தமிழ்நாடு நிர்வாகம்-தாம்பரம்,சென்னை மாநகராட்சிகள்.
தாம்பரத்தை மாநகராட்சி ஆக்கியிருக்கிறார்கள் தாம்பரத்துடன் பல்லாவரம் போன்ற பகுதிகளை இணைத்திருக்கிறார்கள் .இதற்கு பல்லாவரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் அவர்கள் கூறும் காரணம், ஏற்கனவே ஆவடி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட போதும் அங்கே பெரிய வளர்ச்சி பணிகள் நடைபெறவில்லை என்பதே. எனவே பல்லாவரம் பகுதியை தாம்பரம் மாநகராட்சியுடன் நினைப்பதை விட சென்னையுடன் இணைப்பது நல்லது என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களின் கோரிக்கை நியாயமானது காரணம் சென்னை அளவிற்கு மற்ற மாநகராட்சிகள் தமிழ்நாட்டில் கவனிக்க படுகிறதா என்பது சந்தேகமே, சென்னை பெருநகர வளர்ச்சி தமிழ்நாட்டில் ஒரே பெருநகர வளர்ச்சி குழுமம் ஆக இருந்து வந்தது .தற்போது கோயம்புத்தூர் இரண்டாவது பெருநகராட்சி குழுமமாக ஆக்கப்பட்டுள்ளது என்னைக் கேட்டால் மதுரை, திருச்சி ,சேலம் திருப்பூர் போன்ற 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களையும் பெருநகர வளர்ச்சி குழுமமாக அறிவிக்க வேண்டும். என்பதே என்னுடைய கருத்து, வெளிநாடுகளை எடுத்துக்கொண்டால் சுமார் 5 லட்சம் கொண்ட நாட்டின் தலைநகர்கள் கூட பெரு நகரங்களாக உள்ளன .அவற்றின் மெட்ரோ ரயில்கள் விமான நிலையங்களில் பயணிகள் கையாளும் திறன் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட சென்னைக் இணையாக உள்ளது. மத்திய அரசும் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில்கள் தொடங்கலாம் என்று அறிவித்து இருக்கிறது எனவே மதுரை சேலம் திருச்சி திருப்பூர் போன்றவற்றையும் பெருநகர குழுமங்களாக அறிவித்து மெட்ரோ ரயில் போன்ற சேவைகளை கொண்டு வந்து வளர்ச்சி அடையச் செய்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சென்னை மாவட்டம் 46 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக 2011-இல் இருந்தது தற்போது அருகில் அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பகுதிகளை இணைத்து சென்னை மாவட்டத்தை 76 லட்சம் மக்கள் தொகை கொண்டதாக மாற்றி இருக்கிறார்கள். இது மூன்று வருவாய் வட்டங்களாக மாற்றியிருக்கிறார்கள். அம்பத்தூர் தலைமையிடமாக கொண்டு ஒன்று, தண்டையார்பேட்டை கொண்டு தலைமையிடமாகக் கொண்டு வட சென்னை,கிண்டியை தலைமையிடமாகக் கொண்டு தென்சென்னை. அதை கொண்டிருக்கிறது .3 வருவாய் வட்டங்கள் ஆக இருந்தாலும் அது ஒரே மாநகராட்சி ஆகத்தான் இருக்கிறது. ஒரே மாநகராட்சியாக சென்னை முழுவதையும் ஒரு மாநகராட்சி தலைவர், ஒரு அதிகாரி கையாள முடியுமா என்ற சந்தேகம் நெடுங்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது ,அது உண்மையே சென்னையை பொறுத்தவர வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளை மூன்று மாநகராட்சியாக பிரிக்க வேண்டும் .அப்படி பிரித்தால் ஒவ்வொரு மாநகராட்சியும் சுமார் 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட தாக இருக்கும். மேலும் ஸ்ரீபெரும்புதூரில் நாடாளுமன்ற தொகுதியில் பெரும்பாலான சட்டமன்ற தொகுதிகள் சென்னை பெருநகரத்தில் உள்ளே வருகிறது உதாரணமாக தாம்பரம் ,பல்லாவரம், அம்பத்தூர் போன்ற குறைந்தது ஐந்து சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் மட்டுமே பெருநகரத்திற்கு வெளியே வருகிறது இந்த ஐந்து தொகுதிகளை இணைத்து சென்னை மேற்கு என்று தனி மாநகராட்சி உருவாக்கலாம். அதேபோல திருவள்ளூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளான பூந்தமல்லி , மாதவரம் ,ஆவடி போன்றவற்றை இணைத்து சென்னை வடமேற்கு என்ற ஒரு மாநகராட்சி உருவாக்கலாம். 5 ஐந்து மாநகராட்சி களை உருவாக்கி அவை அனைத்தையும் ஒரே பெருநகராட்சி குழுமத்தின் கீழ் கொண்டு வரலாம.இது சென்னையின் வளர்ச்சிக்கு மிக மிக உதவும். சிறிய நாடுகள், சிறிய மாநிலங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது போல் சென்னை 5 மேயர்கள் 5 துணைமேயர்கள், 5 மாநகராட்சி அதிகாரிகளை கொண்டு சிறப்பாக நிர்வகிக்கப்படும். அவ்வாறு இல்லாமல் 70 லட்சம் பேர் கொண்ட மாநகராட்சியாக இருப்பது ,ஒரு மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரி கையாள்வது கடினம்.
கருத்துகள்
கருத்துரையிடுக