செஸ் வரியை கைவிட்டால் ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவர சம்மதம் -பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

 இந்தியா போன்ற நாட்டில்தான் மத்திய அரசு அதிகாரத்திற்குள் நேரடி வரி விதிப்பு முழுக்க முழுக்க இருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட அளவு, மறைமுக வரி, மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி போன்றவை, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில், நகர நிர்வாகங்களுக்கு கூட அதிக அதிகாரம் உள்ளது.


இப்போது, மாநில அரசின் கையில் இருக்கும் வரி விதிப்பு சார்ந்த இரண்டு பெரிய அதிகாரங்கள், மது விற்பனைக்கு விதிக்கப்படும் வரி மற்றும் பெட்ரோல், டீசல் பொருட்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்படும் வரிகள் மட்டும்தான். இதனால் மாநிலங்கள் தங்களிடம் இருக்கும், இந்த வரி சார்ந்த  அதிகாரங்களையும் விட்டுக் கொடுக்க தயாராக   இல்லை. ஏனென்றால் இதிலும் ஒரு பெரும் பாகம், டெல்லி அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கடந்த 7 வருடங்களில் மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி விதிப்பு, ஐந்திலிருந்து, 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. மாநிலங்களுக்கு பகிரப்படும், கலால் வரி விகிதம் மற்றும் மத்திய அரசால் எடுத்துக் கொள்ளக் கூடிய செஸ் மற்றும் கூடுதல் கட்டணமாக 90 சதவீதம் கலால் வரியிலிருந்து, 4 சதவீதம் கலால் வரியாக மாறி இருக்கிறது. மத்திய அரசின் 96 சதவீதம் வரி விதிப்பு, கூடுதல் கட்டணமாக உள்ளது. எனவே, நான் ஏற்கனவே கூறியதைப் போல, மத்திய அரசு, செஸ் வரி மற்றும் கூடுதல் கட்டணம் ஆகியவற்றை அகற்றினால், எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்வோம். 

ஏற்கனவே கேரள உயர்நீதிமன்றத்தில் இது வழக்காக தொடரப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் இதை பரிசீலிக்க வேண்டும் என்று ஹைகோர்ட் கூறியது. அதற்கேற்ப ஜிஎஸ்டி கவுன்சில் விவாதித்துள்ளது. அதற்கான பதில் வழங்கப்பட்டுள்ளது.

ஆங்கில தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் 
இவ்வாறு கூறியுள்ளார் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு