வான்தமிழ்நாடு:காரைக்குடி வானூர்தி நிலையம்.
காரைக்குடி வானூர்தி நிலையமான இரண்டாம் உலகப்போர் காலத்தில் ராணுவ பயன்பாட்டிற்காக துவங்கப்பட்ட விமான நிலையங்களில் ஒன்றாகும் .தற்போது அது மத்திய அரசின் உதான்(RCS) திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது .மேலும் செட்டிநாடு நிறுவனத்தினர் காரைக்குடியில் ஒரு நிலையம் அமைய தங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள். செட்டிநாடு சிமெண்ட் நிர்வாகத்தினர் ஒரு கிரிக்கெட் மைதானத்தை அங்கே கட்ட திட்டம் வைத்திருக்கிறார்கள் இது காரைக்குடி நகரின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும் காரைக்குடியை வானூர்தி நிலையம் பற்றிய ஒரு நகைச்சுவையான, சுவையான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும்போது காரைக்குடி விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுவார். இதன்மூலம் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு சிதம்பரம் எதுவும் செய்யவில்லை நாங்கள்தான் செய்தோம் என்று பிஜேபி காரர்கள் மார்தட்டியதாகவும் ஒரு செய்தி வெளியானது. ஆனால் காரைக்குடி விமான நிலையத்திற்கான எந்த அறிவிப்போ ,அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறவல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல்லோடு அப்படியே நின்று போய்விட்டது. காரைக்குடி நகர வளர்ச்சி குழுவை சார்ந்தவர்கள் காரைக்குடியில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை எழுப்பி இருக்கிறார்கள். அவர்கள் மதுரையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் காரைக்குடி உள்ளதால் காரைக்குடி விமான நிலையம் கொண்டு வர முடியாது என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்கு இவர்கள் பதிலடியாக மதுரையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் விருதுநகரில் புதிய விமான நிலையம் வர இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். பெரிதும் ஆச்சர்யமாக இதுவரை விருதுநகர் விமான நிலையத் திட்டம் அறிவிக்கப்படவில்லை. ஆனால் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் அதற்கான கோரிக்கையை வைத்திருப்பதாக செய்திகள் அடிபடுகின்றன. காரைக்குடி மதுரையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது, காரைக்குடிக்கு பயன் அளிப்பதாகவே உள்ளது. தற்போதைய நிலையில் இந்த 100 கிலோ மீட்டர் தொலைவு போன்றவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. ஒரே நகர்களில் கூட இரண்டு விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து காரைக்குடியில் 70 பேர் வரை செல்லும் விமானங்கள் தரையிறங்கும் வகையில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது காரைக்குடியின் வளர்ச்சிக்கும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக