கமல் ,சீமான் கட்சிகளின் படுதோல்விக்கு காரணம் :
நடந்து முடிந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்களில் கமல் மற்றும் சீமான் கட்சிகள் படுதோல்வி அடைந்திருக்கிறது. இதை நான் கமல் மற்றும் சீமான் கட்சிகள் என்று சொல்லக் காரணம் அவர்களின் நடவடிக்கையால் தான் அந்த கட்சிகள் தோற்றது .இல்லையெனில் முறையே மக்கள் நீதி மையம், நாம் தமிழர் என்று தான் கூறி இருப்பேன் .எந்த ஒரு கட்சியும் வெற்றி பெறுவதற்கு கூட்டு முயற்சியே காரணம். கமல் மற்றும் சீமான் வேறு யாரையும் பிரச்சாரம் செய்ய விடாமல் தங்களை மட்டுமே முன்னிறுத்தியதால் கிடைத்த தோல்வி இது. கூட்டு முயற்சியுடன் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்திருந்தால் இந்நேரம் அவர்களால் 9 மாவட்டங்களையும் முழுமையாக சென்றடைந்து இருக்கமுடியும் கட்சியும் ஓரளவு வெற்றி பெற்றிருக்கும். சீமான் கட்சியில் அவரைத்தவிர யாரும் பேச கூடாது அப்படி பேசினால் கட்சியை விட்டு நீக்கி விடுவார். கமல் கட்சியில் கூட சர்வாதிகாரமாக தலைவர், பொதுச் செயலாளர் 2 பதவிகளையும் அவரே வைத்திருக்கிறார் .பொதுச்செயலாளர் பதவியை வேறு ஒருவருக்கு கொடுப்பதோடு, கொள்கை பரப்பு செயலாளராக பழ கருப்பையாவை நியமித்திருந்தால் பிக்பாஸில் பிஸியாக இருக்கும் போது தன்னுடைய கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளரை 9 மாவட்டங்களுக்கும் சென்று பரப்புரை செய்யுமாறு கூறி இருக்கலாம் .சிறந்த பரப்புரை பீரங்கி ஆன பழ கருப்பையா இரண்டு திராவிட கட்சிகளையும் கிழித்து தொங்க விட்டிருப்பார் .கமல் கட்சியின் பிரச்சார மக்களிடம் ஓரளவு எடுபட்டு அவர்கள் ஓரளவு இடங்களை பிடித்து இருப்பார்கள் .ஆனால் கமல் மற்றும் சீமானின் தங்களை மட்டுமே முன்னிறுத்தும் பழக்கமானது தோல்வியை கண்டு இருக்கிறது. அண்ணா கூட எம்ஜிஆர், கருணாநிதி, நெடுஞ்செழியன் மற்றும் பலரை ஒருங்கிணைத்து பரப்புரை கூட்டங்களை நடத்தி வெற்றி பெற்றார். அண்ணா தன்னால் மட்டுமே தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மூலை முடுக்கெல்லாம் சென்று கட்சியை வளர்க்க முடியாது என்று நம்பி இருந்தார் அது உண்மையை. எனவே தான் அவர் கூட்டு முயற்சியுடன் எம்ஜிஆர், கருணாநிதி, நெடுஞ்செழியன் மேலும் பல பேச்சாளர்களை பயன்படுத்தி அவர்களை தமிழ்நாடு முழுவதும் அனுப்பி தானும் தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்து கட்சியை வளர்த்தெடுத்து ஆட்சியை பிடித்தார். தமிழக வரலாற்றில் இதுவரை யாரும் அண்ணாவைத் தவிர தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடித்தது இல்லை .விஜயகாந்த் தனிக்கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்காமல் போனதற்கும் இதுவே காரணம். அவரது காட்சிகள் அவர் மட்டுமே பரப்புரை செய்பவராக இருந்தார் .தனிமனிதனால் தமிழ்நாடு முழுவதும் சென்று மக்களை சந்தித்து தங்கள் கருத்துக்களை பகிர்வது மிக மிகக் கடினம் .இதை உணர்ந்து கொண்டு கமல் மற்றும் சீமான் போன்றவர்கள் தங்கள் கட்சி இரண்டாம்கட்ட தலைவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை தமிழ்நாடு முழுவதும் பரப்புரை செய்வதற்கு அனுப்பி அடுத்த தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும். வளர்ந்த கட்சிகளுக்கு வேண்டுமானால் ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்கள் மற்றவர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தாங்கள் மட்டுமே பிரசாரம் செய்து வெற்றிபெறலாம் .அவர்கள் ஆட்சியை பிடித்து விட்டார்கள் ஆனால் புதிய கட்சிகள் கூட்டு முயற்சியுடன் தான் வெல்ல முடியும். திமுகவில் கூட தற்போது ஸ்டாலின் மட்டுமல்லாமல் கனிமொழி உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் கூட கட்சிக்காக பிரச்சாரம் செய்கிறார்கள் .அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மாவட்டங்களில் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சியில் இதுவரை சீமான் தவிர பெரிதாக வேறு தலைவர்களை தெரியவில்லை .அப்படி தெரியா வருபவர்கள் அனைவரும் கட்சியைவிட்டு நீக்கப்படுகிறார்கள். அவரது கட்சியின் அடுத்த கட்ட தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கட்சியை வளர்க்க பாடுபட வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக