சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்குநீட்டிக்க வேண்டும்-மாநிலங்கள் கோரிக்கை

ஜி.எஸ்.டி., இழப்பீடு தொடர வேண்டும்' என்று மாநிலங்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. கடந்த 2017 ஜூலை முதல் ஜி.எஸ்.டி., அமலில் உள்ளது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பை மத்திய அரசு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஆடம்பரப் பொருட்கள், புகையிலை, சிகரெட் போன்ற உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி., இழப்பீடு வழங்குவது 2022 ஜூனுடன் முடிவடைகிறது. அதன் பின் 2026 வரை ஆடம்பரப் பொருட்களுக்கு தொடர்ந்து கூடுதல் வரிவசூலிக்கப்படும். இத்தொகை நடப்பு நிதியாண்டு வரை மாநிலங்களின் ஜி.எஸ்.டி., இழப்பீட்டிற்காக பெறப்பட்டுள்ள கடனுக்கு ஈடு செய்யப்படும்.

 இந்நிலையில் 'மாநிலங்களுக்கு வழங்கும் ஜி.எஸ்.டி., இழப்பீட்டை மேலும் ஐந்து ஆண்டுகளுக்குநீட்டிக்க வேண்டும்' என, எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஜிஎஸ்டி ஜிஎஸ்டி மூலம் கிடைக்க வேண்டிய வருவாய் தங்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை, குறைவாக வருகிறது என்ற கூக்குரல் எழுப்பி வருகிறார்கள்,மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தான் உச்சநீதிமன்றம் இருக்கிறது .அப்படி ஜிஎஸ்டி வரி வருவாயை சரியாக கிடைக்கவில்லை என்றால்  மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வரவேண்டிய வருவாயைப் பெறலாம். சரக்கு மற்றும் சேவை வரி சரியான அளவில் மத்திய அரசிடம் இருந்து வரவில்லை எனவே நாங்கள் இந்தத் திட்டத்தில் இருந்து விலகி பழைய வரிவிலக்கு முறைக்கு செல்கிறோம் என்றும் கூறலாம் ,மேலும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதி கேட்டுப் பெறலாம். அதுவும் இல்லாமல் வெறும் கூக்குரல் மட்டுமே எழுப்பக் கொண்டிருந்தால் உள்ளாட்சி அமைப்புகளை போன்ற அதிகாரங்கள் அற்ற அமைப்புக்களாக மாநில அரசுகள் மாறிவிடும் என்பது என்னுடைய எண்ணம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு