தமிழ்நாடு நிர்வாகம்-சிவகாசி,கும்பகோணம் மாநகராட்சிகள்.
சிவகாசி மாநகராட்சி பற்றிய மீண்டும் பார்ப்போம். சிவகாசி வருங்காலத்தில் மாவட்ட தலைநகராகவும் வாய்ப்பு உள்ளது. அதற்கு காரணம் விருதுநகர் மாவட்டம் தமிழ்நாட்டில் பெரிய மாவட்டங்களில் ஒன்றாக சுமார் 4 ஆயிரம் சதுர கிலோ மீட்டருக்கு மேல் உள்ளது மற்றும் மக்கள் தொகை சுமார் 17 லட்சம் 2011 இல். இப்போது 20 லட்சமாக இருக்கலாம் மற்றும் தற்பொழுது 3 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருவதால் 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி தலைநகராகக்கொண்டு வருங்காலத்தில் புதிய மாவட்டம் வரவும் வாய்ப்புள்ளது அப்போது திருப்பூர் போல் சிவகாசியை வளர்ச்சி அடையும் வாய்ப்பு உள்ளது .
கும்பகோணம்.
மற்றொரு மாநகராட்சி கும்பகோணம். கும்பகோணத்தை பொறுத்தவரை நீண்ட நாட்களாக தனி மாவட்ட கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் மாநகராட்சி கோரிக்கை வைக்கவில்லை .ஆனால் அரசாங்கம் அவற்றை மாநகராட்சி அறிவித்துள்ளது இது சற்றே வேடிக்கையானது, கும்பகோணம் கூட 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட தாலுகா தான் , இருந்தாலும் மாவட்டத் தலைநகராக இல்லாததால் நான் முதல்வராக இருந்தாரல் மாவட்ட தலைவராக அறிவித்து விட்டு பின்னர் 5 ஆண்டுகள் கழித்து மாநகராட்சியாக அறிவிக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சுமார் ஏழு லட்சம் மக்கள் தொகை கொண்ட தாலுகாக்களான திருவண்ணாமலை, விழுப்புரம் போன்றவற்றை மாநகராட்சியாக கோரிக்கை வைத்தும் அவற்றை அவர்கள் மாநகராட்சி ஆக்காமல் அதைவிட குறைந்த மக்கள் தொகை கொண்ட தாலுகாவான கும்பகோணத்தை மாநகராட்சி ஆக்கியிருக்கிறார்கள் இத்தனைக்கும் கும்பகோணம் மாவட்ட தலைநகர் வேறு கிடையாது . அதேபோல் காரைக்குடியை மாவட்டத் தலைநகரமாக கோரிக்கை இருந்தபோதும் மன்னிக்கவும் மாநகராக கோரிக்கை கோரிக்கை இருந்தபோதும் ஆக்கப்படவில்லை அதற்கு அவர்கள் கூறும் காரணம் மாவட்ட தலைநகரங்களில் மட்டுமே மாநகராட்சி ஆக்க முடியும் என்று. ஆனால் ஏற்கனவே மாவட்டத் தலைநகர் அல்லாமல் ஓசூர் மாநகராட்சி ஆக்கிவிட்டார்கள். இப்பொழுது அறிவிக்கப்பட்ட 2 மாநகராட்சிகளில் சிவகாசி கும்பகோணம் ஆகியவை மாவட்ட தலைநகர் கிடையாது .அப்படி இருந்தும் மக்கள் கோரிக்கை வைத்த காரைக்குடி மாநகராட்சி ஆக்கவில்லை காரைக்குடி கூட சிவகங்கை மாவட்டத்தில் பெரிய நகரமாக இருந்தாலும் சிவகங்கை அங்கு தலைநகராக உள்ளது எனவே காரைக்குடியை மாநகராட்சி ஆக்குவதன் மூலம் காரைக்குடி மாநகராட்சியும வளர்ச்சி அடைய முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக