விஜயின் அரசியல் வெற்றி போலியானது.

விஜய் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அவரது கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அவர்கள் 169 தொகுதிகளில் போட்டி போட்டு சுமார் 100 தொகுதிகளில் அதாவது  ஊராட்சி ஒன்றியங்களில் என்று நினைக்கிறேன் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  சுமார் 2000 முதல் நான்காயிரம்  வாக்கு உள்ள இடங்களில் போட்டி போட்டு  வெற்றி  பெற்று இருக்கிறார்கள் இருக்கிறார்கள்.மொத்தம் சுமார் 3000 இடங்களுக்கான போட்டியில் அவர்கள் வெறும் 169 இடங்களில் மட்டுமே போட்டி போட்டு இருக்கிறார்கள். அதுவும் கட்சி சின்னம் கொண்ட  இடங்களில் அவர்கள் போட்டி போட வில்லை. அந்த அளவுக்கு துணிவு இல்லை அவர்களுக்கு .போட்டி போட்டு இருந்தால் நாம் தமிழர், மக்கள் நீதி மையத்தை விட குறைவான வாக்குகளை வாங்கி இருப்பார்கள். எனவே அவர்கள் அவர்களுக்கு சாதகமான 169 இடங்களை தேர்ந்தெடுத்து அந்த இடங்களில் 100 வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதில் சுமார் 12 இடங்களில் போட்டி இல்லாமலே வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் எப்படியாவது நல்ல தேர்தல் முடிவை கொடுக்க வேண்டும் என்று உழைத்திருப்பது தெரிகிறது. நாம் தமிழர், மக்கள் நீதி மையம் கூட இந்த மாதிரி குறிப்பிட்ட அளவு தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டி போட்டு இருந்தால், அவர்கள் கூட இதைவிட நல்ல தேர்தல் வெற்றியை பெற்றிருப்பார்கள் .ஆனால் அவர்கள் துணிச்சலுடன் சுமார்  90% மேற்பட்ட இடங்களில் போட்டி போட்டு இருக்கிறார்கள். எப்போதுமே அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறந்தது என்பார்கள், அது கூட விஜய்யின் மக்கள் இயக்கத்திற்கு ஒத்து வராது. காரணம் மூவாயிரம் தொகுதிகளில் குறைந்தது 1500 தொகுதிகளை அவர்கள் தேர்ந்தெடுத்து ,அதில் ஒரு இருநூறு, முன்னூறு தொகுதிகளில் வென்று இருந்தால் அவர்கள் வெற்றி பெற்றதாக  கொள்ளலாம். மிகக்குறைவான 169 தொகுதிகளில் போட்டி போட்டதில் இருந்தே அவர்களுக்கு மற்ற தொகுதிகளில் போட்டி போடுவதற்கான பயம் இருந்தது தெரிய வருகிறது .அதுமட்டுமல்ல மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஏற்கனவே அவர்களின் வாக்கு வங்கியை நிரூபித்து விட்டார்கள். மக்கள் நீதி மையம் மத்திய அரசை எதிர்த்து பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்திற்கு உதிராத போராட்டம் நடத்தும் அளவுக்கு வலிமையாக இருக்கிறார்கள். விஜய் மக்கள் இயக்கத்திற்கு அந்த அளவு துணிவு இருக்கிறதா என்பது தெரியவில்லை. சீமானின் கட்சியினர் இந்த மாதிரி விலை ஏற்றத்தை  எதிர்த்து போட்டியிட தயார் தான். அண்மையில் கன்னியாகுமரியில் கூட கனிமவள கொள்ளை எதிர்த்து அவர்கள் குரல் கொடுத்தார்கள். சீமானை அழைத்திருந்தார்கள் ,அது சிறப்பான செயல்பாடு ஆனால் காங்கிரஸ்காரர்களுடனான தேவையில்லாத மோதலாக மாறியது மற்றும் அதற்கு துரைமுருகன் எதிர்வினை ஆற்றியது துரைமுருகன் கைதில் முடிந்திருக்கிறது. நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சிறப்பான முறையில் போராட்டத்தை நடத்த தயாராக இருந்தாலும், சீமான் வெட்டி விவாதங்களில் ஈடுபட்டு இருப்பதால், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கியில் ஓட்டை விழும் என்பதே தற்போதைய நிலைமை .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் நாடு தகவல் தொழில்நுட்ப நகர்களின் வகைப்படுத்துதல்.

தமிழக அமைச்சரவை ஒரு பார்வை தொடர்ச்சி-4,தகவல் தொழில்நுட்ப த்துறை.

வான் தமிழ்நாடு