உச்சிப்புளி( ராமநாதபுரம் ) வானூர்தி நிலையம் ஒரு பார்வை.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் அமைந்துள்ள கடற்படைக்கு சொந்தமான விமான தளமானது மத்திய அரசின் உதான்(RCS) திட்டத்தின் கீழ் செயல்பட வைக்க பட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, மற்றும் தற்போது கொரானாவால் கிட்டத்தட்ட முடங்கியுள்ளது. கொரானாவுக்கு பிறகு அவர்கள் உதான் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு விமான நிலையம் கிடைக்க வாய்ப்புள்ளது,இது கடற்படை விமான தளம் ஆகும். இதன் பெயர் ஐஎன்எஸ் பருந்து ,ராமேசுவரத்துக்கு விமானம் மூலம் யாத்திரை, சுற்றுலா வருபவர்கள் விமானத்தில் மதுரை வரை வந்து, பின்னர் 170 கி.மீ தொலைவை 4 மணி நேரம் கார் அல்லது இதர வாகனங்களில் பயணம் செய்து வரவேண்டியுள்ளது.. எனவே ராமநாதபுரத்தில் விமான நிலையம் வந்தால் ராமநாதபுரம் மக்கள் மிகுந்த பயனடவார்கள் ,அருகிலுள்ள சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்ட மக்கள் கூட பயனடையலாம் .
உச்சிப்புளி ஐ.என்.எஸ் பருந்து விமானதளம் ராமேசுவரத் திலிருந்து 35 கி.மீ தொலைவிலும்,ராமநாதபுரத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
தற்போது உள்ள நிலையில் ஓடுதளம் மிக சிறியதாக இருப்பதால் 19 பேர் கொண்ட விமானங்களை மட்டுமே இயக்க முடியும் .அதை விரிவாக்கம் செய்தால் பெரிய விமானங்களை இயக்கலாம் .19 பேர் கொண்ட விமானங்கள் இப்பொழுது எந்த விமான நிறுவனங்கள் இயக்குகிறார்கள் என்றுதெரியவில்லை. ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் இயக்க திட்டம் வைத்து இருந்தார்கள். அப்படி பார்த்தால் ராமநாதபுரத்திலிருந்து சென்னை, கோயம்புத்தூர், திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்கு விமானம் இயக்க முடியும். மேலும் உச்சிப்புளி விமான நிலையத்தில் இரவு நேரத்தில் தரையிறங்கும் வசதிகள் இருக்காது என்று நினைக்கிறேன் ,அதுவும் ஒரு பின்னடைவு அப்படி பார்த்தால் பகல் நேரங்களில் மட்டுமே விமானங்கள் இயக்க முடியும், போன்ற தடைகள் உள்ளன.
எனவே இராமநாதபுர மாவட்டத்தை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து குறைந்தது 70 பேர் பயணம் செய்யும் விமானங்கள் தரை இறங்கும் வசதி கொண்டதாக மாற்றினால் மட்டுமே, அங்கிருந்து விமான சேவைகளை இயக்குவது சாத்தியமாகும். அப்படி 70 பேர் கொண்ட விமானங்களை தரையிறக்க செய்தால் சென்னை ,பெங்களூரு போன்ற நகரங்களுக்கு விமானங்களை இயக்க முடியும் .ராமநாதபுரம் கோயில் நகரமாக இருப்பதால் நிறைய பயணிகளை கவர முடியும் .ராமநாதபுரம் விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக என்னென்ன செயல்கள் திட்டங்கள் உள்ளன மத்திய மாநில அரசுகளின் அறிக்கைகளை பார்ப்போம்.
ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க ரூ.36.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங் களவையில் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எழுத்துப்பூர்வமாக அளித்த விவரம் வருமாறு:
உதான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் ராமநாதபுரம், தஞ்சை, வேலூர், நெய்வேலி ஆகிய நான்கு இடங்களில் விமான நிலையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ராமநா தபுரம் விமான நிலையத்துக்கு ரூ.36.72 கோடியும், தஞ்சை விமான நிலையம் அமைக்க ரூ.50.59 கோடியும், வேலூர் விமான நிலையத்துக்கு ரூ.44 கோடியும், நெய்வேலி விமான நிலையத்திற்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு ரூ.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக