கேள்வி பதில்:தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பெருக என்ன செய்யலாம்?

தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு பெருக வேண்டுமமானால் அரசியல்வாதிகள் பள்ளி கல்லூரிகளில் தாங்கள் சம்பாதித்த அல்லது கொள்ளையடித்த சொத்துகளை முதலீடு செய்வதை தவிர்த்து, தொழிற்சாலைகளில் முதலீடு செய்யலாம், இதன்மூலம் தொழில் வளர்ச்சி பெருகும் வேலைவாய்ப்பின்மை ஒளியும், வேலைவாய்ப்பு பெருகும் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தேவையான அளவுக்கு அதிகமாகவே உள்ளன. கல்விக்கூடங்களை குறிப்பாக பொறியியல் கல்விக் கூடங்களை மூடும் அளவிற்கு சமீப காலங்களில் நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. எனவே அரசியல்வாதிகள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை தொழிற்சாலைகளில் முதலீடு செய்தால், குறிப்பாக BHEL போன்ற கனரக தொழிற்சாலைகள் இல்லாவிட்டாலும் அதற்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம் .மேலும் தற்போது தகவல் தொழில்நுட்பத்துறை முன்னணியில் இருப்பதால் தகவல் தொழில்நுட்ப துறை ,விமான போக்குவரத்து துறை போன்றவற்றில் முதலீடு செய்யலாம் .எஸ்ஆர்எம் கல்வி நிறுவனர் பாரிவேந்தர் அவர்கள் கல்வித் துறையோடு மட்டுமல்லாமல் பேருந்து போக்குவரத்து துறை, நட்சத்திர விடுதிகள் துறை போன்றவற்றிலும் முதலீடு செய்து வருகிறார். அதே போல் இவர்களும் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் முதலீடு செய்தால் கட்டுமானத் துறையில் வேலை வாய்ப்பு பெருகும், விருந்தோம்பல் துறையும் வளர்ச்சி அடையும் நிறையபேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு