ரவுடிகள் கைது

திண்டுக்கலில் நடைபெற்ற இரட்டைத் தலை துண்டிப்பு கொலைகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் காவல் துறையினர் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்திருக்கிறார்கள். இது நல்லது சில சிறிய அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் வகையில் இந்த ரவுடிகளின் கைது இருப்பதாகவும் கூறுகின்றனர். இது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. திமுக அதிமுக ரவுடிகள் ஆதரித்து இருந்தாலும், அவர்கள் துணையோடு தேர்தல்களில் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் முடிந்த பின்பு அவர்களை என்கவுண்டர் செய்து கொன்றிருக்கிறார்கள் .மேலும் ஒரு நாளும் காவல் துறையினர் ரவுடிகளை கைது செய்யும்போது எங்கள் கட்சி தொண்டர்களை கைது செய்கிறார்கள் என்று கூப்பாடு போட்டது இல்லை. அது அவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பை கெடுக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். ஆனால் சிறிய கட்சிகள் இன்று வெளிப்படையாகவே எங்கள் கட்சிக்கு தேர்தல் வேலை செய்பவர்களை தடுக்கவே  ரவுடிகளை கைது செய்வதாக கூறுகிறார்கள் .இது அவர்கள் , எங்களுக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பை இல்லை யாருடனாவது கூட்டணி வைத்து வெற்றி பெறுவோம் என்று மறைமுகமாக கூறுவது போல் உள்ளது. சிறிய கட்சிகள் இந்த போக்கை நிறுத்திக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் மக்கள் மத்தியில் அவர்கள் ஆதரவை இழக்க நேரிடும். நான் காவல்துறையின் கண்மூடித்தனமான ஆதரவாளன் கிடையாது. சாத்தன்குளம் போன்ற இரட்டைக் கொலைகள் மட்டுமல்லாமல், காவல்துறையினர் அப்பாவி மக்களை அடிப்பதை கூட எதிர்ப்பவன். இருந்தாலும் ரவுடிகள் கைது வரவேற்கத்தக்கது ,ரவுடிகள் சாதாரண தொழில் செய்யும் மக்களுக்கும் எமனாக விளங்கி வருகிறார்கள் அவர்களின் ஊதியத்திற்கு அதிகமாக அவர்களிடம் பங்கு கேட்டு, கொடுக்காத நேரத்தில் அவர்களை கொலை செய்தும் வருகிறார்கள் இப்படிப்பட்ட ரவுடிகளை கைது செய்வதே சிறந்தது மேலும் ஜெயலலிதாவின் 2001-06  ஆட்சியில் ரவுடிகள் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார்கள். அப்போது ரவுடியிசம் குறைந்தது என்றாலும், பின்னர் வந்த கருணாநிதி, ஜெயலலிதா, , எடப்பாடி ஆட்சியில் ரவுடியிசம் பெரிய அளவில் கட்டுப்படுத்தப்படவில்லை அதன் வெளிப்பாடுதான் இப்படிப்பட்ட இரட்டை தலை துண்டிப்பு கொலைகள். தற்போது தமிழக அரசு ரவுடிகள் கைது செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். தொடர்ந்து ரவுடிகளை கைது செய்து அவர்களது கொட்டத்தை அடக்க வேண்டும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு