புதுச்சேரி வானூர்தி நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த தொடங்கியுள்ள தமிழக அரசு

 புதுச்சேரி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு 106 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது. இதை நான் வரவேற்கிறேன், இது நீண்ட நாட்களுக்கு நாட்களாக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக வானூர்தி விரிவாக்கத் திட்டம் இழுத்துக் கொண்டே இருக்கிறது. இதேபோல்தான் சென்னை புறநகரில் ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம், தனியார் விமான நிலையமாக வரும் என்று 2004 லேயே அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் இதுவரை வரவில்லை .புதுச்சேரி , தூத்துக்குடியை போல சிறிய ரக விமானங்களுக்கானது.

 விரிவாக்கம் செய்தால் கண்டிப்பாக  புதுச்சேரி தமிழகம் இரண்டு மாநிலங்களிலுமுள்ள தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு பெறுவார்கள். கடலூர் ,புதுச்சேரி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களின் வளர்ச்சிக்கு இந்த விரிவாக்கம் துணைநிற்கும். எனவே தமிழக அரசு நிலத்தை அழித்து உதவுவதில் தவறில்லை அவளுக்கு சரியான இழப்பீடுகள் வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் விரிவான செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்குள்ள ஓடுதளம் 1,502 மீட்டர் மட்டுமே கொண்டது. இதில் சிறு விமானங்கள் மட்டுமே வந்துசெல்ல முடியும். ஓடுதளம் 3,300 மீட்டர் இருந்தால்தான் பெரியரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதற்காக கூடுதலாக 1,800 மீட்டர் ஓடுதளம் அமைக்க 240 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

தமிழக அரசு முதல் கட்டமாக 106 ஏக்கர் நிலத்தைப் புதுவை அரசுக்குக் கையகப்படுத்தி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. நிலம் கையகப்படுத்திய பின்பு அதற்கான தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும். இவ்வாறு புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு