ஒரு லட்சம் கோடி உள்நாட்டு உற்பத்தி தமிழ்நாட்டில் முடியுமா? தொடர்ச்சி-1
தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு லட்சம் கோடி ரூபாய் உயர்த்த முடியுமா? என்று கட்டுரையை துவங்கி 5 லட்சம் கோடி ரூபாய் உயர்த்துவதற்கு என்ன வழி இருக்கிறது என்றெல்லாம் பார்த்தோம். இப்போது மீண்டும் ஒரு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு எப்படி கொண்டு வருவது என்று பார்ப்போம். ஏற்கனவே குறிப்பிட்டபடி துறைமுகங்கள் ,தகவல்தொழில்நுட்பம் விமான நிலையங்கள் போன்றவற்றை விரிவாக்கம் செய்வதன்மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் எளிதாக அடையலாம் என்று பார்த்தோம். அதேபோல் மாவட்டங்களுக்கு இடையேயான நான்குவழிச் சாலை அமைப்பதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாயை எளிதாக அடைய முடியும். குறிப்பாக தற்போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி ,மதுரை, தூத்துக்குடி போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே தான் நான்கு வழிப்பாதை உள்ளது. இவற்றை திருநெல்வேலி- இராமநாதபுரம், திருநெல்வேலி -தென்காசி என மற்ற நகரங்களுக்கு இடையே நான்கு வழிச் சாலை அமைப்பதன் மூலம் வாஜ்பாய் அமைத்த நான்கு வழிச்சாலைகளின் மூலம் இந்தியா வளர்ச்சியடைந்து போன்று தமிழ் நாட்டின் வளர்ச்சியை விரிவுபடுத்த முடியும். இதன் மூலம் எளிதாக ஒரு லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தை எட்டமுடியும். தற்போது 300 பில்லியன் டாலர்களாக இருக்கும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது எப்படியும் ஏழு ஆண்டுகளில் 600 பில்லியன் டாலர்கள் ஆகிவிடும் .அதன்பின்னர் இருப்பது இரண்டு ஆண்டுகள் இரண்டு ஆண்டுகளில் 400 பில்லியன்கள் முடியாத காரியம். அதற்கான வழிவகைகளை இப்போதே செய்ய வேண்டும். தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது தற்போது 8 முதல் 10 சதவிகிதம் வரை .இந்த பொருளாதார வளர்ச்சியை 12 முதல் 14 சதவீதமாக இப்போதே மாற்றியமைத்தால் அடுத்த ஒன்பது ஆண்டுகளில் அதாவது 2030ஆம் ஆண்டுக்குள் எளிதாக ஒரு லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டிப் பிடிக்கலாம். அதற்கு சாலைகள் ,விமான நிலையங்கள் துறைமுகங்கள் தகவல் தொழில்நுட்ப உற்பத்தி போன்றவற்றை அதிகப்படுத்துவது மிக மிக அவசியம் .எப்படியும் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரமானது சுமார் 750 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும். ஆனால் அவர்கள் ஆயிரம் பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது ஒரு லட்சம் கோடியாக மாற்றுவதற்கு திட்டம் வைத்திருக்கிறார்கள். 9 ஆண்டுகளில் இது சிறிய முன்னேற்றம் தான் என்றாலும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் .அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை மூன்று லட்சம் கோடியாக மாற்றுவதற்கு திட்டம் வைத்திருந்தாள் மிகவும் பெரிய வாழ்த்துக்களை தெரிவித்து இருப்பேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக