்னை மாவட்ட கோரிக்கை உள்ளது, அதே போல் தனி மாநகராட்சி கோரிக்கையும் வரலாம். அப்போது அவர்கள் கண்டிப்பாக மத்திய சென்னை, தென் சென்னை என்று பிரிப்பார்கள். அப்போது சென்னையின் புறநகர் பகுதிகளளையும் பிரிக்க வேண்டும். அப்போது தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு சென்னை மேற்கு மற்றும் ஆவடியை தலைமையிடமாக கொண்டு சென்னை வடகிழக்கு எனவும் பிரிவித்தால் நன்றாக இருக்கும் .அதேபோல் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் போல் தற்போது கோயம்புத்தூர் பெருநகர் வளர்ச்சி குழுமம் உருவாக்கியிருக்கிறார்கள். அதோடு மதுரை ,திருச்சி ,சேலம் திருப்பூர் போன்ற 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களை கொண்டு பெருநகர வளர்ச்சி குழுமங்களை தோற்றுவிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.
கருத்துகள்
கருத்துரையிடுக