வான் தமிழ்நாடு நூல் பாகம் -1

  தனி விமானம் வாங்கும் முயற்சிகளில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது. அதற்கான வேலைகள் தீவிரமாக நடக்கின்றன. எந்த ஒரு மாநில அரசும் தனி விமானம் வாங்க வேண்டுமென்றால், அதற்கு மத்திய அரசின் அனுமதி அவசியம். அனுமதி தர முடியாது என மத்திய அரசு மறுக்கவும் முடியாது. 16 பேர் அமர்ந்து பயணம் செய்யக் கூடிய சிறிய விமானத்தை வாங்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

தனி விமானம் இருந்தால் நினைத்த நேரத்தில் டில்லிக்கு வந்து போகலாம். தமிழகத்தின் எந்த பகுதிக்கும், பக்கத்து மாநிலங்களுக்கும் உடனடியாக செல்லலாம். ஏர் இந்தியா அல்லது தனியார் விமான சேவைக்காகவோ காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தின் தென்பகுதியில் வெள்ள சேதம் உட்பட பல இயற்கை சீற்றங்களை உடனடியாக சென்று பார்க்கவும் இந்த தனி விமானம் உதவும். இது தற்போது கிடைத்த செய்தி.

அரசியல்வாதிகளுக்கு எப்படி விமான பயணம் முக்கியமோ அதுபோல் பொதுமக்களுக்கும் விமான பயணம் முக்கியம் தமிழ்நாட்டை விட குறைந்த மக்கள் தொகை கொண்ட பிரிட்டனின் விமான போக்குவரத்து தமிழ்நாட்டை விட குறைந்த பட்சம் ஒரு ஏழு ,எட்டு மடங்கு அல்லது பத்து மடங்குக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது .அவ்வளவு ஏன் துபாய் என்ற ஒரு சிறு நகரம், துபாய் தனி மாகாணம் அந்த மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை வெறும் 26 லட்சம் , விமானம் பயணிகள் கையாளும் திறன் 8 கோடிக்கு மேல். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட சென்னையின் பயணிகள் கையாளும் திறன் வெறும் இரண்டரை கோடி மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களை சேர்த்தாலும் மூன்றரை கோடிக்கு மேல் பயணிகள் கையாளப்படுவது இல்லை .அப்படி பார்த்தால் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதற்கு விமான நிலையங்களின் குறைபாடும் ஒரு காரணம்.வான் தமிழ்நாடு என்ற நிறுவனத்தை கொண்டு வருவதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள வானூர்தி நிலையங்களில் நிறைய விமானங்களை இயக்கி இதன் மூலம் விரிவாக்கம் போன்ற பணிகளை கொண்டு வந்து நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி தமிழ்நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற முடியும் என்பதே என்னுடைய கருத்து.


வான் தமிழ்நாடு பற்றி ஒரு கட்டுரை வெளியிட்ட முதல் நாளிலேயே அதிக பார்வை பெற்ற கட்டுரையாக வந்தது. மிகவும் நன்றி வான் தமிழ்நாடு காலத்தின் கட்டாயம் .நம்மை விட சிறிய நாடான இலங்கை வானூர்தி நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. தமிழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) சுமார் 300 பில்லியன் அமெரிக்க டாலர்கள். நம்மை விட நான்கு மடங்கு குறைந்த  சுமார் 80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி கொண்ட இலங்கை விமான நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. 


பெரும்பாலும் தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய முழுமைக்குமான சர்வதேச விமான பயணமானது இலங்கை வழியாகவே நடைபெற்று வந்தது. தற்போது  இண்டிகோ, மற்றும் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைசுஜெட் போன்ற நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு நிலமை சற்று மாறுகிறது.  அதற்கு முன் ஏர் இந்தியா, இந்தியன் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்றவை  ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உடன் போட்டி போட முடியாததால் தென் இந்தியாவின் பெரும்பாலான வெளிநாட்டு போக்குவரத்து இலங்கை வெளியாகவே நடைபெற்று வந்தது. 
 தற்போது தனியார் நிறுவனங்கள் வந்த பிறகு மும்பை , டெல்லி வழியாக ஓரளவிற்கு நடைபெறுகின்றது.

 அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டு இலங்கையை விட நான்கு மடங்கு பெரிய விமான நிறுவனத்தை நடத்த முடியும். தமிழ்நாடு சங்க காலத்திலேயே  வானூர்தி பற்றிய அறிவை கொண்டுள்ளது. வலவன் ஏவா வானூர்தி என்று புறநானூற்றுப் பாடலில் வரும்.  இன்றைய பைலட் பற்றிதான வலவன் என்று அந்த காலத்திலேயே குறிப்பிட்டிருக்கிறார்கள். வலவன் ஏவா வானவூர்தி என்றால் பைலட் இல்லாத வானூர்தி. .அதை அந்த காலத்திலேயே  கற்பனை செய்திருக்கிறார்கள், அல்லது சிறியரக வானூர்திகளை ஏவி பார்த்திருக்கிறார்கள் என்று கொள்ள வேண்டும். இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான இராவணன் கூட வானூர்தியை கொண்டிருந்தான் என்ற குறிப்புகள் வருகிறது. அவர் அடிக்கடி இமயமலை சென்று வந்தார் என்றும் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது வானூர்தி இல்லாமல் அவ்வளவு எளிதாக சென்று வந்திருக்க முடியாது . தேவைகளே விஞ்ஞானத்தின் அடிப்படை என்பார்கள், அதுபோல் ராவணனுக்கு நீண்ட தூரம் பயணம் வேண்டிய செய்ய  தேவை இருந்ததால் விமானம் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கலாம். மேலும் இலங்கையில் வானோடும் களம் இறங்குமிடம் போன்ற இடங்கள் இன்றளவும் இருக்கின்றன .அதை இராவணன் பயன்படுத்திய வானூர்திகள் இறஙகுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் சிலர் கூறுகிறார்கள். அதன் பின்னர் வானூர்தி காணாமல் போனது பற்றி நீங்கள் கேட்கலாம், தமிழ்நாட்டில் பெரும்பாலும் மன்னர்கள் பயன்படுத்தியவை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதிக்கப் படுவதில்லை. 

குறிப்பாக ஐரோப்பியர் ஒருவர் பாரசீகம் சென்றிருக்கிறார், அங்கே பெரிய, பெரிய குடைகளை பிடித்துக்கொண்டு மன்னார்  ஊர்வலமாக சென்று இருக்கிறார். அதை பார்த்து அவர் குடைகள் தயாரித்து மக்களுக்கும் விற்க முயற்சி செய்திருக்கிறார் ,ஆனால் அங்கு அவர்கள் தடை செய்துவிட்டார்கள். மன்னர் பயன்படுத்துவது வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்று தடை செய்யப்பட்டது. பின்னர் அவர் ஐரோப்பாவில் குடைகளை பரப்பினார்  என்று ஒரு கதை படித்ததாக ஞாபகம். அதே போல் தான் நம்முடைய தொழில்நுட்பங்கள் பெரும்பாலும் அந்த காலத்தில் மன்னர்கள் போன்றவர்களுக்கு பயன்பட்டதால் பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் அறிவியல் வளர்ச்சியும் சற்று குறைந்து விட்டது. 

இன்றைக்கு பெரும்பாலும் பெரிய அளவிலான மற்றும் அதிக பயணிகளை கையாளும் திறன் கொண்ட விமான நிலையங்களை கொண்ட நாடுகள் வளர்ந்த நாடுகளாக உள்ளன. குறிப்பாக உலகில் உள்ள 30 பெரிய விமான நிலையங்களில் 16 அமெரிக்காவில் உள்ளது. மற்றும் துபாய் ஆனது உலகிலே அதிக சர்வதேச பயணிகளை கையாண்டு பொருளாதார வளர்ச்சி பெற்ற நகரமாக, குறிப்பாக மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் குறைவாக இருந்தாலும் விமான நிலையம் துறைமுகம் போன்றவற்றின் மூலமாக பொருளாதார வளம் கொண்ட நகரமாக துபாய் விளங்குகிறது. மேலும் வேகமாக வளர்ந்து வரும்/ தற்போது வளர்ந்து விட்ட நாடான சீனாவின் பெய்ஜிங் போன்றவை உலகின் இரண்டாவது மூன்றாவது இடங்களில் வருகிறது. அதை போல சாங்காய் உட்பட சைனாவின் பிற விமான நிலையங்களும்  தற்போது உலகின் முன்னணி விமான நிலையங்கள் ஆக இருக்கிறது . இந்தியாவின் அதிக பயணிகள் கையாளும் விமான நிலையமான டெல்லியை விட பெரிய விமான நிலையங்கள் 5-6 சைனாவில் உள்ளன .தற்பொழுது இந்தியாவில் அதிக பயணியாக பயணிகளை கையாளும் விமான நிலையமான டெல்லி மிக விரைவில் மும்பையை முந்தி பொருளாதார தலைநகராக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம் விமான போக்குவரத்தில் பெற்ற வளர்ச்சியே ஆகும் .

இன்றைக்கு மிகக்குறைந்த வளர்ச்சியை மற்றும் மிக மோசமான வறுமை பஞ்சம் பட்டினி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்காவின் சில நாடுகளே  விமான போக்குவரத்தில் மிகவும் பிந்திய நாடுகளாக உள்ளன. இதிலிருந்த விமானப் போக்குவரத்தின் முக்கியத்துவம், தமிழ்நாட்டிற்கு வான் தமிழ்நாடு கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை உணரலாம். தமிழ்நாடு விமான நிறுவனமானது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கும் மிகுந்த பயனளிக்கக் கூடியதாக இருக்கும்.

வானூர்தி நிறுவனம் தூங்குவதற்கு முன்பாக தமிழ்நாட்டில் உள்ள வானூர்தி நிலையங்களின் நிலையைப் பார்ப்போம் வானூர்தி நிலையங்களின் அடிப்படை கட்டமைப்பு சரியாக இருப்பதும் வானூர்தி நிறுவனம் தொடங்குவதற்கு மிக முக்கியம்.

 சென்னை வானூர்தி நிலையம்

 சென்னை வானூர்தி நிலையமானது தமிழ்நாட்டின் முதல் பெரிய விமான நிலையம் மட்டுமல்ல, இந்தியாவின் நான்காவது முக்கிய விமான நிலையம். சில சமயங்களில் மூன்றாவது முக்கியமான வானூர்தி நிலையமாக இருக்கிறது .அதிமுக ஆட்சி வரும்போது தொழில் வளர்ச்சியை பின் தங்குவதால் பெங்களூருக்கு அடுத்த நான்காவது இடத்திலும், திமுக ஆட்சி வரும்போது  சென்னைக்கு மட்டுமாவது அவர்கள் தொழில் வளர்ச்சியில் முன்னுரிமை கொடுப்பதால் மூன்றாவது இடத்தில் வருக்கிறது .பெங்களூரூவின் மற்றொரு சிறப்பு தகவல் தொழில்நுட்பம். தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா முழுவதிலிருந்தும் பணி செய்பவர்கள் பெரும்பாலும் விமானத்தில் பயணிப்பது , பெங்களூர் அமைந்திருக்கும் தனியார் விமான நிலையம் மிகவும் சுறுசுறுப்பாக செயல் படுவது போன்றவை பெங்களூரு விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய காரணம். என்னதான் பெங்களூர் வானூர்தி நிலையம் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் சர்வதேச விமான போக்குவரத்து, சரக்கு சேவை போன்றவற்றில் சென்னை விமான நிலையமே மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது பெங்களூரு சர்வதேச விமான போக்குவரத்திலும் முந்தி வருகிறது, கொச்சிக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது. சர்வதேச விமான சேவை கூடக்கூட சரக்கு சேவை அதிகரித்து சென்னையை முந்துவதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை வானிலை வானூர்தி நிலையம் சுறுசுறுப்புடன் செயல்பட்டால்தான் 3 ஆம் இடத்தை தக்க வைக்க முடியும் .அரசு அதிகாரிகளால் அதை செயல்படுத்த  முடியுமா என்பது கேள்விக்குறியே. தனியார்மயத்தை ஊக்குவிப்பவன் அல்ல நான் இருந்தாலும் போட்டி கொடுக்கும் விதத்தில் சென்னை விமான நிலையம் செயல்பட வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம். கண்டிப்பாக வான் தமிழ்நாடு தொடங்கப்பட்டாலும அதன் தலைமை இடம் சென்னை அவர் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாடு மற்றும் தென் இந்தியாவில் உள்ள மற்ற விமான நிலையங்களை, சென்னை விமான நிலையம் வாயிலாக டெல்லி, மும்பை, கொல்கத்தா ,அகமதாபாத் போன்ற விமான நிலையங்களுடன் இணைப்பது சிறந்த தேர்வாக இருக்கும், சென்னையே எனவே இதன் தலைமை இடமாகவும் இருக்கும்.

கோயம்புத்தூர் வானூர்தி நிலையம்:

 கோயம்புத்தூர் வானூர்தி நிலையம் ஆனது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையம். கோயம்புத்தூர் இந்தியாவின் 10 தொழில் நகரங்களுக்குள் வந்தாலும், கோயம்புத்தூர் விமான நிலையமானது பத்தாமிடத்தில் இல்லை, 20 ஆம் இடத்திற்கு பிறகு தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.பாட்னா போன்ற தொழில் வளர்ச்சி இல்லாத நகரங்கள் கூட தலைநகராக இருப்பதால், கோயம்புத்தூரை விட அதிக விமான பயணிகளை கையாளும் விமான நிலையங்களாக உள்ளன .கொச்சி கூட தொழில்துறையில் கோயம்புத்தூரை விட பின்தங்கி இருந்தாலும் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்தில் கோயம்புத்தூரை விட முன்னிலையில் உள்ளது. கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்த தனியார் வானூர்தி நிறுவனங்கள் விமானங்களை இயக்கினாலும், போதுமான விமான நிலையங்களை அவர்கள் இயங்குவதில்லை .பெரும்பாலான விமான நிறுவனங்கள் வட இந்தியாவை குறிப்பாக மும்பை, டெல்லியை தலைமையிடமாக கொண்டதால், அவை சென்னை பெருநகரம் என்பதால் ஓரளவுக்கு இயக்குகின்றன. ஆனால் கோவையை அந்த அளவுக்கு கண்டு கொள்வதில்லை. ஆனால் நிறைய விமான சேவைகளை இயக்கினால் கோவையில் இருந்து அதிக அளவில் பயணிகள் பயணிப்பார்கள். சர்வதேச விமான சேவையாக இருக்கட்டும், உள்நாட்டு விமான சேவையை இருக்கட்டும் பயணிகளை ஈர்க்க முடியும். மதுரை விமான நிலையம் முன்பு மிகக்குறைந்த அளவே வானூர்திகளை இயக்கினாலும், தற்போது அதிக விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் ,அதிக பயணிகளை  ஈர்த்தது. ஆனால் கோரானா வந்து தற்போது விமான நிலையங்கள் முடங்கி முன்பு இயக்கியத்தை விட மிகக் குறைந்த அளவே விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாம் வான் தமிழ்நாடு தொடங்கினால், சென்னைக்கு அடுத்து அதிக பயன் பெறும் விமான நிலையம் கோயம்புத்தூர் வானூர்தி நிலையம் ஆகத்தான் இருக்கும் .காரணம் கோயம்புத்தூரில் இருந்து மும்பை, டெல்லி ,கொல்கத்தா ,போன்ற நகரங்களுக்கும் ,சென்னை, பெங்களூரு ,ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கும், பூனே, கோவா போன்ற நகரங்களுக்கும் அதிகமான வானூர்திகளை இயக்க முடியும் இதன் மூலம் மற்றவர்களுக்கும்  கோயம்புத்தூரின் உண்மையான வானூர்தி சந்தை நிலவரத்தை காண்பிக்கவும் முடியும். கோயம்புத்தூர் வானூர்தி நிலையம் பெரிய விமான ஓடுதளத்தைக் கொண்டுள்ளது .திருச்சி மதுரை போன்றவை ஓரளவு சிறிய விமான ஓடுதளத்தை கொண்டாலும், கோயம்புத்தூர் பெரிய விமான ஓடுதளத்தை கொண்டதால் பெரிய விமானங்களையும், அதிக தொலைவில் உள்ள விமான நிலையங்களுக்கும் வானூர்தி சேவைகளை வழங்க முடியும் .மேலும் கோயம்புத்தூரில் இருந்து தற்பொழுது மிகக் குறைந்த அளவே சர்வதேச விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக  தமிழ்நாடு வானூர்தி வந்தால் கோயம்புத்தூரில் இருந்து சிங்கப்பூர் ,மலேசியா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சுமார் 10 விமான நிலையங்கள் என 15 க்கும் மேற்பட்ட சர்வதேச வானூர்தி சேவைகளை இயக்க முடியும். கேரளாவில் உள்ள வானூர்தி நிலையங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள மற்ற விமான நிலையங்களில் இருந்து கோயம்புத்தூருக்கு இணைப்பு விமானங்களை இயக்குவதன் மூலம் கோயம்புத்தூர் ஆனது மற்ற பெருநகர விமான நிலையங்களைப் போல  மாறவும் வாய்ப்பு உள்ளது.

மதுரை வானூர்தி நிலயம்

மதுரை விமான நிலையமானது தமிழ்நாட்டின் நான்காவது பெரிய வானூர்தி நிலையம் ஆக இருந்தாலும், உள்நாட்டு போக்குவரத்து மற்றும் உள்நாட்டு சரக்கு போக்குவரத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மதுரையிலிருந்து கொழும்பு, சிங்கப்பூர், துபாய் போன்ற இடங்களுக்கு சர்வதேச விமான சேவைகள் ,மலேசியா ,பாங்காக் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சுமார் ஒன்பது  விமானநிலையங்களுக்கு விமானங்களை இயக்கினால் பயணிகளை ஈர்க்க முடியும். தமிழ்நாட்டில் இருந்து நிறையபேர் மத்தியகிழக்கு மற்றும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் வேலை செய்வதால் பயணிகள் விமானத்தை இயக்கும்போது பயணிகள் எண்ணிக்கை குறைவு என்ற பிரச்சினை வராது. மேலும் பயணிகள் எண்ணிக்கை குறைவு பிரச்சனை வராமல் இருக்க  கொச்சி, திருவனந்தபுரம் ,கோழிக்கோடு, போன்ற கேரள மாநிலங்களில் இருந்து சிறியரக இணைப்பு விமானங்களை மதுரை இயக்கலாம் மேலும் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் வழியாக மும்பை, டெல்லி ,கொல்கத்தா போன்ற நகர்களுக்கும் மேலும் மும்பை, டெல்லிக்கு மதுரையிலிருந்து இடைநில்லா விமானச் சேவைகளை இயக்கினாலும் பயணிகளை ஈர்க்க முடியும்.

திருச்சி வானூர்தி நிலையம் 

திருச்சி வானூர்தி நிலையம் ஆனது சென்னைக்கு அடுத்த இரண்டாம் பெரிய சர்வதேச விமான நிலையம். கோலாலம்பூர்- திருச்சி இடையேயான வானூர்தி சேவையாது இந்தியாவிலேயே அதிகமான சேவைகளை கொண்டதாக, வாரத்திற்கு சுமார் 36 வானூர்தி சேவைகளை கொண்டதாக இருந்தது .சென்னை  முப்பத்திமூன்று சேவைகள் அல்லது 30 சேவைகளை கொண்டதாக இருந்தது என்று நினைக்கிறேன். இத்தனைக்கும் திருச்சி- கோலாலம்பூர் விமான சேவைகள் 2008 ஆண்டு அளவிலேயே துவங்கப்பட்டன .சென்னை- கோலாலம்பூர் சேவை எழுபதுகளிலேயே துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.திருச்சி- கோலாலம்பூர் 13 ஆண்டுகளில் அந்த அளவு வளர்ச்சி கண்டது .இதிலிருந்தே தமிழ்நாட்டில் உள்ள சிறிய விமான நிலையங்கள், அதாவது சென்னைக்கு அடுத்த இரண்டாம் நிலை நகரங்களில் விமான நிலையங்கள் எந்த அளவு புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றன, வாய்ப்பு கொடுத்தால் எந்த அளவு வளர்ச்சி அடையும்  என்பது விளங்குகிறது. அதேபோல் திருச்சி- சிங்கப்பூர் சேவையும் ,இந்திய விமான நிலையங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து வழங்கப்படும் அதிக  எண்ணிக்கை கொண்ட சேவைகளில் முதல் ஐந்து இடங்களில் வரும் என்று நினைக்கிறேன். தற்போது கொரான காலத்தில் அத்தியாவசிய விமான சேவைகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் சிங்கப்பூருக்கு பயணிகளை கையாளுவதில் சென்னையை முந்தி முதலிடம் பிடித்துள்ளது. தற்போதைய காலத்தில் சிங்கப்பூருக்கு அதிகமான பயணிகள் செல்வது திருச்சி விமான நிலையத்தில் இருந்து தான். மேலும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் திருச்சியில் இருந்து இரண்டு வானூர்தி சேவைகளை இயக்கி வந்தது. பெரும்பாலும் இந்த பயணிகள் மத்திய கிழக்கிற்கான பயணிகள் அவர்கள் துபாய், அபுதாபி,சவுதி போன்ற நாடுகளுக்கு சென்று வருபவர்கள். ஆனால் திருவனந்தபுரம் கொச்சி போன்ற அதிக அளவு மத்தியகிழக்கு பயணிகள் செல்லும் விமான நிலையத்திலிருந்து தினசரி ஒரு வருமானத்தை மட்டுமே இயக்குகிறது. இதிலிருந்து திருச்சிக்கான மத்திய கிழக்கு விமான சேவையும் குறைவாக இயக்கப்படுகிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம் .இத்தனைக்கும் திருச்சியில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையிலிருந்து கொழும்பிறகு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஒரு விமான சேவை இயக்குகிறது. திருச்சி யிலிருந்து கேரள மாநிலங்களுக்கு இணையாக மத்திய கிழக்கிற்கும், சென்னைக்கு இணையாக சிங்கப்பூர் ,மலேசியாவுக்கும் சர்வதேச பயணிகள் விமானம் இயக்கப்படவேண்டும் திருச்சி விமான நிலையம் அந்த அளவுக்கு வளராததற்கு மேலும் ஒரு காரணம் அதன் ஓடு தளமானது சென்னை திருவனந்தபுரம் போன்றவற்றுடன் ஒப்பிடும்பொழுது சிறிய அளவிலேயே இருப்பதேயாகும். பெரிய அளவில் இருந்தால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியன் ஏர்லைன்ஸின் மிகப்பெரிய வானூர்திகள் கூட இயக்கப்பட்டு இருக்கும். ஆனால் இப்போது A320 போன்ற180 பேர் வரை பயணிக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது டெர்மினல் பில்டிங் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. ஓடுதள விரிவாக்க பணிகள் நடைபெற்றால் திருச்சி விமான நிலையமானது இன்னும் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகமில்லை. அது மட்டுமல்ல திருச்சி வானூர்தி நிலயம் பற்றி கிண்டலாகச் சொல்வார்கள் ,திருச்சியில் சர்வதேச விமானநிலையம் மட்டுமே உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து கிடையாது என்று .ஆனால் தற்பொழுது சென்னை பெங்களூர் ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஜெட் ஏர்வேஸ் மூடப்படுவதற்கு முன்புவரை திருச்சியில் இருந்து மும்பை டெல்லி விமான சேவைகளை வழங்கியது .அப்போதுகூட வெற்றிகரமாகவே அந்த சேவை இயங்கி வந்தது .வான் தமிழ்நாடு தொடங்கினால் திருச்சி சர்வதேச விமான போக்குவரத்து முனையம் இந்தியாவின் முதல் 10 வானூர்தி நிலயங்களாக  மாறும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தூத்துக்குடி வானூர்தி நிலையம்

தூத்துக்குடி வானூர்தி நிலையமானது தமிழ்நாட்டின் ஐந்தாவது பெரிய வானூர்தி நிலையம் அதாவது, ஐந்தாவது அதிக பயணிகளை கையாளும் விமான நிலையம். முதல் நான்கு இடங்களை முறையே சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை ஆகிய வருகின்றன தூத்துக்குடி 1990 களில் திறக்கப்பட்டும சுமார் பத்து, பன்னிரண்டு ஆண்டுகள் பெரிய விமான போக்குவரத்து இல்லாமலும், சேவை துவக்கப்பட்ட  சிறிது நாட்களிலேயே நிறுத்தப்படுவம் ஆக இருந்தது .ஆனால் 2003 தன்னுடைய சேவையை தூத்துக்குடிக்கு ஏர் டெக்கான் தொடங்கிய பிறகு இன்றுவரை சுமார் 18 ஆண்டுகள் வெற்றிகரமாக சென்னை கான சேவையை வழங்கி வருகிறது. சென்னைக்கு மட்டுமே தூத்துக்குடியில் இருந்து சுமார் ஐந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெங்களூருக்கு கூட ஒன்றிரண்டு சேவைகள் வழங்கப்பட்டு, இப்போது கொரானா காரணமாக சில வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்டு இருக்கலாம். தற்போது விமான போக்குவரத்து கழகமானது தூத்துக்குடியில் வானூர்தி தள விரிவாக்கத்தில் ஈடுபட்டுவருகிறது. இது ஓடுதள விரிவாக்கமும் அடங்கும். தற்போது  1350 மீட்டரிலிருந்து 3150 மீட்டராக ஓடுதளம் விரிவாக்கப்பட இருக்கிறது. தற்போது உள்ள நிலையில் 70 பயணிகளை கொண்ட விமானங்களை மட்டுமே அதிகபட்சமாக இயக்க முடியும். விரிவாக்கப்படும் போது A321 போன்ற 215 பயணிகள் கொண்ட விமானங்களை இயக்க முடியும். இது தூத்துக்குடி விமானத்தின் வளர்ச்சிக்கு மிகவும் சாதகமாக அமையும், இண்டிகோ போன்றவை தூத்துக்குடியிலிருந்து மும்பைக்கும், சென்னைக்கும் பெரிய மரங்களை இயக்க இது வழிபுரியும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆனது தூத்துக்குடிக்கு விமானத்தை இயக்குவதற்கும் இது வழிவகுக்கும். இதன் மூலம் சர்வதேச விமான வரைபடத்தில் தூத்துக்குடி விரைவில் தடம் பதிக்கும். விமான விரிவாக்கம் பற்றி கனிமொழி அவர்கள் சில முறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துள்ளார்கள். கிட்டத்தட்ட தற்போது தூத்துக்குடி விரிவாக்க பணிகள் துவங்கும் நிலையில் உள்ளது. ஏற்கனவே நிலங்கள் 600 ஏக்கர் நிலம் ஆனது விமான நிலைய ஆணயத்திடம் கொடுக்கப்பட்டுவிட்டது மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் அனுமதி கிடைத்து விட்டதால் பணிகள் கிட்டத்தட்ட துவங்கும் நிலையில் உள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் பணிகளை முடித்தால் தூத்துக்குடியில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்காக எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கீழே செய்திகளாக கொடுக்கப்பட்டுள்ளன.

  • AAI- ன் தூத்துக்குடி விமான நிலையம் 381 கோடி ரூபாய் செலவில் கட்டங்களாக பெரிய மேம்பாட்டுக்கு உட்பட்டுள்ளது.

  • விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு முனைய கட்டிடத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது, இது 13,530 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.

  • தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் ஏஏஐக்கு அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை பூர்த்தி செய்ய உதவும்

அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்து மற்றும் சிறந்த சேவைகளுக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) தூத்துக்குடி விமான நிலையம் 381 கோடி ரூபாய் செலவில் கட்டங்களாக பெரிய முன்னேற்றத்திற்கு உட்பட்டுள்ளது. முதன்மைத் திட்டத்தில் விரிவாக்க விரிவாக்கம் மற்றும் ஏற்கனவே இருக்கும் ஓடுபாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

சேலம்,மற்ற வானூர்தி நிலையங்கள் ஒரு பார்வை:

சேலம் வானூர்தி நிலயமானது நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் இருந்து வந்தது, ஆனால் மக்களின் பெரும் முயற்சிக்குப் பிறகு கிங்ஃபிஷர் வானூர்தி நிறுவனம் சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கியது. முதல் சேவையில் 72 பேர் வரை பயணித்தார்கள் .72 பேர் என்றால் 100% இருக்க்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. ஆனால் கிங்பிஷர் வானூர்தி நிறுவனமானது மோசமான செயல்பாடு காரணமாக விமான சேவையை நிறுத்திய பிறகு ட்ரூ ஜெட் (True Jet) விமான சேவையை சேலத்திலிருந்து துவங்கியது. இந்த சேவை பிரதமரின் உடான் (Regional Connectivity Scheme)திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டது .ஆனால் உடான்(RCS) திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் சேலம் வானூர்தி நிலயத்திலிருந்து சேவையை தொடங்குவதற்கு வழிவகுத்தது. 


சேலம் விமான நிலையம் 1806 மீட்டர் நீளமான ஓடுதளத்தை கொண்டது. இது தூத்துக்குடியை விட பெரிய ஓடு தளமாகும். சேலத்தில் இருந்து பெரிய ரக விமானங்களை இயக்க முடியும் , குறிப்பாக  சேலத்தில் இருந்து அருகில் உள்ள வானூர்தி நிலயங்களுக்கு பெரிய ரக விமானங்களை இயக்கி, அங்கிருந்து எரிபொருள் நிரப்பி பின்னர் வேறு வானூர்தி நிலையங்களுக்கு இயக்க செய்யலாம் .உதாரணமாக சேலத்தில் இருந்து சென்னை வழியாக டெல்லி, பெங்களூர் வழியாக மும்பை, துபாய், சிங்கப்பூர் போன்றவற்றிற்கு சர்வதேச விமான சேவைகள் கூட இயக்க முடியும். தூத்துக்குடியிலிருந்து பெரிய விமான சேவைகளை இயக்க முடியாது ஆனால் சேலத்திலிருந்து பெனால்டி லோடு என்பார்கள் ,அதாவது குறைந்த அளவு எடையுடன் குறைந்த தூரம் கொண்ட ஓடுதளத்தில் விமானத்தை இயக்குவது. அது தூத்துக்குடியில் ஓடுதளம் வெறும் 1350 மீட்டர் மட்டுமே இருப்பதால் இயக்க முடியாது. சேலத்தில் 1800 மீட்டர் வரை இருப்பதால் பெரிய ரக விமானங்களை இயக்க முடியும். ஆனால் எரிபொருள் குறைந்த அளவே நிரப்பி அங்கிருந்து சென்னை சென்று சென்னையில் அதிக எரிபொருள் நிரப்பி அங்கிருந்து டெல்லி ,மும்பை ,துபாய் ,சிங்கப்பூர் போன்ற வானூர்தி நிலயங்களுக்கு  இயக்க முடியும் .ஆனால் யாரும் இதுவரை முன்வரவில்லை ,முன்வரும் போது தான் வரவேற்பையும் புரிந்து கொள்ள முடியும் .சேலத்தில் இருந்து பெங்களூருக்கு கூட இதுவரை விமான சேவைகள் இயக்கப்படவில்லை.


 சேலம் விமான விரிவாக்கத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள் .சுமார் 600 ஏக்கர் நிலம் விரிவாக்கத்திற்கு தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சேலம் இரும்பாலையில் 4,000 ஏக்கர் நிலத்தில் 2500 ஏக்கர் நிலம் சும்மாவே இருக்கிறது அங்கே புதிய வானூர்தி நிலையம் கட்டுங்கள் என்கிறார்கள் கட்டுகிறார்கள், அவர்களின் கோரிக்கை நியாயமானது விவசாய நிலத்தைப் பிடுங்குவதற்கு பதிலாக புதிய விமான நிலையத்தை கட்டுவது நல்லது. மேலும் இப்போது இருக்கும் வானூர்தி நிலயததை  நீட்டிக்க வேண்டுமானாலும் முழுவதுமாக உடைத்து தான் கட்ட வேண்டும் ,எப்படியும்  புதிதாக கட்டுவதற்குரிய செலவாகும் என்று கூறுகிறார்கள் ,எனவே புதிய வானூர்தி நிலயம் கட்டுவது நல்லது. இப்போது இருக்கும் விமான நிலையத்தை பிளையிங் ஸ்கூல் அல்லது இந்திய விமானப்படைக்கு வழங்கலாம்.


 சேலம் விமான நிலையம் பெங்களூரு சென்னைக்கு அருகில் உள்ளது ,மற்றும் சேலம் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரம் என்பதால் சேலத்திலிருந்து வான் தமிழ்நாடு  விமான சேவையைத் தொடங்கும் போது விரைவாக வளர்ச்சியடையும். மேலும் சேலத்தில் இருந்து அதிக பயணிகள் வருவார்கள், பயணிகள் வருகை குறைவாக இருக்கும் என்பது தவறான கருத்து. பெரும்பாலான நிறுவனங்கள் தற்போது பெருநகரங்களில் இருந்து மற்றும் வட இந்திய நகரங்களில் அதிக கவனம் செலுத்துகின்றன. அவர்களின் குறை கிடையாது அவர்கள் பெரும்பாலும் மும்பை, டெல்லி போன்ற வட இந்திய நகரங்களை தளமாகக் கொண்டு இயங்குகிறார்கள். ஏர் டெக்கான் நிறுவனம் சென்னை-தூத்துக்குடி வானூர்தி சேவையை கொண்டு வந்த பிறகுதான் தூத்துக்குடி விமானநிலையம் உயிர் பெற்றது. அதேபோல் தென் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட கிங்ஃபிஷேர்,ட்ரூ ஜெட் போன்றவையே சேலத்திற்கான வானூர்தி சேவையை துவங்கின. தென் இந்தியாவை தளமாகக் கொண்ட வானூர்தி நிறுவனங்களால், தமிழ்நாட்டில்  சேலம், தூத்துக்குடி ஆகிய இரு வானூர்தி நிலையங்கள்  செயல்படத் தொடங்கின என்றால் வான் தமிழ்நாடு வந்தால் செயல்படாமல் இருக்கும் இன்னும் ஒரு பத்து வானூர்தி நிலையங்கள் செயல்படத் தொடங்கும். நீங்கள் தமிழ்நாட்டில் மேலும் 10 வானூர்தி நிலையங்கள் இருக்கிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவற்றின் பெயர்களை  வரும் வரும் கட்டுரைகளில் பார்ப்போம்.


ஓசூர் வானூர்தி நிலையம் 

ஓசூர் வானூர்தி நிலையமானது இந்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் உள்ளது .என்றாலும் பெங்களூரில் அமைந்துள்ள தனியார் சர்வதேச விமான நிலையத்திற்கு ஆதரவாக முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனியார் நிறுவனங்களில் மோசமான செயல்பாடுக்கு இது உதாரணமாகும். அவர்கள் இந்திய அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறார் பெங்களூரிலிருந்து 125 கிலோ மீட்டர் தொலைவில் வேறு எந்த விமான நிலையமும் 25 ஆண்டுகளுக்கு வரக்கூடாது என்று .ஆதலால் ஓசூரில் இருந்து விமானம் இயக்க வேண்டும் என்றால் அவர்களிடமிருந்து அனுமதி பெற்று தான் ,அதாவது அவர்கள் பிரச்சனை இல்லை என்று கடிதம் அளித்த பின்பு தான் இயக்க முடியும். மத்திய அரசு இத்தனைக்கும் ஓசூர் வானூர்தி நிலையத்தை உடான் திட்டத்தின் கீழ் சேர்ந்திருந்தாலும், அவர்கள் ஒப்புதல் வழங்காததால், இதுவரை ஓசூரில் இருந்து விமான சேவைகளை இயக்க முடியவில்லை.


 காவேரி எங்கள் நாட்டில் இருக்கிறது என்று தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகம்  தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு விமான நிலையத்தை செயல்படாமல் விடாமல் தடுப்பது எவ்விதத்தில் நியாயம், இது மோசமான முன்னுதாரணம் ஆகும். இந்திய அரசானது இனிமேல் இப்படிப்பட்ட ஒப்பந்தங்களை  தனியார் நிறுவனங்களுடன் போடக்கூடாது. லண்டனை சுற்றி ஐந்து  வானூர்தி நிலையங்கள் இருக்கின்றன. பெங்களூரில் பழைய எலங்கா வானூர்தி நிலையத்தை, புதிய தனியார் விமான நிலையத்திற்கு சாதகமாக மூடிவிட்டார்கள் .அப்படி மூடி இருக்க கூடாது என்பதே என் கருத்து. இரண்டு விமான நிலையங்களை வைத்திருக்க வேண்டும் .பெரும்பாலும் வளர்ந்த நாடுகளில் நகரங்களை  சுற்றி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வானூர்தி நிலையங்கள் இருக்கிறது. அவ்வளவு ஏன் இவர்கள் போட்ட ஒப்பந்தத்தின்படி 125 கிலோ மீட்டர் வான்  தொலைவு அப்படி என்றால் சாலை வழியாக  150 கிலோ மீட்டர் தொலைவுக்கு மேல் வரும். அப்படிப் பார்த்தால் திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் ,மதுரை விமான நிலையம் கொண்டு வந்து இருக்கவே முடியாது. திருச்சி, மதுரை தரைவழி தொலைவு 132 கிலோ மீட்டராக இருந்தாலும் திருச்சி ,மதுரை கான வான்வழி தொலைவு வெறும் 100 கிலோ மீட்டர்தான். ஆனால் அங்கே இரண்டு பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ளது .அதே போல் கேரளாவிலும் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் 3,4 விமான நிலையங்களில் அடுத்தடுத்து வருகின்றன. 130 கிலோ மீட்டர் தரைவழி தொலைவில்  திருவனந்தபுரம் ,கொச்சி ,கோழிக்கோடு, கண்னூர் போன்ற வானூர்தி நிலையங்கள் அமைந்துள்ளன. ஏற்கனவே இந்தியாவில் இதேபோன்று 125 கிலோ மீட்டர் தொலைவிற்குள் வானூர்தி  நிலையங்கள் அமைந்திருந்தும் பெங்களூரில் அமைந்த சர்வதேச விமான நிறுவனத்துக்கு சாதகமாக இப்படி ஒரு ஒப்பந்தத்தை போட்டிருக்க கூடாது. 

இத்தனைக்கும் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் மத்திய அரசின் விமானப் போக்குவரத்து நிறுவனம் தொடங்க திட்டம் வகுக்கும் போது, பழைய வானூர்தி நிலையததை மூடாமல் இரண்டையும் செயல்பட வைக்கும் திட்டத்துடன் இருக்கும் போது, இப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு இருக்கவே கூடாது. அது மட்டுமல்ல இதை தமிழக அரசு நினைத்தால் இந்த பெங்களூரில் உள்ள  தனியார் விமான நிறுவனத்தை மிரட்டி பணிய வைக்க முடியும், எங்களுக்கு ஓசூரிலிருந்து வானூர்தி சேவைகளை வழங்க ஒப்புதல் அளிக்காவிட்டால், பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டிற்கு சேவைகள் இயக்க அனுமதியில்லை,  ஒன்றிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வேண்டும் இல்லை  என்றால் பெங்களூக்கான வானூர்தி  சேவைகள் ரத்து செய்யப்படும் ,என்று அறிவித்தால் அவர்கள் உடனடியாக ஓடிவந்து ஒப்புதல் (NOC) தருவார்கள். காரணம் பெங்களூர் விமான நிலையத்தின் மொத்த பயணிகள் கையாளும் திறன்  மூன்று கோடி என்றால் அதில் சுமார் 50- 60 லட்சம் தமிழ்நாட்டில் இருந்து தான் வருகிறது. அப்படி இருக்கும்போது தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தால் அவர்கள் கண்டிப்பாக  ஓடிவந்து ஒப்புதல் வழங்குவார்கள். 


அதுமட்டுமல்ல அவர்களுடன் வேண்டுமானால் சமாதானமாக பேசி ஓசூர் விமான நிலையத்திலும், புதிய பயணிகள் முனையம் கட்டி அதை அவர்கள் ஏற்று நடத்தவும் வழிவகுக்கலாம். பெங்களூரை கையாளுவது போல் நீங்களே கையாளுங்கள் விரைவாக கட்டிக் கொடுங்கள் என்று அறிவித்தால் அவர்களில் இன்னொரு விமான நிலையம் தங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியில் ஓசூர் வானூர்தி நிலையத்தையும் பெங்களூர் வானூர்தி நிலையத்திற்கு இணையாக தரம் உயர்த்தி நடத்துவார்கள். சண்டையோ, சமாதானமோ என்பதை பெங்களூரு தனியார் விமான நிலையதுடனான  பேச்சுவார்த்தைக்கு பின் தமிழக அரசு முடிவு செய்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் அவர்கள் சமாதானத்திற்கு வருவார்கள் என்று நினைக்கிறேன். 

ஏற்கனவே கூறியபடி மதுரை ,திருச்சி வானூர்தி நிலையங்கள் அளவுக்கு ஓடுதள வசதி கொண்டது ஓசூர் விமான நிலையம் எனவே பெரிய  180 பபேர் வரை பயணிக்கும் வானூர்திகளை இயக்க முடியும். மேலும் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் பார்க் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களுக்கு மிக அருகில் ஓசூர் இருப்பதால், விமான சேவை தொடங்கப்பட்ட உடன் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ,மற்றும் வருபவர்கள் பெரும்பாலும் ஓசூர் விமான நிலையத்தையே தேர்வு செய்வார்கள், என்று அங்கே பணிபுரிபவர்கள் ,பெங்களூரில் படித்தவர்கள் நிறைய தமிழர்கள், மலையாளிகள் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு ஓசூர் விமான நிலையமானது வளர்ச்சிக்குரிய வாய்ப்புகளை கொண்டுள்ளது.

ஓசூரில்  இருந்து மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தாவிற்கும் மற்றும் தமிழக, கேரள மாநில வானூர்தி நிலையங்களுக்கும் , வானூர்தி சேவையை இயக்கினால் ,அது மும்பை, மற்றும் டெல்லி ,கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு மாற்றுவழி (Transit) விமான நிலையமாக அமைவதோடு மட்டுமல்லாமல், விரைவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், அதன் பின்னர் படிப்படியாக மற்ற நிறுவனங்கள், குறிப்பாக பெங்களூரில் இருந்து சர்வதேச விமான சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு சேவையைத் தொடங்கும் போது வெகு விரைவாக வளர்ச்சி அடையும், அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு மற்றும் கர்நாடக பகுதிகளின் வளர்ச்சிக்கும் வழி கொடுக்கும். தமிழக அரசு வெகு விரைவாக செயல்பட்டு ஓசூர் விமான நிலையத்தை செயல்பட வைக்க  வேண்டும் .


தற்போது பெங்களூரில் தனியார் விமான நிலையமானது ஓசூரில் இருந்து ஒரே ஒரு விமான சேவையை வழங்குவதற்கு ஒப்புதல் வழங்க முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன .அது நல்லது அல்ல, ஓசூரில் இருந்து முழு விமான சேவைகளை வழங்க அனுமதி அளிக்க வேண்டும் .இன்றைக்கு லண்டனை சுற்றி 5  வானூர்தி நிலையங்களில் சுமார் 13 கோடி பயணிகளை கையாளுகின்றனர் .ஓசூரில் விமான நிலையம்  வந்தாலும் அது பண்டிகை காலங்களில் பெங்களூர் வானூர்தி நிலையத்தில்  ஏற்படும்  நெருக்கடிகள் ,  பெங்களூரு விமான ஓடுதளம் நெருக்கடிகளை குறைத்து ஓசூருக்கு பயணிகளை திருப்பி விடுவதற்கு பயன்படும். ஓசூர் விமான நிலையமானது, பெங்களூர் விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுமே தவிர தடையாக இருக்காது. 


மேலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகள் ஆகிய கிருஷ்ணகிரி ,தர்மபுரி போன்றவையும் வெகு விரைவாக வளர்ச்சியடையும். இன்று பெரும்பாலும் பெங்களூருக்கு வேலை தேடி செல்பவார்கள் தமிழ் நாட்டின் வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்வோர் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதனால்தான் கன்னடர்கள் பெரும்பாலும் தமிழர்களை மதிப்பதில்லை .இந்த பகுதியில் தொழில் வளர்ச்சி பெற்றால் கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்கள் அமோக வளர்ச்சி பெறுவார்கள். இதன் மூலம் இதன்மூலம் கர்நாடகாவில் தமிழர்கள் வேலை தேடி செல்வது குறையும், தமிழர்களின் நன்மதிப்பு கர்நாடகாவிலும் உயரும்.

ஓசூர் விமான நிலையம் பற்றிய செய்தி துளிகள்:

சென்னையில் இருந்து ஓசூருக்கு விமானம்  இயக்கப்படும் .

ஒரு தனியார் நிறுவனத்தால் கையாளப்படும் விமான சேவை உடான்(RCS) திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து NOC தேவைப்படுவதால் விமானங்களை இயக்க முடியவில்லை. BIAL இப்போது சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டுள்ளது. ஓசூர் விமான நிலையத்தை விரைந்து திறக்குமாறு தமிழக அரசு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. 

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ​​நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளித்தார், பெங்களூர் சர்வதேச விமான நிலையம் (BIAL) ஓசூர் விமான நிலையத்திற்கு சில நிபந்தனைகளின் கீழ் அனுமதி வழங்க ஒப்புக்கொண்டது, இது ஓசூர் விமான நிலைய அதிகாரிகளால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள  பெலகொண்டபள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஓசூர் விமான நிலையம், புனேவைச் சேர்ந்த தனேஜா ஏரோஸ்பேஸ் அண்ட் ஏவியேஷன் லிமிடெட் (TAAL) மூலம் பராமரிக்கப்பட்டு, பிராந்திய இணைப்புத் திட்டமான உதானில் சேர்க்கப்பட்டுள்ளது. டர்போ ஏவியேஷனுக்கு உதானுக்கான வழித்தடங்களின் முதல் கட்ட ஒதுக்கீட்டின் கீழ் சென்னை-ஓசூர்-சென்னை பாதை வழங்கப்பட்டது. விமான நிலையம் தெற்கு பெங்களூருவில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும், ஏனெனில் இது சாலை வழியாக இரண்டு மணிநேரம் தொலைவில் உள்ள பெங்களூரு பன்னாட்டு விமான நிலையத்தை விட  ஓசூர் விமான நிலையம் மின்னணு நகரத்திற்கு அருகில் உள்ளது.


வேலூர் ,அரக்கோணம்,தஞ்சாவூர் விமான நிலையங்கள் ஒரு பார்வை:

நாம் ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள சென்னை ,மதுரை ,திருச்சி ,கோவை சேலம், தூத்துக்குடி போன்ற விமான நிலையங்களை பற்றி பார்த்து விட்டோம். அதன் பிறகும் இன்னும் 10 விமான நிலையங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக கூறினேன், உங்களுக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்.  ஓசூர் விமான நிலையம் பற்றியும் பார்த்துவிட்டோம். தமிழ்நாட்டில் மேலும் சுமார் 10 விமான நிலையங்கள் உள்ளன அவற்றில் வேலூரில் இருந்து மட்டுமே வாடகை விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

 தஞ்சை போன்ற ஒரு சில வானூர்தி நிலையங்கள் விமானப்படை விமான நிலையங்கள். சில விமான நிலையங்கள் இதுவரை பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. இவை அனைத்தும் இந்திய அரசின் உதான் திட்டம், அதாவது பிராந்திய இணைப்பு சேவைத் திட்டம் என்று தமிழில் மொழிபெயர்க்கலாம். அந்த திட்டத்தின் கீழ் உள்ள அட்டவணையில் வருகின்றன  அந்த விமான நிலையங்கள் முறையே வேலூர், நெய்வேலி, உச்சிப்புளி(ராமநாதபுரம் மாவட்டம்) சூலூர்(கோயம்புத்தூர் மாவட்டம்) உளுந்தூர்பேட்டை- விழுப்புரம், கயத்தாறு- திருநெல்வேலி ,செட்டிநாடு- சிவகங்கை மாவட்டம், அரக்கோணம்- ராணிப்பேட்டை மாவட்டம் ,தாம்பரம்- சென்னை மாவட்டம் சோழவரம்- சென்னை மாவட்டம் ஆகிய 10 விமான நிலையங்கள்.

அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் 16 விமான நிலையங்கள் உள்ளன. அவற்றில் பயணிகள் போக்குவரத்து மற்றும் விமானப்படையால் இயக்கப்படும் விமானங்கள் விமான நிலையங்கள் ஆக மதுரை, கோவை, திருச்சி ,சேலம் ,தூத்துக்குடி ,வேலூர், தஞ்சை ,ராமநாதபுரம் -உச்சிப்புளி,  சூலூர்- மாவட்டம் ,அரக்கோணம்- ராணிப்பேட்டை மாவட்டம், தாம்பரம்- செங்கல்பட்டு மாவட்டம் ஆகிய வானூர்தி நிலையங்கள் உள்ளன .சோழவரம், கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, நெய்வேலி, செட்டிநாடு போன்றவை விமான சேவை இன்றி மற்றும் சில விமான நிலையங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன.

வேலூர் வானூர்தி நிலையம்

 

வேலூர் வானூர்தி விமான நிலையமானது தமிழ்நாட்டின் ஏழாவது அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாகும் .வேலூரில் இருந்து விமானங்களை இயக்கப்படுவது இல்லை என நீங்கள் நினைக்கலாம் .ஆனால் பயணிகள் விமானம் இயக்கப்படுவது இல்லை என்றாலும், வாடகை விமானங்கள் இயக்கப்படுகின்றன, வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றிற்கு அவசர நேரத்தில் வரும் நோயாளிகள் மற்றும் தனியார் வாடகை வானூர்திகள் இயக்கப்படுகின்றன வழக்கமான பயணிகள் விமான சேவைகள் இயக்கப்படுவதில்லை. அதனால் நிறைய பேர் வேலூர் ஆனது பயணிகள் சேவையில்லா விமான நிலையம் என்று நினைத்திருக்கிறார்கள். 

 

மேலும் வேலூர் விமான நிலையத்தில் விமான ஓடுதளம் ஆனது மிகச்சிறியது. எனவே 19 பேர் வரை செல்லும் விமானங்கள் மட்டுமே இயக்க முடியும் .மேலும் இரவில் விமானங்கள் தரையிறக்கும் வசதியும் கிடைக்காது என்று கிடையாது என்று நினைக்கிறேன். எனவே இரவு நேர சேவைகளை வழங்குவதிலும் பிரச்சினைகள் உள்ளன. இதே பிரச்சினை சேலம் விமான நிலையத்திலும் உள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்திலும் உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது இரவு நேர சேவைக்கான ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன, என்றாலும் விரிவாக்க பணிகளுக்காக அவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.

 

மதுரை மாநகரத்தில் உள்ள வானூர்தி நிலையத்தில் கூட இரவு நேரத்து ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்தாலும் இரவு 12 மணிக்கு பிறகு வானூர்தி    சேவைகள் இயக்கப்படுவதில்லை. 24 மணி நேரம் விமான சேவை இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், இதுவரை இயக்கப்படவில்லை. காரணம் கேட்டால் ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்கிறார்கள். செக்யூரிட்டி/ காவலர்கள் மற்றும் வேறு பணிக்கான ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்கிறார்கள். உலகம் முழுவதும் குறிப்பாக மத்திய கிழக்கு, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு மனித வளத்தை அனுப்பி வைக்கும் இந்தியாவில் ஆட்கள் பற்றாக்குறை என்று சொல்லி விமான நிலையங்களின் வளர்ச்சிகளை தடுக்கிறார்கள். இதனால் மக்களின் வேலைவாய்ப்பு ,அந்த நகரின் வளர்ச்சி வானூர்தி நிலையங்களை நம்பி ஏற்படும் தொழில் வளர்ச்சி ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மத்திய உள்துறை அமைச்சகம் , வானூர்தி போக்குவரத்து போக்குவரத்துத் துறை அமைச்சகம் ,பிரதமர் போன்றோர் இணைந்து இந்தியாவின் பொருளாதாரத்தை  உண்மையிலே  உயர்த்த வேண்டும் எனில் இதுபோன்ற சிக்கல்களை கடந்து வளர்ச்சிப் பாதையில் நாட்டை கொண்டு செல்ல வேண்டும். 

 

வேலூர் வானூர்தி நிலையத்திலிருந்து  19 பேர் கொண்ட விமான சேவைகளை  சென்னை, கோவை ,மதுரை, திருச்சி சேலம், தூத்துக்குடி போன்றவற்றிற்கும் இயக்கலாம். குறிப்பாக கோவையிலிருந்து பகலில் மூன்று விமான சேவைகளை வேலூருக்கு, அதன் பின்னர் இரவு நேர விமான சேவையை வேலூருக்கு  இயக்க முடியாது என்பதால், இரவுநேர இரண்டு விமான சேவையை மதுரைக்கும் இயக்கலாம். அதேபோல் திருச்சியிலிருந்து மூன்று விமான சேவைகளை வேலூருக்கு ,இரவு நேர விமான சேவையை இரண்டு சேவைகள் கோயம்புத்தூருக்கு இயக்கலாம். இப்படிக்கு திருச்சி ,மதுரை, கோவை போன்ற வானூர்தி நிலையங்களில் இருந்து இருந்து 19 பேர் கொண்ட பயணிகள் வானூர்தியை காலை வேளைகளில் மூன்று விமான சேவைகள், மேலும் இரவு நேரங்களில் இரண்டு  வானூர்தி சேவைகள் இந்த நகரங்களுக்கு உள்ளாகவும், அல்லது அருகிலுள்ள பெங்களூரு கொச்சி போன்ற மாநிலங்களுக்கும் இயக்கினால் நன்றாக இருக்கும். அப்படி நடைபெறும் போது விரைவில் பயணிகள் போக்குவரத்து அதிகரிதது வேலூர் வானூர்தி நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு, வேலூர் மற்றும் அதனை அருகில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமல்லாமல் ,ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி வேலைவாய்ப்புக்கு வழிவகுக்கும்.

 

அரக்கோணம் வானூர்தி நிலயம்:

 

அரக்கோணம் வானூர்தி நிலையம் ஆனது சென்னைக்கு மிக அருகில் உள்ள வானூர்தி நிலையம். தற்போது அரக்கோணம் தாலுகா சென்னை மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது .சென்னை பெருநகராட்சி உடன் இணைக்கப்பட்ட  அரக்கோணம்  தற்போது சென்னை நகர எல்லைக்குள் வருகிறது.


மேலும் ஒரு விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூரில் அமைக்க திட்டமிட்டார்கள, அவர்கள் பத்து பதினைந்து ஆண்டுகளாக இழுத்தடித்தது ஸ்ரீபெரும்புதூர் போன்ற பகுதிகள் வளர்ச்சி அடைந்து நிலத்தின் விலையும் அதிகரித்து இடம் வாங்குவதற்கு கூட முடியாத அளவுக்கு போய்விட்டது. அவர்கள் காஞ்சிபுரத்தில் பின்னர் வானூர்தி    நிலையம் அமைக்க திட்டம் போட்டார்கள். தற்போது அங்கேயும் நிலம் விலை கூடிவிட்டது ,அது மட்டுமல்ல அது சென்னையிலிருந்து வெகுதொலைவில் வேறு இருக்கிறது.எனவே அவர்கள் தற்போது சென்னை விமான நிலையத்தில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வெகு விரைவாக இரண்டாம் வானூர்தி நிலையம் தேவைப்படுவதால் அரக்கோணம் அருகே பரந்தூர் பகுதியை இரண்டாவதுவானூர்தி நிலையத்திற்காக  தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அது நல்லது ஏற்கனவே அரக்கோணத்தில் விமான நிலையம் இருக்கிறது. 

 

2015 சென்னை வெள்ளப்பெருக்கின் போது கூட அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விமான சேவை இயக்கினார்கள். அரக்கோணம் கடற்படை விமான தளமாக இருந்தாலும் அதிலிருந்து விமான சேவைகளை இயக்க முடியும். ஏற்கனவே பெங்களூர்  எலங்கா விமானப்படை விமான தளமாக இருந்தபோதிலும் அதிலிருந்து பன்னாட்டு வானூர்தி சேவைகள் வரை இயக்கப்பட்டன. அதேபோன்று கோவா தற்போது வரை இந்திய கடற்படைக்கு சொந்தமான விமான நிலையமாக இருந்த போதும் அதிலிருந்து பன்னாட்டு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன .அந்த வகையில் அரக்கோணத்தில் விமான சேவைகள் என்பதில் பிரச்சனை ஒன்று இருக்காது. அரக்கோணம் விமான ஓடுதளம் மிகப்பெரியதாக இருப்பதால் இந்தியாவிலே பெரிய ஓடு தளங்களில் ஒன்றாக இருப்பதால் இது பெரிய ரக விமானங்களை இயக்க முடியும். மேலும் சென்னைக்கு அருகில் இருப்பதால் சென்னைக்கான இரண்டாம் விமான நிலையமாகவும் அதே போல் வேலூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கான விமான நிலையமாகவும் இருக்கும். அரக்கோணம் விமான நிலையம் பற்றி பார்த்தோம் அதற்கு முன் சென்னை விமான நிலையம் தன்னுடைய முழு பயணிகள் கொள்ளளவை எட்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள் அது எவ்வாறு என்று பார்ப்போம்.

 

சென்னை விமான நிலையம் முழு பயணிகள் கொள்ளளவை எட்டி விட்டதா?

 

சென்னை வானூர்தி நிலையம் ஆனது கொரானாவுக்கு முந்தைய காலம் வரை இரண்டரை கோடி முதல் 3 கோடி வரை விமான பயணிகளை கையாண்டு வந்தது. நிறைய நாட்களாக இவர்கள் சென்னை விமான நிலையம் முழு பயணிகள் கொள்ளளவை எட்டி விடும் என்று சொல்கிறார்கள் ,2021 என்றும் சொல்கிறார்கள். ஆனால் மும்பையில் உள்ளது போல் சென்னையிலும் இரண்டு ஓடு தளங்கள் உள்ளன. மும்பையில் இரண்டு தளங்கள் இருந்தாலும் அவை இரண்டும் குறுக்கும் நெடுக்குமாக ஒன்றையொன்று சந்திக்கும் வகையில் வருவதால் ஒரே ஒரு தளமாக கூறுகிறார்கள். இந்த ஓடுதளத்தில் ஒரு நாளைக்கு 770 மேல் விமானங்களில் ஏற்றி, இறக்குகிறார்கள் .மும்பை விமான நிலையத்தின் மொத்த பயணிகள் கையாளும் திறன சுமார் நான்கரை கோடி முதல் 5 கோடி . அப்படிப்பார்த்தால் சென்னையிலும் நான்கரை கோடி முதல் 5 கோடி வரை விமான பயணிகளை கையாள முடியம் ஆனால் இவர்கள் இப்போதே சென்னை விமான நிலையமானது முழு பயணிகள் கையாளும் திறனை எட்டி விட்டதாக கூறுகிறார்கள் . சென்னை விமான நிலையத்தில் செல்பவர்களே நெருக்கடியையும் கண்டிருப்பீர்கள்,  விமான நிலைய பயணிகள் முனைய கட்டிடம் புதிதாக கட்ட வேண்டும் ,அது தான் இதற்கு காரணம் .மும்பை விமான நிலையமானது 5 கோடியே 60 லட்சம் பயணிகளை கையாளும் விமான பயணிகள் முனையங்கள் கொண்டதாக உள்ளது.


சென்னை அந்த அளவுக்கு இல்லை, சென்னை விமான ஓடுதளம் ஆனது சுமார் 5 கோடிக்கு மேல் பயணிகள் கையாள்வதற்கு ஏற்றது. ஆனால் பயணிகள் முன்னைய கட்டிடங்கள் அந்த அளவுக்கு இல்லை. அதை இந்த விமான நிலையத்திலேயே கட்டலாம், இந்த விமான நிலையத்தில் பயணிகள் முனையம் கட்டுவதற்கான இடமில்லாததால் அப்படிக் கூறுகிறார்களோ? என்னவோ?  தெரியவில்லை. அப்படி பார்த்தால் இந்த வானூர்தி நிலையத்தை இன்னுமொரு 5-6 ஆண்டுகளுக்கு ஓட்டலாம். அரக்கோணம் வானூர்தி  நிலையத்தில் ஏற்கனவே ஓடுதளம் போன்ற வசதிகள் சிறப்பாக உள்ளன. அதில் விமானங்களை இயக்க வேண்டும் என்றால் உடனடியாக குறைந்த அளவில் இயக்கலாம், போகப்போக பயணிகள் முனையம் விமானப் போக்குவரத்துக்கு துணைபுரியும் கருவிகள் போன்றவற்றை நிறுவி,  ஐந்து ஆண்டுகளில் சென்னை அளவுக்கு முழு திறனுடன் இயங்கும் விமான நிலயம் ஆக மாற்றலாம். மேலும் அரக்கோணம் விமான நிலையம்  அதன் அமைவிடம் காரணமாக முக்கியத்துவம் பெறுகிறது. 


தமிழ்நாட்டின் பிற  கோயம்புத்தூர் ,மதுரை, திருச்சி ,சேலம், தஞ்சாவூர் மற்றும் கேரளாவில் திருவனந்தபுரம் ,கொச்சி ,கோழிக்கோடு போன்றவற்றிலிருந்து அரக்கோணம் வழியாக மும்பை,டெல்லி, கொல்கத்தா போன்ற சேவைகளை இயக்க முடியும் .மேலும் வேலூர் மாவட்டத்தினர் நிறைய பேர் சிங்கப்பூர், மத்திய கிழக்கில் பணிபுரிகிறார்கள். இதனால் சர்வதேச விமானங்களையும் இயக்க முடியும். அதுமட்டுமல்ல சென்னை போல் அரக்கோணத்தில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்கி விட்டு தமிழ்நாட்டின் மற்ற மாநிலங்கள் மற்றும் கேரள மாநிலங்களுக்கு இணைப்பு வானூர்திகளை தொடங்கினால், மும்பை சென்னை போல் அரக்கோணம் பெரிய விமான நிலையமாக மாறும்.

 

தஞ்சாவூர் வானூர்தி நிலையம்

 

 தஞ்சாவூர் வானூர்தி நிலையம் ஆனது ஏற்கனவே சென்னை, கொழும்பு போன்ற இடங்களுக்கு வானூர்தி சேவையை வழங்கியுள்ளது, பின்பு நிறுத்தப்பட்டுள்ளது. பின்பு அருகிலேயே திருச்சி விமான நிலையத்தின் எழுச்சியானது தஞ்சாவூரை பல ஆண்டுகளுக்கு செயல்படாமல் வைத்துள்ளது .தற்போது பிரதமரின் உடான் திட்டத்தின் கீழ் தஞ்சாவூரைச் செயல்பட வைக்க திட்டம் தீட்டுகிறார்கள். திருச்சிக்கு அருகில் சுமார் ஐம்பது அறுபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் ,தஞ்சாவூரில் இருந்து நாகப்பட்டினம் ,திருவாரூர் போன்ற மாவட்டங்கள் அருகில் உள்ளன.


மேலும் திருச்சி விமான ஓடுதளம் அது  குறுகியது என்பதால் வெளிநாடுகளுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வந்தாலும் எமிரேட்ஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ,மலேசியன் ஏர்லைன்ஸ் போன்ற சேவைகளை வழங்க முடியவில்லை .அதற்கு காரணம் அவை பெரிய விமானங்களை கொண்டிருப்பதுதான் .தஞ்சாவூர் வானூர்தி நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தால்,  பன்னாட்டு வானூர்தி சேவைகளுக்கும் பயன்படுத்தலாம் .தஞ்சாவூர் விமானப்படை விமான தளம் என்பதால் இரவு நேர தரையிறங்கும் வசதி இருக்கும் என்றே நினைக்கிறேன். அப்படி இல்லாவிட்டால்  இரவு நேர தரையிறங்கும் வசதிகளை அமைக்க வேண்டும் .தஞ்சாவூர் வானூர்தி நிலையம் ஆனது தற்போது இலங்கையை கண்காணிக்க மத்திய அரசு தரம் உயர்த்தி வருவதாக கூறுகிறார்கள் . இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரித்து வருவதால் தஞ்சாவூருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் கூறுகிறார்கள். எனவே இரவு நேர தரையிறங்கும் வசதிகளை செய்ய வேண்டியது அவசியம். தஞ்சாவூரிலிருந்து பெரிய விமானங்களை சர்வதேச விமான சேவைக்கு பயன்படுத்த முடியும். 


திருச்சி விமான நிலையத்தில் தற்போது பயணிகள் முனையம் விரிவாக்க பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. ஓடுதள விரிவாக்க பணிகள் நடைபெறவில்லை. எனவே பெரிய ஓடுதளம் கொண்ட தஞ்சாவூரை திருச்சிக்கு மாற்றாக பெரிய விமானங்களை இயக்குவதற்கு தற்போது பயன்படுத்தலாம். மேலும் திருச்சியில் இருந்து சிங்கப்பூர் மலேசியா போன்றவற்றிற்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் மேலும் வளர்ச்சியடையும் போது திருச்சியில் விரிவாக்கத்தை உடனடியாக செய்வதை விடுத்து, தஞ்சையில் விமானங்களை இயக்கி பின்னர் இரண்டு விமானங்களும் முழு கொள்ளளவை எட்டும் போது திருச்சி, தஞ்சையை விரிவாக்கம் செய்யலாம்.

 

 இதன்மூலம் திருச்சி நகர் கூட இரண்டு  வானூர்தி நிலையங்களை கொண்டதாக இருக்கும் .ஏற்கனவே நான் கூறியபடி சென்னையை சுற்றி அரக்கோணம் ,சோழாவரம் ,தாம்பரம் ஆகிய வானூர்தி நிலையங்கள் உள்ளன.  சென்னை தவிர அரக்கோணம், சோழவரம், தாம்பரம்  ஆகிய வானூர்தி நிலையங்களில் இருந்து பயணிகள் விமான சேவை இயக்கப்படுவதில்லை. பயணிகள் விமான சேவை இயக்கினால் சென்னையை சுற்றி நான்கு விமான நிலையங்கள் இருக்கும், லண்டனை சுற்றி ஐந்து வானூர்தி நிலையங்கள் இருப்பதுபோல், சென்னையை சுற்றி நான்கு வானூர்தி நிலையங்கள் இருக்கும். அதேபோல் தஞ்சையிலிருந்து வானூர்தி சேவைகளை இயக்கினால் திருச்சி சுற்றி இரண்டு வானூர்தி நிலையங்கள் இருக்கும். 

 

அதேபோல்  கோவைக்கு அருகில் சூலூர் விமான நிலையம் உள்ளது. அது ராணுவ விமான நிலையம் அங்கிருந்த விமான சேவைகளை இயக்கினால் கோவையை சுற்றியும் இரண்டு வானூர்தி நிலையங்கள் இருக்கும். கோவையிலும் தொடர்ந்து விரிவாக்கப் பணிகளை செய்து வருகிறார்கள் விரிவாக்கப் பணிகள் தாமதம் அடையும்போது சூலூர் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் சேவையை தொடங்கலாம். 


திருச்சியில் இருந்து சிங்கப்பூர் மலேசியாவுக்கு தினசரி 5 முதல் 7 தடவைகள் வரை இயக்கப்படுகின்றன அவற்றை பெரும்பாலும் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து உபயோகப்படுத்துவார்கள்  என்றாலும், குறிப்பாக நாகப்பட்டினம் திருவாரூர் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு திருச்சிக்கு வருவதைவிட தஞ்சாவூர் வருவதது எளிதாக இருக்கும். எனவே தஞ்சாவூர் விமான நிலையத்தை இயக்கத் தொடங்கினார் தஞ்சாவூர் வெற்றிகரமான பன்னாட்டு மாநிலமாக இருப்பதற்கும் வாய்ப்பு அதிகம்.


வேலூர் விமான நிலையம் பற்றிய செய்தி துளிகள்:

1.வேலூர் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக இடிக்க வேண்டிய வீடுகள், வெட்ட வேண்டிய மரங்களை கண்டறிய விரைவில் சிறப்பு குழு வருகை தர உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

 ஏற்கனவே இருந்த 45 ஏக்கர் நிலத்துடன் அருகில் உள்ள தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, மொத்தமாக 96 ஏக்கர் பரப்பளவில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வரவேற்பு அலுவலகம், ரன்வே அமைப்பது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது.

 இதனிடையே விமானங்களில் ஓடுதளம் மற்றும் இறங்கு தளம் அமைய உள்ள பகுதியில் குறிப்பிட்ட தொலைவு வரை வீடுகள், மரங்கள் இடையூறாக இருக்கக்கூடாது என்பது விமான நிலைய கட்டுமான பணிகளில் முக்கிய அங்கமாக உள்ளது.

 அதற்காக சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து வந்த ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா குழுவினர் எந்தெந்த பகுதியில் விமானங்கள் புறப்படும் மற்றும் எந்த பகுதியில் தரையிறங்கும் என்பதை ஆய்வு செய்தனர்.

 

2.வேலூர் விமான நிலையம் இறுதியாக நடப்பு நிதியாண்டு மார்ச் மாதத்திற்குள் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சென்னை விமான நிலைய ஆணையத்தின் (ஏஏஐ) உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 மத்திய அரசின் உதான் ஆர்சிஎஸ் ( Regional Connectivity Scheme) கீழ் உருவாக்கப்பட்ட வசதி - சென்னை -வேலூர் -பெங்களூரு பாதையை இரு திசைகளிலும் இணைக்கும் . இணைப்பு வசதி ஒரு வருடத்திற்கும் மேலாக பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தொற்றுநோயால் தாமதமானது .

 சிவில் ஏவியேஷன் இயக்குநர் ஜெனரல் (டிஜிசிஏ) தேவையான அனுமதியை வழங்கியவுடன் நிதி ஆண்டின் இறுதிக்குள் செயல்பாடுகளைத் தொடங்குவோம் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று ஏஏஐ சென்னையைச் சேர்ந்த மண்டல நிர்வாக இயக்குனர் ஆர் மாதவன் கூறினார்.

 

அரக்கோணம் வானூர்தி நிலையம் பற்றிய செய்தி துளிகள்

 சென்னை நகரத்துக்கான இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை  வேகமானது, இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகளை உள்ளடக்கிய குழு நகரத்தின் இரண்டு தளங்களை ஆய்வு செய்தது . காஞ்சீபுரம் மற்றும் அரக்கோணம் இடையே பரந்தூர், மற்றும் மாமண்டூர் மற்றும் செய்யூர் இடையே மற்றொரு இடம்.

 இந்த திட்டத்திற்காக சுமார் 3,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதாக மாநில அரசு உறுதியளித்துள்ளது. "மாநில அரசு விமான நிலையம்  சென்னையின் தெற்கே வெகு தொலைவில் இல்லாத ஒரு தளத்தை விரும்புகிறது.

 மற்றொரு விமான நிலையத்திற்கு அருகாமையில் இருப்பது புதிய வானூர்தி நிலையத்திற்கு தடையாக இருக்காது, என்று அதிகாரி வட்டாரங்கள் தெரிவித்தன. பெருநகரங்களில் இரண்டாவது விமான நிலையம் என்ற கருத்து வெளிவந்த பிறகு, இரண்டு விமான நிலையங்களுக்கிடையேயான தூரத்தை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தள்ளுபடி செய்துள்ளது. நவி மும்பை விமான நிலையம் மும்பை விமான நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது.

 தஞ்சாவூர் விமான நிலையம் பற்றிய செய்தி துளிகள்:

 சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வேலூரை இணைக்க ஒரு பிராந்திய இணைப்பு திட்டத்தை முன்வைத்தாலும், இண்டிகோ அல்லது ஸ்பைஸ்ஜெட் போன்ற குறைந்த விலை  நிறுவனங்கள் ஆர்வம் காட்டினால் மட்டுமே முடியும் என்று அந்த அதிகாரி கூறினார்.

 பிராந்திய இணைப்புத் திட்டமான உதானின் ஒரு பகுதியாக இந்த ஆண்டு நெய்வேலி, வேலூர், ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூரில் விமான நிலையங்கள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் புதன்கிழமை ராஜ்ய சபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

 சேலம் விமான நிலையத்திற்கு ரூ. 35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர், நெய்வேலி மற்றும் தஞ்சாவூரிலும் பணிகள் நடந்து வருகின்றன. திமுகவின் வில்சனின் கேள்விக்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, விமான நிலையங்களை உருவாக்க மத்திய அரசு பணம் வழங்கியதாக கூறினார்

 பிராந்திய இணைப்புத் திட்டமான உதானின் கீழ் பல்வேறு சுற்று ஏலங்களின் கீழ் ஐந்து விமான நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது.

 சேலத்திற்கு ரூ .35 கோடி, நெய்வேலிக்கு ரூ .30 கோடி, வேலூருக்கு ரூ .44 கோடி, ராமநாதபுரத்திற்கு ரூ .36.72 கோடி, தஞ்சாவூருக்கு ரூ .50.59 கோடி ஏற்கெனவே அரசு அனுமதித்துள்ளது. இந்த விமான நிலையங்களில், சேலத்தில் சென்னையிலிருந்து விமானங்கள் உள்ளன .

நெய்வேலி புதுச்சேரிக்கு அருகில் உள்ளது. இருப்பினும், நெய்வேலி மற்றும் வேலூர், தஞ்சாவூர் மற்றும் ராம்நாதபுரம் ஆகிய இடங்களில் வேலைகளைத்  தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தயாராக உள்ளன. 

உச்சிப்புளி( ராமநாதபுரம் ) வானூர்தி நிலையம் ஒரு பார்வை.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் அமைந்துள்ள கடற்படைக்கு சொந்தமான விமான  தளமானது மத்திய அரசின் உதான்(RCS) திட்டத்தின் கீழ் செயல்பட வைக்க பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, மற்றும் தற்போது கொரானாவால் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது. கொரானாவுக்கு பிறகு அவர்கள் உதான் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு விமான நிலையம் கிடைக்க வாய்ப்புள்ளது,இது கடற்படை விமான தளம் ஆகும். இதன் பெயர் ஐஎன்எஸ் பருந்து ,ராமேசுவரத்துக்கு விமானம் மூலம் யாத்திரை, சுற்றுலா வருபவர்கள் விமானத்தில் மதுரை வரை வந்து, பின்னர் 170 கி.மீ தொலைவை 4 மணி நேரம் கார் அல்லது இதர வாகனங்களில் பயணம் செய்து வரவேண்டியுள்ளது.. எனவே ராமநாதபுரத்தில் விமான நிலையம் வந்தால் ராமநாதபுரம் மக்கள் மிகுந்த பயனடவார்கள் ,அருகிலுள்ள சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்ட மக்கள் கூட பயனடையலாம் .

உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து விமானதளம் ராமேசுவரத் திலிருந்து 35 கி.மீ தொலைவிலும்,ராமநாதபுரத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தற்போது உள்ள நிலையில் ஓடுதளம் மிக சிறியதாக இருப்பதால் 19 பேர் கொண்ட விமானங்களை மட்டுமே இயக்க முடியும் .அதை விரிவாக்கம் செய்தால் பெரிய விமானங்களை இயக்கலாம் .19 பேர் கொண்ட விமானங்கள் இப்பொழுது எந்த விமான நிறுவனங்கள்  இயக்குகிறார்கள் என்றுதெரியவில்லை. ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் இயக்க திட்டம் வைத்து இருந்தார்கள். அப்படி பார்த்தால் ராமநாதபுரத்திலிருந்து  சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு விமானம் இயக்க முடியும். மேலும் உச்சிப்புளி விமான நிலையத்தில் இரவு நேரத்தில்  தரையிறங்கும் வசதிகள் இருக்காது என்று நினைக்கிறேன் ,அதுவும் ஒரு பின்னடைவு அப்படி பார்த்தால் பகல் நேரங்களில் மட்டுமே விமானங்கள்  இயக்க முடியும், போன்ற தடைகள் உள்ளன.

 

எனவே இராமநாதபுர மாவட்டத்தை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து குறைந்தது 70 பேர் பயணம் செய்யும்  விமானங்கள் தரை இறங்கும் வசதி கொண்டதாக  மாற்றினால் மட்டுமே, அங்கிருந்து விமான சேவைகளை இயக்குவது சாத்தியமாகும். அப்படி 70 பேர் கொண்ட விமானங்களை தரையிறக்க செய்தால் சென்னை ,பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விமானங்களை இயக்க முடியும் .ராமநாதபுரம் கோயில் நகரமாக இருப்பதால் நிறைய பயணிகளை கவர முடியும் .ராமநாதபுரம் விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக என்னென்ன செயல்கள் திட்டங்கள் உள்ளன மத்திய மாநில அரசுகளின் அறிக்கைகளை பார்ப்போம்.

 

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க ரூ.36.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங் களவையில் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

 

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி   எழுத்துப்பூர்வமாக அளித்த விவரம் வருமாறு:

உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தஞ்சை, வேலூர், நெய்வேலி ஆகிய நான்கு இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ராமநா தபுரம் விமான நிலையத்துக்கு ரூ.36.72 கோடியும், தஞ்சை விமான நிலையம் அமைக்க ரூ.50.59 கோடியும், வேலூர் விமான நிலையத்துக்கு ரூ.44 கோடியும், நெய்வேலி விமான நிலையத்திற்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

காரைக்குடி வானூர்தி நிலையம்:

காரைக்குடி வானூர்தி நிலையமான இரண்டாம் உலகப்போர் காலத்தில் ராணுவ பயன்பாட்டிற்காக துவங்கப்பட்ட விமான நிலையங்களில் ஒன்றாகும் .தற்போது அது மத்திய அரசின் உதான்(RCS) திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது .மேலும் செட்டிநாடு நிறுவனத்தினர் காரைக்குடியில் ஒரு நிலையம் அமைய தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள். செட்டிநாடு சிமெண்ட் நிர்வாகத்தினர் ஒரு கிரிக்கெட் மைதானத்தை அங்கே கட்ட திட்டம் வைத்திருக்கிறார்கள் இது  காரைக்குடி நகரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. 


மேலும் காரைக்குடியை வானூர்தி நிலையம் பற்றிய ஒரு நகைச்சுவையான, சுவையான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும்போது காரைக்குடி விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவார். இதன்மூலம் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு சிதம்பரம் எதுவும் செய்யவில்லை நாங்கள்தான் செய்தோம் என்று பிஜேபி காரர்கள் மார்தட்டியதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் காரைக்குடி விமான நிலையத்திற்கான எந்த அறிவிப்போ ,அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்லோடு அப்படியே நின்று போய்விட்டது.  காரைக்குடி நகர வளர்ச்சி குழுவை சார்ந்தவர்கள் காரைக்குடியில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒரு  கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். அவர்கள் மதுரையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் காரைக்குடி உள்ளதால் காரைக்குடி விமான நிலையம் கொண்டு வர முடியாது என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்கு இவர்கள் பதிலடியாக மதுரையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் விருதுநகரில் புதிய விமான நிலையம் வர இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். பெரிதும்  ஆச்சர்யமாக இதுவரை விருதுநகர் விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கான கோரிக்கையை வைத்திருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. காரைக்குடி மதுரையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, காரைக்குடிக்கு பயன் அளிப்பதாகவே உள்ளது. தற்போதைய நிலையில் இந்த 100 கிலோ மீட்டர் தொலைவு போன்றவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை.  ஒரே நகர்களில் கூட இரண்டு விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து காரைக்குடியில் 70 பேர் வரை செல்லும் விமானங்கள் தரையிறங்கும் வகையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது காரைக்குடியின் வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு